ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

சிம்மராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஆவணி மாதமாகும். இது தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதம் ஆகும். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும், வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் கூறுவார்கள்.

ஆவணியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள் சூரியனை போல எதிலும் தலைமை பண்பு வகிப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள் ஆவர். இவர்கள் எந்த ஒரு செயலையும் ஆராய்ந்து பல முறை சிந்தித்து செயல்பட கூடியவர்கள் ஆவர். இவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்கவே விரும்புவார்கள். இவர்கள் பெருந்தன்மையான குணம் கொண்டவர்களாகவும் பெயர், புகழ் கிடைக்க எடுத்த காரியங்களில் போராடி வெற்றி பெற கூடியவர்கள் ஆவர்.

இவர்கள் சிக்கனமாக குடும்பத்தை நடத்துவார்கள். இவர்களுக்கு பிறரிடம் கடன் வாங்கப் பிடிக்காது. இவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் பணக்காரர்களாக உயர்வு பெறுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் பெரும் செல்வந்தராகும் யோகம் உண்டு. இந்த மாதத்தில் பிறந்தவர்கள், தான் செய்வது மட்டுமே சரி, பிறர் செய்வது தவறு என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பர். வீட்டின் கடைசி மகளாகவோ அல்லது மகனாகவோ ஆவணி மாதத்தில் பிறந்திருந்தால் மிகவும் மதிப்புடன் வாழ்வர்.

இவர்கள் எந்த விதமான சிக்கலான சூழ்நிலைகளிலும் கொடுத்த வாக்கு எப்பாடுபட்டாவது காப்பாற்றுவார்கள். தான தர்மங்கள் செய்வதில் பெரும் வள்ளலாக திகழ்வார்கள். இவர்களுக்கு உதவி செய்யும் குணம் பிறவியிலேயே இருக்கும். இவர்களின் பேச்சில் எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லாமல் உண்மையாக இருக்கும். எந்த காரியத்திலும் முன்வைத்த காலை பின்வைக்காமல் ஓயாமல் போராடும் குணம் கொண்டவர்கள் இவர்கள்.

இவர்களுக்கு அனுபவ அறிவும், படிப்பறிவும் உண்டு. அரசியல் மற்றும் அதிகார பதவிகள் மூலம் இவர்களுக்கு வீடு, மற்றும் நிலபுலன்கள் சேரும். தாய்வழி மூலம், தாய்மாமன், மாமன் வர்க்கத்தினர் மூலமும் செல்வம் சேர்ப்பார்கள். இவர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்களாக இருப்பார்கள். வீட்டிற்கு வருபவர்களை நன்றாக உபசரிப்பார்கள். இவர்களுக்கு பயணம் செய்வது என்பது மிகவும் விருப்பமான ஒன்று. இவர்கள் இயற்கையை ரசிப்பதோடு அதன் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிறந்த பக்திமான்கள், ஆன்மிகத்தில் நல்ல நிலையை அடைவார்கள்.

வாழ்க்கைத்துணையுடன் இவர்களுக்கு அவ்வப்போது ஒரு சில மனக்கசப்புகள் வந்து போகும். இவர்களின் குணத்தை புரிந்துகொண்டு ஒத்துழைக்கும் பெண் அமைந்தால் இவர்களுக்கு நிம்மதியான இல்லற வாழ்க்கை அமையும். சுக்கிரன், குரு, சனி கிரகங்கள் நல்ல பலமான அம்சத்தில் அமைந்தால் இவர்களுக்கு மனைவி வகையில் மகிழ்ச்சியும், சொத்து சேர்க்கையும் கிடைக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ராம நவமி விரதம் இருப்பது எப்படி

ஸ்ரீராமநவமி சிறப்புகளும் வழிபடுவதால் உண்டாகும் நன்மைகளும்

ஸ்ரீராமநவமி சிறப்புகள் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி...
சரும வறட்சியை தடுக்க

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும்

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும் பருவ நிலை மாறும் போது நம் உடலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்றுதான் சரும வறட்சி. சரும வறட்சி  பெரும்பாலானோருக்கு குளிர் காலத்தில்தான் ஏற்படும். குளிர் காலத்தில்...
குபேர எந்திரம்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள் தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் நாம் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வழிபடுவதின் மூலம் சகல சௌபாக்கியங்களையும்  நாம் பெற முடியும். தீபாவளி...
திதியும் நெய்வேத்தியமும்

எந்த திதிக்கு என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்

திதி என்றால் என்ன ? இறை வழிபாடு என்பது நாம் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். இறைவழிபாடு செய்யும்போது மனம் அமைதி அடையும், மன நிம்மதி உண்டாகும், புத்தி தெளிவடையும், எதிர்மறை எண்ணங்கள்...
அத்திப்பழம் நன்மைகள்

அத்திப்பழம் பயன்கள் | அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்

அத்திப்பழம் அத்திப்பழம் மரம் ‘மோரேசி’ Moraceae என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. அத்தியின் அறிவியல் பெயர் Ficus glomerata மற்றும் Ficus auriculate ஆகும். அத்திப்பழம் ஆங்கிலத்தில் 'fig' என அழைக்கபடுகிறது. அத்திமரம் களிமண்...
பெண்கள் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி  சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் தங்களை கவனிக்க தவறிவிடுகின்றனர். ஒரு வீட்டின் பெண் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த குடும்பத்தில் உள்ள...
லிப்ஸ்டிக் பாதிப்புகள்

லிப்ஸ்டிக் போடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

லிப்ஸ்டிக் இன்று பலரும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள பயன்படுத்தப்படும் ஒரு தவிர்க்க முடியாத அழகு சாதன பொருளாக லிப்ஸ்டிக் மாறியுள்ளது. முன்பெல்லாம் எங்கோ ஒருவர் தான் லிப்ஸ்டிக்கை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.