சதுர்த்தி திதி
சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தியை சுக்கில பட்ச சதுர்த்தி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தி தினம் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் அழைக்கபடுகிறது. சதுர்த்தி திதி வரும் தினம் விநாயகப் பெருமானுக்கு உகந்த நாளாகும்.
சதுர்த்தி திதியில் பிறந்தவர்களின் குணங்கள்
முழுமுதற் கடவுளான விநாயக பெருமான் இந்த திதியில் பிறந்தவராவர். இந்த திதியில் பிறந்தவர்கள் ரகசியம் நிறைந்தவர்களாக மற்றும் பேராசை கொண்டவர்களாகசதுர்த்தி திதியில் பிறந்தவர்கள் கீர்த்தியுடன் வாழ்வார்கள், பல பேரின் நட்பு இவர்களுக்கு இருக்கும், ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டு செய்து முடிப்பவர்கள், புகழ் பெறுவதற்காக பல நாடுகளுக்கு பயணிப்பார்கள். மந்திர தந்திரங்களில் விருப்பம் உள்ளவர்கள்.
சதுர்த்தி திதியில் என்னென்ன செய்யலாம்
சதுர்த்தி திதி வரும் நாள் விநாயகர் மற்றும் எமனுக்குரிய நாளாகும். எதிரிகளை வீழ்த்துதல், தடைகளை தகர்த்தல் முதலிய போர் காரியங்கள், நெருப்பு சம்பந்தமான காரியங்கள் வெற்றி தரும். சதுர்த்தி திதி தினங்கள் கடன்களை அடைக்க, நெடு நாள் பகையைச் சமரசம் செய்து கொள்ள, வேத சாத்திரங்களைக் கற்க ஏற்ற நாளாகும்.
சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட்டால் மிகவும் நல்லது. சுய ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், மாதந்தோறும் சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபட்டு வருவதன் மூலம் கேது தோஷம் நீங்கும். வளர்பிறை சதுர்த்தி திதி வரும் நாளில் ”நாக சதுர்த்தி’ வழிபாடு செய்தால் நாக தோஷ பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும். ரிஷப, கும்ப ராசிக்காரர்கள் இந்த திதி வரும் தினங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். இந்நாளில் விநாயகரை வழிபட வினைகள் அகலும்.
சதுர்த்தி திதிக்கான திதி சூன்ய ராசிகள்
சதுர்த்தி திதிக்கான திதி சூன்ய ராசிகள் கும்பம் மற்றும் ரிஷபம் ஆகும்.
சதுர்த்தி திதிக்கான தெய்வங்கள்
சதுர்த்தி திதிக்கான வளர்பிறை தெய்வங்கள் : விநாயகர், மற்றும் எமன்
சதுர்த்தி திதிக்கான தேய்பிறை தெய்வங்கள் : விநாயகர், மற்றும் எமன்
திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.