மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

குருவை அதிபதியாக கொண்ட மீன லக்னகாரர்கள் அன்பும், கனிவும் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு காதல் கொள்வார்கள். இவர்கள் துடுக்குத்தனம் மிக்கவர்கள். இவர்கள் துருதுருவென்று எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் சிற்றின்ப பிரியர்கள். திடீர் திடீரென்று சோர்வுறுவார்கள். இவர்களுக்கு வாழ்க்கையின் மத்திய பகுதியில் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். குடும்பத்தை விட்டு சில காலம் பிரிந்து இருக்க வேண்டிய சுழல் ஏற்படும். இவர்கள் சற்று குண்டான உடலமைப்பை கொண்டிருப்பார்கள்.

இவர்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள். மற்றவர்கள் இவர்களை புகழ்ந்து பேசினால் போதும் அவர்களுக்கு தேவையானதை இவர்களே செய்து கொடுப்பார்கள். மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு இருக்க வேண்டும் என நினைப்பார்கள். எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் விரைவில் முடித்து விடும் திறமை கொண்டவர்கள். ஆனால் அதற்கு சரியான அங்கீகாரம் இல்லையென்றால் உடனே கோபப்படுவார்கள். ஒரே மாதிரியான வேலை செய்வது இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் கற்பனைத் திறனை வளர்க்கும் விதமாக ஏதேனும் புதுமை, வேலையில் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்.

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கடவுள் பக்தி அதிகம் இருக்கும். விருந்தோம்பலில் சிறந்தவர்கள். இவர்கள் சரளமாக பேசும் திறன் படைத்தவர்கள். எதையாவது பேசி கொண்டே இருப்பார்கள். இவர்கள் வரவுக்கு மீறிய செலவுகள் செய்வார்கள். மற்றவர்கள் மனதையும், உணர்ச்சிகளையும் எளிதில் புரிந்துகொள்வார்கள். இவர்களுக்கு மனதில் சிறியதாக ஒரு துறவற சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். தனக்கு மற்றவர்கள் துரோகம் செய்தாலும் பெரிய மனது கொண்டு அதை மன்னிக்ககூடியவர்கள். ஒரு விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது என்று முடிவு செய்தால், அப்படியே அதை மறைத்து விடுவார்கள்.

தன்னடக்கம் இவர்களுக்கு அதிகம் இருக்கும். எல்லோரிடமும் சகஜமாக பேசி பழகும் தன்மை கொண்டவர்கள். வெகுளியான மனம் கொண்டவர்கள். கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். எளியவர்களிடம் மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர்கள். சீக்கிரமாகவே மற்றவர்களுடைய நம்பிக்கையை சம்பாதிப்பார்கள். தர்ம குணம் கொண்டவர்களாகவும், திறமைசாலியாளாகவும் இருப்பார்கள். நோய், கடன் மற்றும் பழிச் சொற்களுக்கு அஞ்சுவார்கள். இவர்களிடம் பேசி ஜெயிக்க முடியாது. இவர்களிடம் பேசினாலும் கவனமாக பேச வேண்டும். இல்லையென்றால் நாம் சொல்லும் பதிலேயே இவர்கள் புது கேள்வியை உண்டாக்குவார்கள்.

இவர்கள் குடும்பத்தில் இவர்கள்தான் செல்ல பிள்ளையாக இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் இவர்களுக்கு பெரு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் கௌரவத்துடனும், பிரியத்துடனும் நடந்து கொள்வார்கள். இவர்கள் கலைகள் மற்றும் விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்கள். குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். சுகபோகமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள். சுக, துக்கங்களை சமமாக எடுத்து கொள்ளும் மனம் கொண்டவர்கள். இவர்களுக்கு கவிதை, மற்றும் இலக்கியங்களில், மிகுந்த ஈடுபாடு இருக்கும்.

இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து அமையும். இவர்களுக்கு வாழ்க்கைத்துணை வந்த பிறகுதான் வாழ்வில் உயர்வு என்பது ஏற்படும். இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை நல்ல அறிவு கொண்டவர்களாகவும், சிக்கனம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் திருமண தடை நீங்க குல தெய்வத்தையும், திருச்செந்தூர் முருகனையும் வணங்கி வந்தால் தடைகள் நீங்கும்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பஞ்சமி திதி பலன்கள்

பஞ்சமி திதி பலன்கள், பஞ்சமி திதியில் செய்ய வேண்டியவை

பஞ்சமி திதி பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில...
ஆடாதொடை இலையின் பயன்கள்

நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடாதோடா இலை

ஆடாதோடா இலை மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப...
அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்

அரிசி கழுவிய தண்ணீரில் மறைந்திருக்கும் அற்புத பயன்கள்

அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்  நம் சமையலைறையில் உள்ள பல பொருட்கள் நமது அழகை தக்கவைத்துக் கொள்ள பயன்படுகிறது. உதாரணமாக மஞ்சள் தூள், தயிர், அரிசி மாவு, தக்காளி, வெள்ளரிக்காய், இன்னும் பல உள்ளன....
கும்ப ராசி குணநலன்கள்

கும்ப ராசி பொது பலன்கள் – கும்ப ராசி குணங்கள்

கும்ப ராசி குணங்கள் கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். கும்ப ராசியில் அவிட்டம் நட்சத்திரத்தின் 3, 4 ஆம் பாதங்களும், சதயம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், பூரட்டாதி நட்சத்திரத்தின் 1, 2,...
ரவா லட்டு செய்முறை

சுவையான ரவா லட்டு

ரவா லட்டு தேவையான பொருட்கள் ரவை - ½ கிலோ சர்க்கரை – ¼ கிலோ முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு நெய் – சிறிதளவு ஏலக்காய் தூள்...
நார்ச்சத்துள்ள உணவு வகைகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் நாம் தினந்தோறும் பல வகையான உணவுப் பொருட்களை சாப்பிடுகிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்....
சதுர்த்தி திதி

சதுர்த்தி திதி பலன்கள், சதுர்த்தி திதியில் செய்ய வேண்டியவை

சதுர்த்தி திதி சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்கு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.