மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
மூலம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு
மூலம் நட்சத்திரத்தின் அதிபதி : கேது
மூலம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு
மூலம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : சிவன்
மூலம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : விநாயகர்
மூலம் நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் : ராட்ஷச கணம்
மூலம் நட்சத்திரத்தின் விருட்சம் : மா மரம்
மூலம் நட்சத்திரத்தின் மிருகம் : பெண் நாய்
மூலம் நட்சத்திரத்தின் பட்சி : செம்போத்து
மூலம் நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்
மூலம் நட்சத்திரத்தின் வடிவம்
மூலம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 19வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘குருகு’ என்ற பெயரும் உண்டு. மூலம் நட்சத்திரம் வான் மண்டலத்தில் அங்குசம், சிங்கத்தின் வால்,யானையின் துதிக்கை போன்ற வடிவங்களில் காணப்படும்.
மூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
அஞ்சனை மைந்தன் பகவான் ஸ்ரீ ஆஞ்சநேயர் இந்த மூலம் நட்சத்திரத்தில் தான் பிறந்தார். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றத்தை கொண்டவர்கள். அன்பு, பண்பு, பணிவு, இரக்கம், கருணை போன்ற நற்குணங்கள் நிறைந்தவர்கள். வாழ்க்கையில் குறிக்கோள் ஒன்றை வைத்து அதை அடைவதற்காக தீவிரமாக உழைப்பவர்கள். மற்றவர்கள் இவர்களை புகழும் வண்ணம் காரியங்களை செய்வதில் ஆர்வம் உடையவர்கள். பயணங்கள் செய்வதில் அதிக விருப்பம் உடையவர்கள்.
இவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்க மாட்டார்கள். தான் கொண்ட கருத்தின் மேல் மிகவும் உறுதியாக இருப்பார்கள். ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை வாழ்வதுடன், பதட்டப்படாத அமைதியான சுபாவத்தையும் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு கல்வியில் ஆர்வம் நிறைந்திருக்கும். சர்வ லட்சணம் பொருந்தியவர்கள். வருடம் ஒருமுறையாவது வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டே இருப்பார்கள். ஒழுக்க சீலர்களாக இருப்பார்கள். எந்த பிரச்சைனையையும் தைரியமாக எதிர் கொள்ளும் திறன் இவர்களிடம் இருக்கும்.
நிகழ்காலத்தை சரியாக கையாண்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறவர்கள். பல்வேறு வகையான ஆற்றல் நிறைந்தவர்கள். எதையும் திறம்பட முடிக்கும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தங்கள் வாழ்க்கையில் எது நடந்தாலும் கவலைப்படுவதில்லை. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று ஏதுவாக இருந்தாலும் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு கவலை இல்லாமல் இருப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள். தான் என்ற கர்வம் அதிகமிருக்கும்.
இவர்களுக்கு ஆடை, அணிகலன்கள் மேல் விருப்பம் அதிகம். மற்றவர்களை கவரும் படி இவர்களுடைய நடவடிக்கைகள் இருக்கும். கொள்கை பிடிப்பு அதிகம் கொண்டவர்கள். சேமிப்பை மேற்கொள்வதில் சிறந்தவர்கள். இவர்களுக்கு தாய், தந்தை மேல் அதிக பாசம் இருக்கும். உறவினர்களுடன் இவர்களுக்கு இணக்கமான உறவு இருக்காது. அடிக்கடி தங்கள் கருத்துக்களை, அபிப்பிராயங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவார்கள்.
மூலம் நட்சத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் மூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் சுதந்திரமாக இருக்க நினைப்பார்கள். கிழங்குவகைப் பொருட்களில் நாட்டம் உள்ளவர்கள். உடல் பலவீனம் உடையவர்கள். குடும்பத்தின் மேல் அதிக பாசம் வைத்திருப்பார்கள். சுதந்திரமானவர்கள். நினைத்ததை செய்து முடிக்க விரும்புபவர்கள். அன்புள்ளவர்கள். சொன்னதை செய்யக்கூடியவர்கள். அதிகமாக கோபப்படுபவர்கள். உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். பிடிவாத குணம் இருக்கும். எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள்.
மூலம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் மூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் நல்ல புத்திமான்களாக இருப்பார்கள். எல்லோரிடமும் அன்பாக பழகுவார். வீடு வாகனம் வாங்கும் யோகம் உள்ளவர்கள். எண்ணியதை செய்பவர்கள். செய்ய முடிந்ததை மட்டுமே சொல்பவர்கள். ஓவியம், இசையில் விருப்பம் உடையவர்கள். பொய் பேசக்கூடியவர்கள். நல்ல சிந்தனை உள்ளவர்கள். கௌரவமாக இருக்க விரும்புவார்கள். கலைகளில் ஆர்வமுடையவர்கள். குடும்பத்தின் மேல் பற்றுள்ளவர்கள்.
மூலம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் மூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் எதையாவது புதிதாக கற்று கொண்டே இருக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். மாயா ஜால கலைகளில் விருப்பம் கொண்டவர்கள். புதிய கலைகளைக் கற்றுக் கொள்பவர்கள். புதுமையை விரும்பக்கூடியவர்கள். தியாக உணர்வு உள்ளவர்கள். எழுத்துத்திறமை உள்ளவர்கள். நல்ல பழக்க வழக்கங்களை கொண்டவர்கள். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். எதிலும் போராடி வெற்றி பெற கூடியவர்கள். கொள்கை பிடிப்பு கொண்டவர்கள்.
மூலம் நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் மூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பை கொண்டவர்கள். காரியத்தில் கண்ணும் கருத்தும் உடையவர்கள். தான் எடுத்து கொண்ட காரியத்தில் கவனமாக இருப்பர். அனைவரையும் விரும்பக்கூடியவர்கள். நல்ல நண்பராகத் திகழும் இவர்கள் நேர்மையான எதிரியாகவும் திகழ்வார்கள். பிடிவாத குணம் உடையவர்கள். வாதத்திறமை குணம் கொண்டவர்கள். பகைவரை வெல்லக்கூடியவர்கள். தலைமை தாங்கும் பண்பு கொண்டவர்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.