கொய்யா பழம் பலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

கொய்யா

கொய்யாப் பழம் வெப்ப மண்டலங்களிலும் துணை வெப்ப மண்டலங்களிலும் பயிரிடப்படும் பழமாகும். கொய்யா மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது. இந்தியா, இலங்கை,சீனா ,தாய்லாந்து,மியான்மர் நாடுகளில் கொய்யா அதிகம் வளர்க்கப்படுகிறது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி கிராமத்தில்தான் அதிக அளவு கொய்யா பயிரிடப்படுகிறது. கொய்யா செடியானது வீட்டு தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் பரவலாக வளர்க்கப்படுகிறது.

கொய்யா பழம் மருத்துவ குணங்கள்

கொய்யா வகைகள்

கொய்யா பழத்தில் 2 வகைகள் உள்ளன. அவை, வெள்ளை, சிவப்பு கொய்யா போன்றவையாகும். இந்த இரண்டு பழங்களும் அதன் நிறத்தில் மட்டுமல்ல, மருத்துவ குணங்களிலும் பல வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு பழத்தின் நிறத்திற்கும் ஏற்ப குண நலன்கள் மாறுபடும். பழத்தில் இருக்கக்கூடிய சத்துக்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களால் தான் பழங்களின் நிறம் வேறுபடுகிறது.

கொய்யா ரகங்கள்

கொய்யாவில் அலகாபாத், லக்னோ – 46, லக்னோ – 49, பனாரஸ், ​​ரெட் பிளஷ், அர்கா அமுல்யா, அர்கா மிருதுளா ஆகிய ரகங்கள் உள்ளன. இவற்றில் விதைகள் குறைந்த அளவே இருக்கும்

கொய்யாவில் உள்ள ஊட்டச்சத்துகள்

கொய்யாவில் கலோரி – 24%, புரதச்சத்து – 0.04 கி, நார்ச்சத்து – 0.36 கி, இரும்புச்சத்து – 0.02 மி.கி, கால்சியம் – 3 மி.கி, பாஸ்பரஸ் – 28 மி.கி, மாவுச்சத்து – 11.6 கி, கொழுப்பு – 0.30 கி, போலேட், பீட்டா கரோட்டீன் போன்றவை அடங்கியுள்ளன.

கொய்யா பழத்தின் மருத்துவ பலன்கள்

உடல் எடையை குறைக்கும்

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு கொய்யா மிகவும் ஏற்றது. கொய்யா பழத்தில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதால் உடல் எடை அதிகரிக்காது. உடலுக்குத் தேவையான பலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

ஜீரண கோளாறுகளை சரிபடுத்தும்

கொய்யா ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கொய்யா பழத்தை சாப்பிடுவதன் மூலம் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுவடையும்.

சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுக்கும்

பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு மிகுந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என சொல்வார்கள். ஆனால், கொய்யா பழத்தைச் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம். டைப்-2 நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் கொய்யாப்பழம் உதவுகிறது.

மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும்

கொய்யாப்பழத்தில் மிகுதியாக இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற தாதுக்கள் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க உதவுகின்றன. மேலும் உடலில் உள்ள நஞ்சுகளை அகற்றுவது, பைட்டோநியூட்ரியன்ஸ், ஃபிளவனாய்ட் போன்றவற்றின் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

இதயத்தை பாதுகாக்கிறது

கொய்யா பழத்தில் அதிகளவு சோடியம் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது அருமருந்தாகும்.

கொய்யா பழம் பலன்கள்

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தினம் ஒரு கொய்யா பழத்தைச் சாப்பிட்டு வந்தால் வைட்டமின் சி குறைபாட்டைச் சரிசெய்ய முடியும். உடலின் சக்தி அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

குறிப்பு

இரவு நேரங்களில் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு நேரங்களில் சாப்பிட்டால் சளி மற்றும் இருமல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்

அதிமதுரம் மருத்துவ பயன்கள்

அதிமதுரம் அதிமதுரம் செடி வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். காடுகளில் புதர் செடியாக வளரும். மிதமான சீதோஷ்ணத்தில் வளரும். இது சுமார் 1.5 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் கூட்டிலையைக் கொண்டது....
பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா தேவையான பொருள்கள் பாதாம் பருப்பு – 1 கப் சர்க்கரை – ¾ கப் நெய் – ¼ கப் தண்ணீர் – சிரிதளவு செய்முறை பாதாம் பருப்பை வெந்நீரில் இரண்டு மணி...
மாங்கல்ய தோஷம் பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? பெண்ணின் ஜாதகத்தில் உள்ள சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவது தாமதமாகும் அல்லது அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காமல்...
சேமியா கேசரி செய்முறை

கல்யாண வீட்டு சேமியா கேசரி

சேமியா கேசரி தேவையான பொருட்கள் சேமியா – 1 கப் சர்க்கரை – 1/2  கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு ஏலக்காய்...
உடல் எடையை குறைக்கும் தேநீர்

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ உடல் எடை அதிகரிப்பு இன்று அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது. உடல் எடை அதிகரிப்பால் உடல் சோர்வு, மந்த நிலை, இரத்த அழுத்த்தம், சர்க்கரை...
4 வகை ராசிகளும் அதன் குணங்களும்

4 வகை ராசிகளும், அதன் குணங்களும்

ராசிகளின் வகைகள் மற்றும் அதன் குணங்களும் நீரும், நெருப்பும் ஒன்றாக இணையாது. நிலத்தோடு காற்றும் இணையாது. ஆனால் நெருப்போடும் காற்றும், நிலத்தோடு நீரும் இணையும். அதுபோலத்தான் இணையாக உள்ள ராசிக்காரர்களை இணைத்தால் மட்டுமே இல்லறம்...
கேச பராமரிப்பு

உங்கள் கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள்

கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள் நம் தோற்றத்தை அழகாக காட்டுவதில் தலைமுடியும் பெரும்பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது. தலைமுடி ஆரோக்கியமாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருந்தால் அது கூடுதல் அழகையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.