வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

வல்லாரை கீரை

வல்லாரை கீரை என்பது ஒரு பல்வேறு மருத்துவ மூலிகைப் பயன்பாட்டுடைய கீரை வகைத் தாவரமாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகளை உணவாகப் பயன்படுத்துவதால் இத்தாவரம், கீரை இனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

வல்லாரை கீரை நன்மைகள்

வல்லாரை கீரையில் உள்ள சத்துக்கள்

வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை எனப்பெயர் பெற்றது. வல்லாரை ஞாபக சக்தியை மேம்படுத்துவதால் இது சரஸ்வதி கீரை என்றும் அழைக்கபடுகிறது. வல்லாரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் A, C மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, இந்த கீரை சரியான அளவில் கொண்டுள்ளது. இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.

வல்லாரை தரையில் படர்ந்து பரவும் தன்மை கொண்டது. இதன் படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து வேர்கள் முளைக்கின்றன. இது இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களில், குறிப்பாக ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்த வயல் வெளிகளிலும் காணப்படுகின்றன. வல்லாரையின் இலைகள் வட்ட வடிவமாக தவளையின் பாதம் போன்ற அமைப்பை கொண்டது.

வல்லாரை வளரும் இடங்கள்

வல்லாரை இந்தியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, மற்றும் வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது.

வல்லாரையின் பயன் தரும் பகுதிகள்

வல்லாரையின் இலைகள் உட்பட முழுத் தாவரமும் உணவாகவும், மருத்துவத்திலும் பயன்படுகிறது.

வல்லாரை இனங்கள்

வல்லாரையில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் அதிகமாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் அதிகமாகவும், இலை சிறியதாகவும் உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் கொண்டது.

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரஸ்வதி மூலிகை என்றும் அழைக்கின்றனர்.

வல்லாரை கீரையின் வேறு பெயர்கள்

வல்லரையானது பிராம்மி, சரஸ்வதி கீரை, சண்டகி, பிண்டீரி, யோசனை வல்லி, சரஸ்வதி மூலிகை என பல பெயர்களில் அழைக்கபடுகிறது.

வல்லாரை கீரையை சாப்பிடும் முறை

1. வல்லாரையை காலை நேரத்தில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று சாப்பிட்டு வந்தால், மூளை மிகுந்த சுறுசுறுப்படையும்.

2. காலை வேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவு வல்லாரை கீரையைப் பச்சையாக நன்கு மென்று சாப்பிட்ட பின், பசும்பாலை குடித்து வந்தால், மாலைக்கண் நோய் குணமாகும்.

3. காலை நேரத்தில் வல்லாரையை மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணியும்.

4. வல்லாரை சாப்பிடும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. மேலும் புளி மற்றும் காரம் அதிகமாக சேர்த்து கொள்ள கூடாது. அப்போதுதான் அதன் முழுமையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.

5. இந்த கீரையை பச்சையாக உண்ணுதல் மிகவும் நல்லது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

வல்லாரை மருத்துவப் பயன்கள்

மனநோயை குணபடுத்தும்

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக சாப்பிட்டு விட்டு, நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை லிட்டர் பசும்பால் குடித்து வரவும். மேலும் அந்த சமயங்களில் உணவில் உப்பு, புளி அதிகம் சேர்த்து கொள்ளகூடாது. அப்படி சாப்பிட்டு வந்தால் மனநோய்கள் மறைந்து மனதில் மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல மனநோய்களும் அகலும்.

ஞாபசக்தி உண்டாகும்

நல்ல ஞாபசக்தி உண்டாக வல்லாரை இலையுடன் அரிசி, திப்பிலி சேர்த்து ஊறவைத்த மைபோல அரைத்து, காலை, மாலை நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் நல்ல ஞாபசக்தி உண்டாகும்.

யானை கால் நோய் தீரும்

வல்லாரை இலையுடன் பால் கலந்து அரைத்து, விழுதை நெல்லிக்காய் அளவு தினமும் உண்டு வர நரை, திரை அகலும். இளமைத் தோற்றம் திரும்பும். இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் குணமாகும்.

இதயநோய்களை தீர்க்கும்

வல்லாரை இலைகள் 3, அக்ரோட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 1, மிளகு 3, கற்கண்டு 10 கிராம் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து விழுதாய் அரைத்து, அதைப் பாலில் கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் இருந்தால் மாயமாய் மறையும்.

சீதபேதி குணமாகும்

குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி குணமாக, 2 வல்லாரை இலையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சர்க்கரைக் சேர்த்து கொடுக்கக் சீதபேதி குணமாகும்.

