திருமணத்தின்போது பால், பழம் கொடுப்பது எதற்காக?

திருமணத்தின்போது பால், பழம் கொடுப்பது எதற்காக?

திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள் நிறைந்திருக்கும். ஒவ்வொரு திருமணத்திலும் அவரவர் குடும்ப வழக்கதிற்கு ஏற்ப சடங்குகள் வேறுபடும். குறிப்பாக இந்து மத திருமணத்தில் பல வகையான சடங்குகள் இருக்கும். அவற்றில் முக்கியமானது திருமணத்தின் போது மணமக்களுக்கு பால், பழம் கொடுப்பது. இந்து திருமணத்தில் இந்த சம்ப்ரதாயம் மிக முக்கியமானதாகும்.

இந்து மதத்தின் ஒவ்வொரு சடங்கிற்கும், ஒவ்வொரு அர்த்தம் உள்ளதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு காரியத்தையும், காரண காரியத்தோடு தான் செய்திருக்கிறார்கள். அதையடுத்து, இந்து மதத்தினர் இல்லங்களில் நடைபெறும் திருமணத்தின் போது எதற்காக பால், பழம் கொடுக்கப்படுகின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.

திருமண சடங்குகள்திருமண சடங்குகள்

எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் சாஸ்திர சாம்பிரதாயம் என்று பல்வேறு சடங்குகளை செய்வது உலகிலேயே இந்து மதத்தினர் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அந்த சடங்குகள் ஒவ்வொன்றுக்கும், ஒரு அர்த்தங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவைகள் வாழையடி வாழையாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு ஒரு குழந்தை பிறந்தது முதல் இறப்பது வரை, அதேபோல் காலையில் எழுந்து குளிப்பது முதல் இரவு படுத்து தூங்குவது வரை என்னென்ன செய்யவேண்டும்? எப்படி தூங்க வேண்டும் என சுமார் நூற்றுக்கும் மேலான விஷயங்களை, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் நாம் கடைபிடித்து வருகிறோம்.

மேலும், அவற்றை ஆன்மிகத்துடன் இணைத்து கூறும்போது, மக்கள் அதை மீறாமல், தங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பார்கள் என்பதற்காகவே அவ்வாறு கட்டாயப்படுத்தி உள்ளனர்.

பால், பழம் கொடுப்பது எதற்காக ?

திருமணம் என்பது மணமகன் மணமகள் இருவரும் இனைந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும், அன்பையும் நம்பிக்கையையும் பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்க ஏற்பத்தப்படும் பந்தமாகும். மேலும், வாழ்க்கை பாடத்தில் அனுபவித்து தெரிந்து கொள்வதை விட, சடங்கு, சம்பிரதாயங்களை அன்றாடம் சரியாக கடைபிடிக்கும்போது ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

மனிதர்களின் வாழ்வில் ஒவ்வொருவருக்கும், அவர்களின் திருமண நாள் மிகவும் மறக்க முடியாததாகும். ஏனெனில், ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் குடும்பம் என்ற பந்தத்திற்குள் இணைந்து சமூகத்தால் அங்கீகரிக்கப்படுகின்றனர். இதில், பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு, புதிய சூழ்நிலையில் வாழ வருவதால் அவளுக்கு அனைத்துமே புதிதாக இருக்கும்.

பால் பழம் கொடுப்பது ஏன் அதனால், கணவர் வீட்டில் இருப்பவர்களுடன் அனுசரித்து இணக்கமாக நடந்து கொள்ளவேண்டும். எக்காரணத்தை கொண்டும், கணவனுடன் சரிக்கு சமமாக நின்று பேசுவதால் மட்டும் பெண் வெற்றி அடைந்து விட முடியாது என்பதை உணர்த்தும் விதமாக, திருமணத்தின்போது புது மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் பால், பழம் கொடுக்கப்படுகின்றது.

மணமகளுக்கு 

ஒருபசு மாடு எத்தகைய கெடுதலான உணவை சாப்பிட்டாலும், அது தரும் பால் மிக சுத்தமாகவே இருக்கும். அதில் துளி அளவு கூட மாசு, தீங்கு என்பதே இருக்காது. அதுபோல் கணவன் வீட்டில் இருப்பவர்கள், உனக்கு தீமையே செய்தாலும், உன்னால் அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே பால் கொடுக்கப்படுகின்றது.

வாழைபழத்தில் விதையே இல்லாவிட்டாலும், மூலமரத்தை சார்ந்து அது கன்றை ஈனுகின்றது. அது போல், கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தர வேண்டும் என்பதை குறிப்பதற்காக பழம் கொடுக்கின்றனர்.

மணமகனுக்கு

பாலில் எப்படி தயிரும், நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும், ஆற்றலும் உள்ளது. பாலில் பக்குவமாக உறையிட்டு அதை கடைந்து அதில் இருக்கும் வெண்ணைய் மற்றும் நெய்யை எடு, பாலை கெட்டுப்போக வைத்துவிடாதே என்று குறிப்பதற்காக பால் கொடுக்கின்றனர்.

வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுகின்றோமோ, அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம். அதை பட்டுப்போக விடாமல் பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி, வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என்பதை உணர்த்துவதற்காகவே பழம் கொடுக்கிறார்கள்.

இவ்வாறாக திருமணத்தில் பால் பழம் கொடுப்பதற்கு நம் முன்னோர்கள் இப்படி ஒரு அர்த்தத்தை கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

லிப்ஸ்டிக் பாதிப்புகள்

லிப்ஸ்டிக் போடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

லிப்ஸ்டிக் இன்று பலரும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள பயன்படுத்தப்படும் ஒரு தவிர்க்க முடியாத அழகு சாதன பொருளாக லிப்ஸ்டிக் மாறியுள்ளது. முன்பெல்லாம் எங்கோ ஒருவர் தான் லிப்ஸ்டிக்கை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால்...

முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட் இயற்கையான அழகை பெற விரும்பும் பெண்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த தீர்வாகும். பீட்ரூட்டில் நம் உடலுக்கும், உள்ளுருப்புகளுக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும். நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும்...
கனவுகளின் அர்த்தங்கள்

உங்களை பற்றிய கனவு பலன்கள்

உங்களை பற்றிய கனவு பலன்கள் கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. மனிதர்கள் முதல் விலங்குகள் வரை எல்லோருக்கும் கனவுகள் வருகின்றன. சில கனவுகள் நம் அனைவருக்கும் ஒரே விதமாக, ஒரே மாதிரியாக வந்திருக்கலாம். அவற்றுக்கு...
பஞ்சமி திதி பலன்கள்

பஞ்சமி திதி பலன்கள், பஞ்சமி திதியில் செய்ய வேண்டியவை

பஞ்சமி திதி பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில...
கனவில் பூச்சிகளை கண்டால்

பூச்சிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூச்சிகள் கனவில் வந்தால் கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கும்போது நம்மை அறியாமல் வருவதாகும். குறிப்பிட்ட சில சமயங்களில், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. நாம்...
how to reduce belly fat

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள்

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள் உடலை ஆரோக்கியமாகவும் உடல் எடையை சரியான முறையில் வைத்திருக்கவும் உணவு முறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எந்த வகையான உணவுகளை...
தசமி திதி

தசமி திதி பலன்கள், தசமி திதியில் செய்ய வேண்டியவை

தசமி திதி தசம் என்றால் பத்து என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். இராவணனை தசமுகன் அதாவது பத்து தலை உடையவன் என்று அழைப்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் இருந்து வரும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.