தை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

தை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் தை மாதமாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதற்கேற்ப தை மாதப்பிறப்பே சிறப்பானதுதான். பன்னிரண்டு தமிழ் மாதங்களில் 10வது மாதம் தை மாதமாகும். தமிழ் மாதங்களில் தை மாதத்திற்கு என தனி சிறப்பு உண்டு. தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் திருவிழா இந்த மாதத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த தை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றி பார்ப்போம்.

தை மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள்

தை மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும், கற்பனை திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சிறிது கஞ்ச பேர்விழிகள். இவர்கள் மிகவும் கஞ்சத்தனமாக இருப்பதால் மற்றவர்களுக்கு அதிகம் உதவி செய்யமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிகம் யாருடனும் நெருங்கிப் பழக மாட்டார்கள். இவர்கள் மனதில் ஒன்று வைத்துக் கொண்டு புறம் ஒன்று பேசத் தெரியாதவர்கள்.

இவர்கள் தன்னை நம்பி வந்தவர்களை காக்கும் குணம் கொண்டவர்கள். விடா முயற்சி, கடுமையாக உழைக்கக் கூடிய ஆற்றல், சிந்திப்பதற்கான ஆற்றலை இயற்கையிலேயே கொண்டு இருப்பார்கள். அதனால் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடாமல் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

இவர்கள் தனக்கு பிடித்த ஒரு பொருளையோ அல்லது பிடித்த ஒரு நபரையோ பற்றி அடிக்கடி பாராட்டிப் பேசிக்கொண்டே இருப்பார்கள். வருமானத்திற்கு ஏற்ப தான் செலவு செய்வார்கள். வேலை என வந்துவிட்டால் புத்திசாலித்தனமாகவும், கெட்டிக்காரர்களாகவும் செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வார்கள். தனக்கு வேண்டியதை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பர். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

இவர்களுக்கு காதல் திருமணம் சரிபட்டு வராது. இவர்களை நம்பி எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. இவர்களை நம்பி ஒரு காரியத்தில் இறங்குவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம். இவர்களின் பேச்சு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுபோல் இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்ல வேண்டும், இல்லையென்றால் அவர்களின் விருப்பத்திற்கே அவர்கள் நடந்து கொள்வார்கள். இவர்கள் குடும்பத்தாருடன் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுசரித்துப் போகும் தன்மையுடையவர்கள்.

தை மாதத்தில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். தை மாதத்தில் பிறந்தவர்களுக்கு உடன்பிறந்தவர்கள் இருப்பது மிகவும் அரிதான விஷயமாகும். ஏனெனில் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வீட்டிற்க்கு ஒரே பிள்ளையாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

வீடு, வாசல், ஆபாரனங்கள்  போன்ற அசையா சொத்துகள் பரம்பரை பரம்பரையாக வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனாலும் இவர்கள் சுயமாக சம்பாதித்து சொத்து சேர்ப்பார்கள். எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் சிந்தித்து செயல்படுவார்கள். பயணம் செய்வது என்பது இவர்களுக்கு விருப்பமான ஒன்று. ஆடை, ஆபரணங்கள் சேர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். இவர்களுக்கு நல்ல அறிவும், ஆற்றலும், அழகும் உள்ள வாழ்க்கைத் துணை அமையும்.

இவர்கள் தை மாதத்தில் பிறந்ததால், ஏற்ற தொழில் விவசாயம் தான். ஆனால் பொறியியல், விஞ்ஞானம், அறிவியல் என பல துறைகளில் சிறப்பாக செயல்படுவார்கள். சுய தொழில் செய்வதில் அதிக விருப்பம் உள்ளவர்களாக இருப்ப்பார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

இறால் சீஸ் ரோல்

இறால் சீஸ் ரோல் – Prawn Cheese Roll

இறால் சீஸ் ரோல் இறால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறால் உணவு பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம் இது சுவை, மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகவும் திகழ்கிறது....
பிறந்த தேதி பலன்

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவரா, உங்கள் பிறந்த தேதி பலன்கள் இதோ

பிறந்த தேதி பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதிரியான குணநலன்கள் இருக்கும் என்பது போல், குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் குணநலன்கள் மாறுபடும். அதன்படி அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும்...
prawn katlet

இறால் கட்லட் செய்வது எப்படி

இறால் கட்லட் தேவையான பொருட்கள் இறால் -  ½ கிலோ பெரிய வெங்காயம் – 1 ( பொடியாக நறுக்கியது ) இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் பச்சைமிளகாய் – 1...
புரட்டாசி மாத வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

புரட்டாசி சனிக்கிழமை விரதம் தமிழ் மாதங்கள் மொத்தம் 12. அதில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால் அது புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் ஆகும். புரட்டாசி...
யோகங்கள் என்றால் என்ன

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #4

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது 2 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் உண்டாகும் யோகங்களை குறிப்பதாகும். அவ்வாறான சில கிரக இணைப்புகள் நல்ல பலன்களையும், சில தீய பலன்களையும் தரலாம்....
இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி அசைவ உணவில் சிறியவர்  முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியின் சுவையும் மணமும் தான் நாம் விரும்பி சாப்பிட ஒரு...
உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்   சமைக்கும் பொழுது இன்முகத்துடன் சமைத்தால் தான் அந்த சமையல் ருசி அதிகரிக்கும். அது போல உணவு சாப்பிடும் பொழுதும் பேசாமல்,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.