திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? பொன்னுருக்குதல் என்றால் என்ன?

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்?

திருமணத்தின் போது ஐயர் மாப்பிள்ளை கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். அதே போல மாப்பிள்ளை, மணப்பெண் கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். எதற்காக இதை செய்கிறார்கள் என பலருக்கும் தெரிவதில்லை. இந்த பகுதியில் அதற்கான பதிலை பார்ப்போம் வாருங்கள்.

காப்பு என்பது திருமண சடங்குகள் தங்கு, தடையின்றி நடைபெறுவதற்கான ஒரு அரண் போன்றது. ஒரு தாம்பூலத்தில் அரிசி பரப்பி அதில் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், காப்பு மற்றும் நூல் முதலியவற்றை வைத்து பூஜை செய்து மாப்பிள்ளையின் வலது மணிக்கட்டில் காப்புக் கட்டுவார்கள்.

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்

மங்களகரமான மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவதல் மூலம் திருஷ்டி மற்றும் தீய சக்திகளால் திருமணத்தில் எவ்விதமான இடையூறுகள் நேராமல் திருமணம் நல்லபடியாக முடிய வேண்டி காப்பு கட்டபடுகிறது. மணமகன் காப்புக் கட்டியதில் இருந்து மறுநாள் தனது கையில் உள்ள காப்பை அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளையும் மனநிறைவுடன் எவ்விதமான தடையுமின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும்.

மணமகனுக்கு மட்டும் காப்பு என்பது கிடையாது, மணமகளுக்கும் காப்பு உண்டு. மணமகனுக்கு வலது கையில் ஐயர் காப்பு கட்ட, மணமகன் மணபெண்ணுக்கு இடது கையில் காப்பு கட்டுவார். ஆணுக்கு தெய்வம் தான் காப்பு. பெண்ணுக்கு ஆண் தான் காப்பு. இந்தக் காப்பை கட்டி விட்டால் அது அவிழ்க்கும் வரை எந்தத் தீட்டும் அவர்களைச் சேராது. திருமணம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் பிரச்சனைகள் இன்றி நடைபெற அவரவர் குலதெய்வத்தை வேண்டி கையில் கட்டப்படுவது ஆகும்.

மணமகளுக்கு காப்பு கட்டுவது ஏன்

பொன்னுருக்குதல் என்றால் என்ன?

திருமாங்கல்யம் என்பது சுமங்கலி பெண்ணின் முக்கிய அடையாளம் ஆகும். அதை அவர்கள் எந்நாளும் போற்றி பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருமாங்கல்யத்தை நல்ல மூகூர்த்த நாளில், தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து அனுபவம் வாய்ந்த பொற்கொல்லரிடம் புதிய பொன் (தங்கம்) கொடுத்து திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.

நிச்சயதார்த்தம்

திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை தரையில் விரித்து அதில் மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இருவீட்டாருக்கும் பரிமாறி கொள்வதன் மூலம் இப்போது முதல் இருவீட்டாரும் ஒன்றாகி விட்டதற்கான அடையாள நிகழ்ச்சியாகும். அவ்விதம் கொடுக்கும் மங்களப்பொருட்களை (மஞ்சள் கலவை, வெற்றிலை, பாக்கு, பூ, தேங்காய், பழங்கள்) நிரப்புதல் கலப்பரப்பு (நிச்சயதார்த்தம்) ஆகும்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் புனர்பூசம் நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் மற்றும் கடகம் புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : குரு புனர்பூசம் 1 முதல் 3 பாத நட்சத்திரத்தின் இராசி அதிபதி - மிதுனம் :...
8ம் எண் குணநலன்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 8ம் எண் சனி பகவானுக்குரிய எண்ணாகும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 8ஆம் எண்ணின் அதிபதியாகிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவார்கள். 8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் எட்டாம் எண்...
சித்திரையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பன்னிரண்டு தமிழ் மாதங்களில் முதல் மாதம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். முன்வைத்த காலை எதிலும் பின் வைக்க மாட்டார்கள்....
சிறுநீரக கற்களை கரைக்க

சிறுநீரகத்தில் கல் வர காரணம் ? வராமல் தடுப்பது எப்படி ?

சிறுநீரகத்தில் கல் வர என்ன காரணம்? முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகக் கல் பிரச்னை இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.  சிறுநீரகம்...
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சதயம் நட்சத்திரத்தின் இராசி : கும்பம் சதயம் நட்சத்திரத்தின் அதிபதி : ராகு சதயம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி சதயம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : யமன் சதயம் நட்சத்திரத்தின் பரிகார...
carrot halwa recipe

சுவையான கேரட் அல்வா எப்படி செய்வது

கேரட் அல்வா தேவையான பொருட்கள் கேரட் சர்க்கரை பால் ஏலக்காய் முந்திரிப் பருப்பு 6.உலர்ந்த திராட்சை நெய் செய்முறை காரட்டை தோல் சீவி சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை நன்கு துருவி எடுத்துக் கொள்ளவும். ...
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரேவதி நட்சத்திரத்தின் இராசி : மீனம் ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி : புதன் ரேவதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு ரேவதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஈஸ்வரன் ரேவதி நட்சத்திரத்தின் பரிகாரத்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.