பெண்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி  சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் தங்களை கவனிக்க தவறிவிடுகின்றனர். ஒரு வீட்டின் பெண் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

பெரும்பாலான பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்காத காரணத்தினால் பாதிக்கபடுகின்றனர். ஊட்டச்சத்து குறைபாட்டினால் இளம் வயதிலேயே நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை, இரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம்.

பெண்கள் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகள் பெண்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய், கருப்பை புற்றுநோய் மற்றும் பிறப்புறுப்பு நோய்கள் இவைகள் வராமல் தடுக்க முடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பெண்களின் எலும்பு பலவீனம் அடைகிறது. இதற்கு அவர்களுக்கு ஏற்படும் கால்சியம் பற்றாக்குறையே காரணமாகும்.பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோய், இதய நோய்களை போக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமத்தை பாதுகாக்கவும் உணவு என்பது முக்கியமான பங்கு வகிக்கிறது.

பெண்கள் உண்ணும் உணவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறி பழங்களில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இந்த உணவுகள் பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். எனவே பெண்கள் தங்கள் உடல்நலத்தை மேம்படுத்த கீழ்க்கண்ட ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

பெண்கள் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகள்

தக்காளிதக்காளி

பெண்களின் ஆரோக்கியத்தில் தக்காளி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தக்காளியில் லைகோபீன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய், எண்ட்டோமெட்ரியல் புற்றுநோய், வயிறு மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து காக்கிறது.

வால்நட்ஸ்வால் நட்ஸ்

வால்நட்ஸில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எனவே 8 வாரங்களுக்கு இரண்டு அவுன்ஸ் வால் நட்ஸை சாப்பிட்டு வருவது இதயத்திற்கு நல்லது. இது இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் மார்பக புற்று நோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.

வாழைப்பழம்வாழைப்பழம்

தினசரி ஒரு வாழைப்பழம் உணவு சாப்பிடுவதற்கு முன் எடுத்துக் கொள்வது நல்லது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைத்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றில் இருந்து காக்கிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கீரை

வெந்தயக்கீரை நன்மைகள்வாரம் ஒரு முறையாவது பெண்கள் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். கீரை போன்ற ப்ரீபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்வது ஒவ்வாமை, கர்ப்பகால நீரிழிவு, பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகள் மற்றும் அதிக எடை அதிகரிப்பது போன்ற பெண்களுக்கு வரும் நோய்களை தடுக்க உதவுகிறது. இந்த உணவில் சல்போக்வினோவோஸ் உள்ளது. இது குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

milkபால்

பாலில் அதிகப்படியான கால்சியம் சத்து நிறைந்துள்ளது. பெண்கள் தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் பால் எடுத்துக் கொள்வது நல்லது. பால் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் விட்டமின் டி சத்தும் தேவையான அளவு கிடைப்பதால் எலும்பு தேய்மான நோய் ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது.

பெண்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாயில் விட்டமின் சி அதிகளவு காணப்படுகிறது. இது சருமத்திற்கும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. சிவப்பு மிளகாய் சாப்பிடுவது சருமத்தில் சுருக்கம் மற்றும் சரும வறட்சியை குறைக்க உதவும். சிவப்பு மிளகாய் உணவில் சேர்த்துக் கொள்வதால் சளி, காய்ச்சல் போன்ற அழற்சி தொல்லைகள் ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும்.

ஓட்ஸ் ஓட்ஸ்

ஓட்ஸில் பெண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இதில் விட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன. பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதோடு பிஎம்எஸ் எனப்படும் மாதவிடாய் கால சிக்கல்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

பெண்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்பீட்ரூட்

பீட்டலைன் நிறமிகள் கொண்ட பீட்ரூட் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. இதில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்கள், அழற்சி எதிர்ப்பு மற்றும் வேதியியல் தடுப்பு பண்புகள் காணப்படுகின்றன. இது வீக்கத்தை எதிர்த்து போராட உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது செரோடோனின் அளவை உயர்த்துகிறது. இது உங்க மனநிலையை அதிகரிக்க உதவுகிறது.

