சீந்தில் கொடியின் மருத்துவ பயன்கள்

சீந்தில் கொடி

சீந்தில் என்பது மரங்களில் பற்றி படரும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் போன்ற மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம் மூடியிருக்கும். இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். இவை மரங்களின் மேல் ஏறிப் படரும். இதன் கொடியை அறுத்து விட்டாலும் பட்டு போகாது. காற்றிலுள்ள நீரை உறிஞ்சி வாழும் தன்மையுடையது.

சீந்தில் கொடியின் மருத்துவ பயன்கள்

சீந்தில் கொடிக்கு சோமவல்லி, அமிர்தவல்லி, அமிர்தை, அமிர்தக் கொடி, குண்டலி போன்ற பெயர்களும் உண்டு. அனைத்து விதமான மிதமான மற்றும் உஷ்ண பிரதேசங்களிலும் காணப்படும். குறிப்பாக பெரிய மரங்களில் அதிகம் படர்ந்து காணப்படும். இதன் முழுத் தாவரமும் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது.

சித்த மருத்துவத்தில் சீந்தில்

சித்த மருத்துவத்தில் சீந்தில் கொடியை கற்ப மருத்துவ குணம்  கொண்டதாக கூறப்பட்டுள்ளது. (கற்ப மருந்து என்பது மனிதன் நீண்ட நாள் உயிர் வாழ உதவும் என்று பொருள்) கிராமங்களில் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க சீந்தில் கொடியின் சிறு துண்டை எண்ணெய்யில் வறுத்து ஆற வைத்து தலைக்குத் தேய்த்து குளிப்பாட்டுவது வழக்கம். ஜலதோஷத்திற்கு சீந்தில் கொடியிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள். முற்றிய சீந்தில் கொடியிலிருந்து சீந்தில் சர்க்கரை என்னும் வெண்மையான பொடி தயாரிப்பார்கள். அதற்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர். சித்த மருத்துவதில் சீந்தில் சர்க்கரை உபயோகப்படுத்தபடுகிறது.

சீந்தில் கொடியின் மருத்துவப் பயன்கள்

பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்

நீரிழிவு, இருமல், மண்ணீரல் கோளாறுகள், கபம், வாந்தி, காமாலை, ஜுரம், பலவீனம், அஜீரணம், வாதநோய், கிரந்தி போன்ற நோய்களால் பாதிக்கபட்டவர்களுக்கு சீந்திலை கஷாயம் போல செய்து சாப்பிட்டால் பூரண குணம் பெறலாம்.

மூட்டு வலி குணமாகும்

ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டுவலியால் உண்டாகும் கடுமையான மூட்டு மற்றும் இணைப்பு வலிகளை சீந்தில் கொடி கொண்டு குணமாக்கலாம். சீந்தில் தண்டை பொடி செய்து, பாலில் கலந்து கொதிக்க வைத்து, குடித்தால் மூட்டு வலி பறந்தோடும்.

வீக்கத்தை கரைக்கும்

புண்கள், வீக்கம், கட்டி போன்றவற்றிக்கு சீந்தில் இலையை வாட்டி பற்று போல போட்டால் விரைவில் வீக்கம் மற்றும் புண்களை ஆற்றும். மேலும் சீந்தில் இலையை வேப்ப எண்ணெய்யில் வதக்கி புண்களின் மேல் வைத்துக் கட்டி வந்தாலும் புண்கள் ஆறும். மேலும் சீந்தில் கொடி எல்லா கஷாயங்களிலும் உப பொருளாக பயன்படுத்தபடுகிறது.

பார்வைத்திறன் மேம்படும்

சீந்தில் பொடியை நீரில் கொதிக்க வைத்து அதனை கண்களின் மேல் தடவி வந்தால், கண் பார்வை தெளிவடையும்.

ஆஸ்துமாவை கட்டுபடுத்தும்

சீந்தில் கொடியிலுள்ள ஆன்டி கிளைசமிக் குணங்கள், குளுகோஸ் ரத்தத்தில் அதிகமாவதை தடுத்து, கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதே போல், ஆஸ்துமா மற்றும் மூச்சிரைப்பு , வறட்டு இருமல் ஆகிய பிரச்சனைகளை சீர் செய்கிறது.

மயக்கத்தை போக்கும்

வெயில் காலத்தில் வரும் மயக்கம், கிறுகிறுப்பு ஆகிய அனைத்து பிரச்சனைக்கும் சீந்தில் தண்டுச் சாற்றைப் பசும்பாலில் கலந்து உட்கொண்டால் போதும்.

சீந்தில் கொடியின் மருத்துவ குணங்கள்

மலசிக்கலை தீர்க்கும்

சீந்தில் பொடி ஜீரண சக்தியை தூண்டும் தன்மை கொண்டது. மேலும் மலச்சிக்கலை சரி செய்யும். அரை கிராம் சீந்தில் பொடியை நெல்லிக்காயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

காய்ச்சலுக்கு அருமருந்து

சீந்தில் கொடி அடிக்கடி வரும் காய்ச்சலுக்கு சிறந்த மூலிகை மருந்தாக விளங்குகிறது. இதிலுள்ள மருத்துவ குணங்கள் காய்ச்சலின் அறிகுறிகளை முறியடிக்கிறது. மிகவும் தீவிர காய்ச்சல்களான டெங்கு, மலேரியா மற்றும் ஸ்வைன் ஃப்ளூ ஆகியவை நெருங்க விடாமல் விரட்டி அடிக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

how to make somas

சுவையான மொறு மொறு சோமாஸ் செய்வது எப்படி ?

சோமாஸ் தேவையான பொருட்கள் மைதா - 1 கப் உப்பு - சிறிதளவு உருக்கிய டால்டா (அ) நெய் - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு பூரணம் செய்ய ரவை...
தூதுவளை நன்மைகள்

தூதுவளை மருத்துவ குணங்கள்

தூதுவளை தூதுவளை என்பது உணவிலும் மருத்துவத்திலும் அதிகம் பயன்படும் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை கொடியாகும். சித்தர்கள் சுட்டிக்காட்டியுள்ள காயகற்ப மூலிகைகளில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை...

Puzzles with Answers | Tamil Puthirgal | Brain games in Tamil | Brain Teasers...

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
தீ விபத்துக்கான முதலுதவிகள்

தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

தீ விபத்து ஏற்பட்டால் நாம் எதிர்பார்க்காத நேரங்களில் வீட்டிலோ, அலுவலகத்திலோ, வேறு இடங்களிலோ தீ விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அந்த சமயத்தில் நாம் என்ன மாதிரியான முன் எச்சரிக்கை மற்றும் முதலுதவி நடவடிக்கைகளை...
நவகிரக தோஷம் விலக

செவ்வாய் தோஷம் ஏன் ஏற்படுகிறது? செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்கள்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக பார்க்கபடும் ஒன்று செவ்வாய் தோஷமாகும். செவ்வாய் தோஷம் இருப்பவருக்கு திருமணம் தாமதமாக நடைபெறும், அல்லது திருமணம் நடைபெறுவதில் பல்வேறு தடைகள் ஏற்படும்....
குடைமிளகாய்

உடல் எடையை எளிதாக குறைக்க உதவும் 10 காய்கறிகள்

எடை குறைக்க உதவும் காய்கறிகள்  உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதில் பலருக்கும் தற்போது  விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. உடல் எடை அதிகரிப்பால் உடல் பருமன் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் உடலில் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன. எடை...
தொடை கறி

ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி தேவையான பொருட்கள் மட்டன்  (தொடை கறி) - ½ கிலோ வினிகர் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 ஸ்பூன் ...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.