சுவாச பிரச்சனைகளை நீக்கும் அற்புத சக்தி கொண்ட முசுமுசுக்கை கீரை

முசுமுசுக்கை கீரை

முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக படர்ந்து வளர்ந்திருக்கும். முசுமுசுக்கை செடியின் இலை, மற்றும் தண்டுகளில் சிறிய முட்கள் போன்று இருக்கும் மயிரிழைகள் காரணமாக இது சொரசொரப்பாக இருக்கும். இவை துவர்ப்பு மற்றும் கார்ப்பு சுவையுடன் இருக்கும். சிறிது உஷ்ணத்தன்மை கொண்டது. முசுமுசுக்கை கீரையின் இலைகள் முக்கோண வடிவில் இருக்கும். இதன் பழங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

முசுமுசுக்கை கீரை பயன்கள்

இது நுரையீரல் மற்றும் சுவாசக் பிரச்சனைகளுக்கு சிறந்த
மருந்தாக பயன்படுகிறது. முசுமுசுக்கை கப நோய்களை சரிசெய்யும் செய்யும் மூலிகையில் முக்கியமானது. கப நோய்களால் நாம் சோர்வுறும் போது நம்மை மீட்க கூடியது. நுரையீரலை சுத்தம் செய்யும் துப்புரவாளன் என்று சித்த மருத்துவத்தில் கூறுவார்கள்.

முசுமுசுக்கை கீரையின் வேறு பெயர்கள்

முசுமுசுக்கையானது கொம்புபுடலை, பேய்புடலை, மொசுமொசுக்கை, மாமுலி, ஆயிலேயம் எனவும் அழைக்கபடுகிறது.

முசுமுசுக்கை கீரையில் உள்ள சத்துக்கள்

உடலுக்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய முசுமுசுக்கை கீரையில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்திருக்கிறது.

முசுமுசுக்கை கீரையின் மருத்துவ பயன்கள்

சுவாச பிரச்சனைகளை நீக்கும்

சுவாசக்குழல், சுவாசப்பையின் சிறு அறைகளில் ஏற்படும் புண்கள், அழற்சி, ஆகியவ்றை குணமாக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி சுவசபாதையை சுத்தம் செய்யும் சக்தி உடையது.

மனநிலையை சீராக்கும்

இக்கீரையை நன்றாக சுத்தம் செய்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் போல சுட்டு சாப்பிடலாம். இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் சோர்ந்து போன உடல் பலமாகும். மேலும் மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யும்.

ஆஸ்துமா, முச்சுத்திணறலை குணமாக்கும்

முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி மதிய உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் போன்றவை குணமாகும்.

முச்சிரைப்பு குணமாகும்

பரட்டைக் கீரை, தூதுவளை கீரை, முசுமுசுக்கை கீரை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குறையும்.

இளநரை ஏற்படாமல் தடுக்கும்

முசுமுசுக்கை இலையை தைலமாக தயாரித்து அதை வைத்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொண்டால் உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போன்றவை நீங்கும். இளநரை மற்றும் வழுக்கை ஏற்படாமல் தடுக்கும்.

இருமல் குணமாகும்

முசுமுசுக்கை இலையை சூரணமாக செய்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு, சுவாசநோய் போன்றவை குணமடையும். முசுமுசுக்கை பொடியை தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

தலை குளிக்க பயன்படுத்தலாம்

முசுமுசுக்கைக் கீரையை இடித்து சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு எண்ணெய்யாகவும், தலை குளிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

காச நோயை குணமாக்கும்

முசுமுசுக்கீரை காசநோயால் அவதிபடுபவருக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும். இந்தக் கீரை மட்டுமன்றி இதன் கிழங்கைக் கூட மருத்துவத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இதுவும் காச மற்று சுவாச சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்க கூடியது.

கண் எரிச்சல் குணமாகும்

கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை குளிக்க வேண்டும். மேலும் இடைவிடாத வாந்தி குணமாக முசுமுசுக்கை வேரை உலர்த்தி தூள் செய்து ½ தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் நீரில் இட்டு அது ½ டம்ளராக வரும் வரை சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

ரத்தத்தை சுத்திகரிக்கும்

3 பிடி முசுமுசுக்கை இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வந்தால் இரைப்பிருமல், மூக்குப் புண் போன்றவை குணமாகும், இரத்தமும் சுத்தமாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மூன்று முடிச்சு போடுவதின் அர்த்தம்

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ?

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ? திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள், நம்பிக்கைகள் நிறைந்ததாகும். திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. சில சடங்குகள் ஏன், எதற்காக செய்கிறோம்...
அஷ்டமி திதி பலன்கள்

அஷ்டமி திதி பலன்கள், அஷ்டமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

அஷ்டமி திதி அஷ்ட என்றால் எட்டு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை நாளிலிருந்து அல்லது பவுர்ணமி நாளிலிருந்து வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் அஷ்டமியை...
மச்ச சாஸ்திரம் என்றால் என்ன

மச்ச சாஸ்திரம் என்றால் என்ன? மச்ச பலன்களை எவ்வாறு கணிப்பது

மச்சம் என்றால் என்ன? நமது உடலில் தலையில் இருந்து கால் பாதம் வரை உள்ள தோலில் அமைந்துள்ள சிறு சிறு புள்ளிகள் தான் மச்சங்கள் ஆகும். இது மஞ்சள், நீலம், சிவப்பு, வெளுப்பு, கருப்பு...
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மற்றும் கன்னி உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன் உத்திரம் முதல் பாதத்தின் இராசி மற்றும் அதிபதி - சிம்மம் : சூரியன் உத்திரம் இரண்டாம்,...
வில்வ இலை பயன்கள்

வில்வம் மருத்துவ குணங்கள்

வில்வம் வில்வம் இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு என்று தனிசிறப்பு உண்டு. இம்மரம் 15 அடி முதல் 25 அடி...
மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் நன்மைகள் மற்றும் பயன்கள்

மங்குஸ்தான் பழம் மங்குஸ்தான் மரம் ‘குளுசியாசியே’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. இது பழங்களின் அரசி என அழைக்கபடுகிறது. இந்த பழம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து...
கனவுகள் உண்மையா

கனவுகள் பலிக்குமா, எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும்

கனவுகள் பலிக்குமா நாம் உறக்கத்தில் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் என்றும் இன்னும் சிலர் மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.