தோல் நோய்கள் குணமாகும்

சிறிது வல்லாரை இலைகள், புழுங்கல் அரிசி வடித்தது கால் கிலோ, ஐந்து மிளகு சேர்த்து மாவு போல அரைத்து கொள்ளவும். பின்பு அதனுடன் தேவையான அளவு சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்து, அந்த மாவில் ரொட்டி போல் சுட்டு சாப்பிட்டு வர, படை, நமைச்சல், தோல் நோய்கள், குஷ்டம் போன்ற தோல் நோய்கள் தீரும்.

வயிற்று பூச்சிகள் அழியும்

அரை லிட்டர் வல்லாரை இலைச்சாற்றில் கால் கிலோ வாய்விளங்கத்தை ஊறவைத்து, அதை வெயிலில் உலர்த்தி கொள்ளவும். உலர்ந்ததும் தூள் செய்து காலை, மாலை வேளைகளில் ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோய் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள், கிருமிக் கோளாறுகள் மறையும்.

மலச்சிக்கல் மற்றும் குடல் புண்களை ஆற்றும்

10 கிராம் வல்லாரைப் பொடியோடு, 5 கிராம் அதிமதுரத் தூள் கலந்து இரவில் தூங்கப் போகும் முன் வெந்நீரில் கலந்து குடிக்க மலச்சிக்கல் தீரும். மேலும் வல்லாரைக் கீரையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், வாய்ப்புண், வாய் நாற்றம் போன்றவை குணமாகும்.

வல்லாரை இலையின் மருத்துவ நன்மைகள்

இரைப்பு நோய் குணமாகும்

வல்லாரை இலைச்சாற்றில் அரிசித் திப்பிலியை ஊறவைத்து உலர்த்தித் தூள் போல செய்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளை சிறிதளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட கபநோய்கள், இரைப்பு, இருமல் போன்றவை குணமாகும்.

பல்வேறு நோய்களை தீர்க்கும்

நரம்புத் தளர்ச்சி, தாது விருத்திப் பிரச்சனை, காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளித் தொல்லை, சிறு நீர்க் கோளாறு போன்றவற்றை குணப்படுத்துகிறது.

உடலுக்கு வலுவை தரும்

வல்லாரைத் தூள் 100 கிராம், அமுக்கரா கிழங்குத்தூள் 100 கிராம் அளவு எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். இந்த கலவையை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இரண்டு கிராம் அளவு தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, ஆரோக்கியம் உண்டாகும். இளைத்த உடல் பருக்கும்.

ரத்த சோகை குணமாகும்

சிறிது கைப்பிடி அளவு வல்லாரை இலைகளையும், அதே அளவு மணத்தக்காளி கீரையையும் எடுத்து அரைத்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரண்டு வாரத்தில் ரத்த சோகை நோய் முற்றிலும் குணமாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நகங்களை பராமரிப்பது எப்படி

கை மற்றும் கால் நகங்களை அழகாக வைத்திருக்க சில டிப்ஸ்

அழகான நகங்களை பெற    நம் உடலின் மற்ற பாகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல நகங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நகங்களை அழகாக வைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். நகங்களை பராமரிப்பதில் ஆண்களை காட்டிலும்...
கண்களை குளிர்ச்சியாக்கும் வெள்ளரிக்காய்

கண்களுக்கு குளிர்ச்சியை தரும் சிறந்த உணவுகள்

கண்களுக்கு குளிர்ச்சியை தரும் சிறந்த உணவுகள் உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, வேலைப்பளு போன்றவற்றால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போவதால், அடிக்கடி கண்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாக, சிறு வயது முதலே...
திப்பிலி மருத்துவ குணங்கள்

திப்பிலி மருத்துவ பயன்கள்

திப்பிலி திப்பிலி ஒரு மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது ஆங்கிலத்தில் ‘Long Pepper’ என அழைக்கபடுகிறது. இது இந்தியாவின் வெப்பமான...
tamil vidukadhaigal

Riddles with Answers | Vidukathaigal and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் விடுகதைகள்   இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
திதியும் நெய்வேத்தியமும்

எந்த திதிக்கு என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்

திதி என்றால் என்ன ? இறை வழிபாடு என்பது நாம் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். இறைவழிபாடு செய்யும்போது மனம் அமைதி அடையும், மன நிம்மதி உண்டாகும், புத்தி தெளிவடையும், எதிர்மறை எண்ணங்கள்...
tamil puzzles with answers

Riddles with Answers | Brain Teasers and Puzzles | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
மாசி மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள்

மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் கும்பராசியில் சஞ்சரிக்கும் காலம் மாசி மாதமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தியாக மனபான்மை உள்ளவர்கள். குடும்பத்திலும், சொந்த பந்தங்களிடத்திலும் சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வார்கள். காரியங்களை திட்டம் போட்டு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.