எந்த ராசிக்கு எந்த ஓரைகள் நன்மை அளிக்கும்?

எந்த ராசிக்கு எந்த ஓரைகள் நன்மை அளிக்கும்?

மேஷம்
சூரியன் – செவ்வாய் – குரு – சுக்கிர ஓரைகள் மேஷ ராசிக்காரர்களுக்கு  நன்மையை கொடுக்கும். செவ்வாய் மற்றும் குரு ஓரையில் சுபநிகழ்ச்சிகள் – சொத்து சார்ந்த இனங்கள் – அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஓரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சந்திர ஓரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் – புதன் – குரு ஓரைகள் சிறந்தது.

எந்த ராசிக்கு எந்த ஓரைகள்

ரிஷபம்
சந்திரன் – புதன் – குரு – சுக்கிரன் ஓரைகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிக அளவில் நன்மைகளைக் கொடுக்கும். குரு மற்றும் சுக்கிர ஓரைகளில் சுப நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பது சிறப்பானதாகும். புதிய வீடு – மனை – வாகனம் – ஆடை – அணிகலன்கள் வாங்குவதை சுக்கிர ஓரையில் செய்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சுக்கிர ஓரையில் மருந்து மாத்திரை சாப்பிட ஆரம்பித்தால் விரைவில் குணமடையும்.

மிதுனம்
சந்திரன் – புதன் – குரு – சுக்கிரன்  ஆகிய ஓரைகள் மிதுன ராசிக்காரர்களுக்கு  நன்மையை தரும். புதிய முயற்சிகள் – கல்வி – தொழில் – உத்தியோகம் – வீடு – மனை வாங்குவது போன்றவற்றை புதன் ஓரையில் செய்தால் எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை குரு மற்றும் சுக்கிர ஓரையில் ஆரம்பித்தால் நல்லபடியாக முடியும்.

கடகம்

சந்திரன் – குரு – சுக்கிரன் ஆகிய ஓரைகள் கடக ராசிக்காரர்களுக்கு  மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும். கல்வி – வேலை – பூமி சம்பந்தமான காரியங்கள் – வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிர ஓரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஓரை நன்மை தரும்.

சிம்மம்
சூரியன் – சந்திரன் – குரு ஓரைகள் சிம்ம ராசிக்காரர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். செவ்வாய் ஓரையில் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.  அரசு வேலை சார்ந்த விஷயங்களுக்கு சூரிய ஓரை நன்மை பயக்கும்.

கன்னி
சந்திரன் – செவ்வாய் – புதன் – குரு – சுக்கிர ஓரைகள் கன்னி ராசிக்காரர்களுக்கு  நன்மை அளிக்கும். சுக்கிர ஓரையில் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க இயலும். அரசு சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஓரை நன்மை பயக்கும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஓரையையும் – பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஓரையையும் பயன்படுத்துவது நன்மை அளிக்கும்.

சுப ஓரைகள் என்றால் என்னதுலாம்
செவ்வாய் – புதன் – குரு – சுக்கிர ஓரைகள் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாக்கும். செவ்வாய் ஓரையில் சுபநிகழ்ச்சிகள் – சொத்து சார்ந்த இனங்கள் – அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சந்திர ஓரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஓரையும் நன்மை தரும்.

விருச்சிகம்

சந்திரன் – குரு – சுக்கிரன் ஆகிய ஓரைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மையை ஏற்படுத்தும். கல்வி – வேலை – பூமி சம்பந்தமான காரியங்கள் – வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிர ஓரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஓரை நன்மை தரும்.

தனுசு
சூரியன் – செவ்வாய் – குரு – சுக்கிர ஓரைகள் தனுசு ராசிக்காரர்களுக்கு   அனுகூலத்தைக் கொடுக்கும். குரு ஓரையில் சுபநிகழ்ச்சிகள் – சொத்து சார்ந்த இனங்கள் – அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஓரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஓரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் – குரு ஓரைகள் உத்தமம்.

மகரம்
சந்திரன் – செவ்வாய் – புதன் – சுக்கிர ஓரைகள் மகர ராசிக்காரர்களுக்கு   அனுகூலத்தைக் கொடுக்கும். சுக்கிரன் ஓரையில் சுபநிகழ்ச்சிகள் – சொத்து சார்ந்த இனங்கள் – அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கும் – கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஓரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் – சுக்கிரன் ஓரைகள் சிறந்தது. குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஓரை  நன்மையைத் தரும்.

கும்பம்
சந்திரன் – செவ்வாய் – புதன் – சுக்கிர ஓரைகள் கும்ப ராசிக்காரர்களுக்கு  அனுகூலத்தைக் கொடுக்கும். சுக்கிரன் ஓரையில் சுபநிகழ்ச்சிகள் – சொத்து சார்ந்த இனங்கள் – அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கும் – கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஓரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் – சுக்கிரன் ஓரைகள் உத்தமம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஓரை நன்மையைத் தரும்.

மீனம்

சூரியன் – செவ்வாய் – குரு – சுக்கிர ஓரைகள் மீன ராசிக்காரர்களுக்கு  அனுகூலத்தைக் கொடுக்கும். குரு ஓரையில் சுபநிகழ்ச்சிகள் – சொத்து சார்ந்த இனங்கள் – அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஓரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஓரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் – புதன் – குரு ஓரைகள் சிறந்தது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்முறை

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி பொதுவாக எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். அதிலும் தலப்பாக்கட்டு பிரியாணியின் சுவையும், மணமும் ஆளை சுண்டி இழுக்கும். அப்படிபட்ட தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை வீட்டில் எப்படி...
Riddles with Answers

Brain Teasers with Answers | Riddles and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
மீன் குழம்பு செய்வது எப்படி

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீன் – ½  கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 ...

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்

கண்களை பாதுகாக்கும் உணவுகள்  ஒருவரின் கண்களை பார்த்தே அவர்களின் உடல் ஆரோக்கியத்தை நாம் கணித்து விடலாம். மனித உடலில் இருக்கும் அனைத்து பாகங்களுமே மிக முக்கியமானதுதான். அதில் எந்த ஒரு உறுப்பு பழுதடைந்தாலும் முதலில்...
சாலை விபத்து ஏற்பட்டால்

சாலை விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

சாலை விபத்து ஏற்பட்டால் முதலுதவி சாலை விபத்து எதிர்பாரதவிதமாக ஏற்படுவது. மற்ற வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தான் அதிகம் விபத்தில் சிக்குகின்றனர். விபத்து ஏற்பட்டவுடன் என்ன செய்வது என்று பலருக்கும்...
மேஷ ராசி பொதுவான குணங்கள்

மேஷ ராசி பொது பலன்கள் – மேஷ ராசி குணங்கள்

மேஷ ராசி குணங்கள் மேஷ ராசி யில் அசுவினி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆகியவை இடம் பெறுகின்றன.  மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவானவார். இந்த நட்சத்திர மண்டலத்தை தொலைநோக்கி...
சேமியா கேசரி செய்முறை

கல்யாண வீட்டு சேமியா கேசரி

சேமியா கேசரி தேவையான பொருட்கள் சேமியா – 1 கப் சர்க்கரை – 1/2  கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு ஏலக்காய்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.