ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல்

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் இன்று பார்க்கப் போவது ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல்.

சிக்கன் வறுவல் செய்வது எப்படி தேவையான பொருட்கள் :

 1. சிக்கன் – 1/2 கிலோ
 2. பெரிய வெங்காயம் – 3
 3. இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
 4. கரம் மசாலா – 2 டீஸ்பூன்
 5. மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
 6. எண்ணெய் – தேவையான அளவு
 7. கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு

செய்முறை :

 1. முதலில் ½ கிலோ சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
 2. எடுத்து வைத்துள்ள 3 பெரிய வெங்காயத்தை சுத்தம் செய்து நீள வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 3. நறுக்கிய வெங்காயத்தை தனித் தனியே பிரித்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
 4. பின்னர் ஒரு வாணலியில் 4 முதல் 5 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
 5. எண்ணெய் நன்கு காய்ந்ததும் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ளவும்.
 6. இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
 7. இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கிய பின் 2 ஸ்பூன் கரம் மசாலாத் தூளை சேர்த்து சிறிது நேரம் வதக்கிக் கொள்ளவும்.
 8. இத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.
 9. பிறகு தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைக்கவும்.
 10. சிக்கன் நன்கு வெந்ததும் நீள வாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடத்திற்கு நன்கு கிளறி விடவும்.
 11. இறுதியாக மீண்டும் சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்து கொஞ்சம் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் சுவையான ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி : ராகு திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன் திருவாதிரை நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : மகேஸ்வரன் திருவாதிரை நட்சத்திரத்தின் பரிகார...
மார்கழி மாத பக்தியின் சிறப்பு

மார்கழி மாத சிறப்புகள் பற்றி தெரியுமா

மார்கழி மாத சிறப்புகள் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்கின்றனர். ஆனால், உண்மையில் பெருமாளுக்கு மட்டும் அல்ல, மார்கழி அனைத்து தெய்வங்களுக்குமே உகந்த மாதமாகும். அதனால் தான் மாணிக்க வாசகர் சிவபெருமானை போற்றி...
நவகிரக தோஷ பரிகாரகங்கள்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் யாவை

செவ்வாய் தோஷம் திருமணத்திற்கு வரன் பார்த்து பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக பார்க்கப்படும் ஒரு விஷயம் பிள்ளைக்கோ அல்லது பெண்ணுக்கோ ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதுதான். இந்த செவ்வாய் தோஷம் கிட்டத்தட்ட பலருடைய வாழ்க்கையை...
ஆண் கை பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்

ஆண் கை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் கை மச்ச பலன்கள் உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். மேலும், மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. ஒருவருக்கு மச்சம் இந்த இடத்தில் இருந்தால் இந்த மாதிரியான...
பிரதோஷ சிறப்புகள்

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும்

பிரதோஷம் பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை...
pineapple kesari recipe

பைனாப்பிள்  கேசரி செய்முறை

பைனாப்பிள்  கேசரி செய்முறை  தேவையான பொருட்கள் ரவை – 1 கப் சர்க்கரை – ¾ கப் தண்ணீர் – 2 கப் கேசரி கலர் - சிறிதளவு அன்னாசிபழத் துண்டுகள் – ½...
மருதாணி இலை பயன்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி இலை

மருதாணி இலை மருதாணியை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். பெண்மை என்பதே அழகுதான். அந்த அழகுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது மருதாணியாகும். மருதாணியானது மைலாஞ்சி, மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் என வேறு பெயர்களாலும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.