துளசி
துளசி மூலிகைகளின் ராணி என அழைக்கபடுகிறது. துளசியில் உள்ள மருத்துவ குணங்களால் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசியின் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. துளசி 50 cm வரை வளரக் கூடியது. துளசியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டது. இது பூஜைகளில் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் வீடுகளில் துளசியை வளர்த்து பூஜிக்கும் வழக்கம் இன்றளவும் உண்டு. இது தானாக காட்டிலும், பயிரிடப்பட்டும் வளர்கிறது.
துளசியின் வேறு பெயர்கள்
துளசியானது திருத்துளாய், துளவு, அரி, இராம துளசி, குல்லை, வனம், விருந்தம், துழாய், துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. துளசியின் இலை, விதை போன்ற அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை.
துளசியின் வகைகள்
துளசியில் நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, காட்டு துளசி என மொத்தம் 22 பலவேறு வகைகள் உள்ளது. துளசியில் 22 வகைகள் இருந்தாலும் நாம் அதிகமாக பயன்படுத்துவது ‘இராம துளசி” (வெண் துளசி) மற்றும் கிருஷ்ண துளசி (கறுப்புத் துளசி, நீலத் துளசி) தான். துளசியை பச்சையாக சாப்பிடுவது இருமல், சளிக்கு மிகவும் நல்லது.
துளசியின் மருத்துவக் குணங்கள்
சர்க்கரை நோயை தடுக்கலாம்
துளசி உடலிற்கு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. துளசி இலையைப் ஊற வைத்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.
நாற்றத்தை போக்கும்
ஒரு சிலருக்கு என்னதான் சுத்தமாக இருந்தாலும் உடலில் ஒரு வித வாடை வரும். அப்படியானவர்கள் உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து குளித்தால் நாற்றம், வாடை போன்றவை வராது.
தோல் வியாதிகளை போக்கும்
தோல் நோய்களான படை, சொரி, சிரங்குகளை துளசி இலையால் குணமடையச் செய்யலாம். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் தோல் நோய்கள் அண்டாது.
பலவித நோய்களை குணமாக்கும்
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்கும் சக்தி உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
துளசி இலைச் சாற்றில் தேன், இஞ்சி கலந்து ஒரு தேக்கரண்டி குடித்து வரலாம். சளி, மற்றும் இருமல் பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை துளசிக் கஷாயம் கொடுத்தால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பேன், பொடுகு தொல்லை நீங்கும்
பேன், பொடுகு தொல்லை நீங்க துளசி சாறு எடுத்து அதனுடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
நச்சுக்களை வெளியேற்றும்
துளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். ஈரலில் உள்ள ஜீரண நீர்களை தூண்டி நஞ்சுகளை வெளியேற்றும். கெட்ட கொழுப்பை நீக்கும் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
விஷத்தை முறிக்கும்
தேள் கொட்டிவிட்டால் கடுகடுப்புடன் வலி இருக்கும். தேள் கொட்டிய இடத்தில் துளசி இலைகளை வைத்து தேய்த்து விட்டால் உடனே விஷம் இறங்கி விடும். தேள் கடிக்கு இது தான் முதல்உதவி. ஒன்பது கருந்துளசி இலையை மென்று தின்று ஒரு மூடி முற்றின தேங்காயை உடைத்து சாப்பிட்டால் தேள் விஷம் முறியும்.
புத்துணர்ச்சி அளிக்கும்
துளசி ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து உடலின் செல்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து நரம்புகளை வலுவாக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும்.
வாயு, வயிற்று பிரச்சனைகளை போக்கும்
துளசி இலைகளை தண்ணீரில் ஊறப்போட்டு சில மணிநேரம் கழித்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் நாட்பட்ட வாயு, வயிற்று உப்பிசம் நீங்கும்.
இரத்தத்தை சுத்திகரிக்கும்
துளசி இலைச்சாறு ஒரு சக்தி மிகுந்த கிருமி நாசினியாகவும், ரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி சளித்தொல்லையை போக்கும்.
புற்று நோயை தடுக்கும்
தினமும் 20 துளசி இலையை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் ஆரம்பநிலையில் உள்ள புற்று நோய் குணமாகும். தினமும் காலை, மாலை என இருவேளை ஒரு கப் தயிருடன் 20 துளசி இலையை சாப்பிட்டால் கேன்சர் குணமாகும். தினமும் ஒரு துளசி இலை சாப்பிட்டால் புற்றுநோய் அண்டாது என்ற ஒரு பழமொழியே உண்டு.
பக்கவிளைவுகள் ஏற்படாது
துளசி இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டுக்கு எதிராக செயல்பட்டு ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து மக்களிடம் உள்ளது. துளசி உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேவையற்ற வெப்பத்தை குறைக்குமே தவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது.
எய்ட்ஸ் நோய்க்கு சிறந்த மருந்து
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் வைரஸ் தான் எய்ட்ஸ் நோய் வருவதற்கு காரணம். எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிப்பதன் மூலம் எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியும் என்பது இயற்கை மருத்துவ கருத்து. சக்தி வாய்ந்த வைரஸ் நோய்கிருமிகளையும் அழிக்கும் சக்தி துளசிக்கு இருப்பதால் துளசி இலை எய்ட்ஸ் நோய்க்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
கருப்பை பலம் பெரும்
பெண்களுக்கு மாத மாதம் ஏற்படும் மாத விலக்கு காலங்களில் பெண்கள் குளித்து முடித்த பின் துளசி விதையை நீருடன் ஊற வைத்து நெல்லிக்காய் அளவு 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கருப்பை தூய்மை அடைந்து கருப்பை பலம் பெறும்.