மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம்
மகம் நட்சத்திரத்தின் அதிபதி : கேது
மகம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சூரியன்
மகம் நட்சத்திரத்தின் நட்சத்திர தேவதை : சூரியன்
மகம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : விநாயகர்
மகம் நட்சத்திரத்தின் நட்சத்திர குணம் : ராட்சஸ குணம்
மகம் நட்சத்திரத்தின் விருட்சம் : ஆலமரம்
மகம் நட்சத்திரத்தின் மிருகம் : ஆண் எலி
மகம் நட்சத்திரத்தின் பட்சி : கழுகு
மகம் நட்சத்திரத்தின் கோத்திரம் : ஆங்கிரஸர்

மகம் நட்சத்திரத்தின் வடிவம்

மகம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 10வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘கொடுநுகம்’ என்ற பெயரும் உண்டு. மகம் நட்சத்திரம் வான் மண்டலத்தில் பல்லக்கு, நுகத்தடி போன்ற வடிவங்களில் காணப்படும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று பழமொழி உண்டு. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள். சங்கீதம், பாடல் போன்ற கலைகளில் விருப்பம் உடையவர்கள். வாசனைப் பொருட்களில் விருப்பம் உடையவர்கள். நீதி நெறி தவறாமல் அற வழியில் நடப்பவர்கள். யாராவது தர்மத்திற்கு மீறிய செயல்களில் ஈடுபட்டாலும் அதை பொறுத்து கொண்டு போகும் குணம் இவர்களிடம் இருக்காது. அதனால் இயற்கையாகவே இவர்களுக்கு எதிரிகள் உருவாகிவிடுவார்கள்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுப்பான தோற்றம் கொண்டவர்கள். உரோமம் அடர்ந்த உடல்வாகு பெற்றவர்கள். இவர்கள் சுகபோகமான வாழ்க்கை நடத்துவார்கள். இவர்களுக்கு வேலை செய்ய பல பணியாட்கள் இருப்பார்கள். மத சம்பந்தமான காரியங்களில் இவர்களுக்கு ஈடுபாடு இருக்கும். இவர்கள் மனைவியுடன் சுமுகமான உறவுகளை கொண்டிருப்பார்கள். இவர்கள் பெற்றோர்களிடம், கடமைப் பற்றுடன் நடந்து கொண்டாலும், எதிலும் கண்டிப்பாக இருக்கக்கூடிய சுபாவம், இவர்களிடம் காணப்படும். 25 வயதுக்குப் மேல் இவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.

இவர்களின் எண்ணமும் செயலும், தெளிவானதாய், திடமானதாக அமைந்திருக்கும். எந்த செயலில் ஈடுபட்டாலும் அதை திறம்படவும், விருப்பமுடனும் செய்து முடிப்பார்கள். மென்மையாக பேசுவார்கள். சிந்தித்து செயல்படும் மனப்பான்மை உள்ளவர்கள். கல்வி கற்பதில் விருப்பம் கொண்டவர்கள். வெளிப்படையாக பேசக்கூடியவர்கள். உத்தியோகத்தில் நேர்மையாக இருப்பதால் அதிக பணத்தை இவர்களால் தேட முடியாது. இருந்தாலும் கடின உழைப்பும், உண்மைக்கு உதாரணமாகவும் திகழ்வார்கள். ஒரு காரியத்தில் இவர்கள் முடிவெடுத்தால் அதிலிருந்து விலக மாட்டார்கள்.

இவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். தங்களின் தனிபட்ட விஷயங்களில் மற்றவர்கள் தலையிடுவதை விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். தான் செய்தது தவறு என மனதிற்கு பட்டால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார்கள். இவர்களின் வாழ்க்கையானது வெளி உலகுக்கு கௌரவமாக காட்சியளிக்கும். இவர்கள் நல்ல செல்வந்தராகவும், புத்திசாலியாகவும், பிறரிடம் கருணை காட்டி உதவி செய்பவராகவும் இருப்பார்கள்.

இவர்கள் எப்பொழுதும் பம்பரம் போல் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகம். குடும்பத்தின் மேல் அதிக பாசம் கொண்டவர்கள். இவர்களிடம் நல்ல நிர்வாக திறமை இருக்கும். இவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை இருக்கும். பிரயனங்களில் அதிக விருப்பம் கொண்டவர்கள். மற்றவர்களை கௌரவமாக நடத்துவார்கள். இவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டார்கள்.