பட்டை பட்டை

லவங்கப் பட்டை, மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்; மாதவிடாயை சீராக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும்.பெண்களுக்கு ஏற்படும் அல்சைமர் நோய் போன்றவற்றை தடுக்க இலவங்கப்பட்டை உதவுகிறது. மேலும் பெண்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

பயிறு வகைகள் பயிறு வகைகள்

பெண்கள் சாப்பிட மற்றொரு ஆரோக்கியமான உணவு என்றால் அது பயிறு வகைகள் தான். வாரத்திற்கு ஒரு முறை என பயறு உட்கொள்வது சர்க்கரை அளவை சமப்படுத்தவும், எடை பராமரிப்பிற்கு உதவவும். புற்றுநோய் செல்கள் உற்பத்தியை தடுக்கும்.

பூசணிக்காய்
பூசணிக்காய்

பூசணிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய பூசணிக்காய் பெரிதும் பயன்படுகிறது. பூசணிக்காயில் உள்ள விட்டமின் ஏ பார்வையை மேம்படுத்தவும், வயது தொடர்பான பார்வைக் கோளாறுகளை குறைக்கவும் உதவுகிறது. எனவே பெண்கள் பூசணிக்காய் அன்றாட உணவில் சேர்த்து வருவது நல்லது.

பெண்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்மீன் உணவுகள்

சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், அழற்சி எதிர்ப்பு அமிலங்கள் போன்றவை உள்ளன. இது ஒரு நபர் இதய நோயால் குறைக்கும் வாய்ப்பை கிட்டத்தட்ட 33 %வரை குறைக்கிறது. பெண்களுக்கு கீல்வாதம் வருவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

இது தவிர முட்டை, சாதாரண யோகார்ட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, ஆளி விதைகள், ஆலிவ் ஆயில், பூண்டு, அஸ்பாரகஸ், டார்க் சாக்லேட், காபி,ப்ளூ, பெர்ரி போன்ற உணவுகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

யோனி பொருத்தம் என்றால் என்ன

யோனிப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

யோனிப் பொருத்தம் என்றால் என்ன? திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் என்பது மிக மிக முக்கியமான பொருத்தம் ஆகும். திருமணத்தின் முக்கிய குறிக்கோளே வம்சத்தை விருத்தி செய்வது ஆகும். ஆண், மற்றும் பெண்ணின் தாம்பத்திய...
வல்லாரை கீரை நன்மைகள்

வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

வல்லாரை கீரை வல்லாரை கீரை என்பது ஒரு பல்வேறு மருத்துவ மூலிகைப் பயன்பாட்டுடைய கீரை வகைத் தாவரமாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகளை உணவாகப் பயன்படுத்துவதால்...
துருதுருவென இருக்கும் குழந்தைகளுக்கு

குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் உணவுகள்

குழந்தைகளை சுறுசுறுப்பாக்கும் உணவுகள் குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்கவும், அவர்கள் அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்தவும்,  சரியான சீரான உணவு அவசியமாகிறது. குறிப்பாக துருதுருவென சுறுசுறுப்பாக இருக்கும்  குழந்தைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. குழந்தையின் அறிவாற்றல் மற்றும்...
அவல் லட்டு செய்வது எப்படி

ஆரோக்கியமான அவல் லட்டு செய்வது எப்படி

அவல் லட்டு தேவையான பொருட்கள் அவல் – 1 கப் வெல்லம் – 1 கப் முந்திரி, திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு ஏலக்காய் – சிறிதளவு ...
அப்பம் செய்யும் முறை

இனிப்பு அப்பம் செய்வது எப்படி

அப்பம் இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியங்களில் முக்கியமான ஒன்று இனிப்பு அப்பம் ஆகும். இந்த அப்பம் சுவையானது மட்டுமல்லாமல் செய்வதும் மிகவும் எளிதான ஒரு பலகாரம் ஆகும். சுவையான இனிப்பு அப்பம் எப்படி செய்வது என்பதை...
மூச்சுபயிற்சி

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்

உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் நம் அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆசை. ஆனால் பலருக்கும் அது நடப்பதில்லை. காரணம் நாம் வாழும் வாழக்கை முறை, உணவு...
பிரதோஷ சிறப்புகள்

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும்

பிரதோஷம் பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.