மகம் நட்சத்திரம் முதல் பாதம் :

இவர்களிடம் மகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் சிவந்த கண்களை கொண்டவர்கள். சிவந்த நிறம் உடையவர்கள். அறிவு நுட்பம் உடையவர்கள். பொருள் சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். இவர்களுக்கு சொத்துக்கள் சேர்ப்பதில் விருப்பம் இருக்கும். பிறரை தான் பால் கவர்ந்து இழுக்கும் வசீகர தன்மை கொண்டவர்கள்.

மகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் மகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். நற்குணங்களை உடையவர்கள். பணத்தை செலவழிப்பதில் விருப்பம் உள்ளவர்கள். அழகிய கண்களை உடையவர்கள். உடல் பலவீனம் உடையவர்கள். குடும்பத்தின் மேல் அதிக பாசம் கொண்டவர்கள். எப்பொழுதும் சிந்தித்து கொண்டே இருப்பார்கள். கலை துறையில் விருப்பம் கொண்டவர்கள். நண்பர்கள் மீது பற்று கொண்டவர்கள். இவர்களுக்கு இரக்கக் குணமும், பிறரை உதவும் தன்மையும் அதிகம் இருக்கும்.

மகம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் மகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். உடல் பலம் உடையவர்கள். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கும். கெட்ட செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அமைதியான போக்கை கொண்டவர்கள். பிடிவாதம் உடையவர்கள். எவருக்கும் அஞ்சதாவர்கள். செயல் தீரம் உடையவர்கள். பேராசை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவார்கள். எடுத்த காரியத்தை முடிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள்.

மகம் நட்சத்திரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் மகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். சுயநலம் உடையவர்கள். பெண்கள் பேச்சை கேட்டு நடப்பவர்கள். முன் கோபம் உடையவர்கள். இவர்கள் இனிமையாக பேசுவதில் வல்லவர்கள். உதவி செய்தவர்களை எளிதில் மறந்து விடுவார்கள். ஆடம்பரமாக இருக்க ஆசைப்படுவார்கள். எதிலும் முதலில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

5ம் எண்ணின் குணநலன்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 5ம் எண் புதன் பகவானுக்குரிய எண்ணாகும். 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். 5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் இவர்கள் பின்னால் நடக்க போவதை முன்கூட்டியே...
tamil vidukadhaigal

Riddles with Answers | Vidukathaigal and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் விடுகதைகள்   இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
ராம நவமி விரதம் இருப்பது எப்படி

ஸ்ரீராமநவமி சிறப்புகளும் வழிபடுவதால் உண்டாகும் நன்மைகளும்

ஸ்ரீராமநவமி சிறப்புகள் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி...
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் விசாகம் நட்சத்திரத்தின் இராசி : துலாம், விருச்சிகம் விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி : குரு விசாகம் நட்சத்திரத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதத்தின் இராசி அதிபதி (துலாம்) : சுக்கிரன் விசாகம்...
brinjal uses in tamil

கத்திரிக்காய் மருத்துவ குணங்கள் | Brinjal Benefits in Tamil

கத்திரிக்காய் கத்தரிக்காய் செடியின் அறிவியல் பெயர் சொலனும் மெலோங்கெனா ஆகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடி கொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகையாகும். சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற...
தாரை வார்த்தல் என்றால் என்ன

திருமணத்தில் தாரை வார்த்தல் என்றால் என்ன?

தாரை வார்த்தல் என்றால் என்ன? திருமணம் செய்வதில் பல சடங்குகள் இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமானது தாரைவார்த்தல் சடங்காகும். ‘தாரை’ என்றால் நீர் என அர்த்தம். நீருக்குத் தீட்டில்லை. நீர் மந்திரநாத ஒலியின் அதிர்வை...
ஆப்பிள்

இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள்

இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள் நம் உடலை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பழங்கள் சாப்பிடுவது மிக அவசியமான ஒன்றாகும். பழங்கள் பல வகையான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. பழங்களை நாம் உட்கொள்வதால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.