பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா

பாதாம் அல்வா செய்வது எப்படிதேவையான பொருள்கள்

  1. பாதாம் பருப்பு – 1 கப்
  2. சர்க்கரை – ¾ கப்
  3. நெய் – ¼ கப்
  4. தண்ணீர் – சிரிதளவு

செய்முறை

  1. பாதாம் பருப்பை வெந்நீரில் இரண்டு மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. நன்கு ஊறிய பின்னர் பாதாம் பருப்பின் தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும்.
  3. உரித்த பாதாம் பருப்பை ஒரு மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  4. அடிகனமான ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் பாத்திரமாக இருந்தால் மிகவும் சிறந்தது. அல்வா நன்கு ஒட்டாமல் வரும்.
  5. பாத்திரம் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு அரைத்து வைத்துள்ள பாதாம் விழுதை சேர்க்கவும்.
  6. எடுத்து வைத்துள்ள நெய்யில் பாதி  மற்றும் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்.
  7. நன்கு கைவிடாமல் கலந்து விடவும்.
  8. சர்க்கரை நன்கு கரைந்த பின் மீதமுள்ள நெய்யை சேர்க்கவும்.
  9. நெய் பிரிந்து வெளியே வரும் அதுவரை நன்கு கைவிடாமல் கிளறிவிடவும்.
  10. தேவைபட்டால் கேசரி கலர் அல்லது குங்குமப் பூவை பாலில் சேர்த்து கலந்து பின் சேர்த்துக் கொள்ளலாம்.
  11. வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  12. கடைசியாக பொடியாக நறுக்கிய பாதாம் சிறிதளவு சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான பாதாம் அல்வா தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

திருமண பொருத்தம் எத்தனை

திருமண பொருத்தம் என்றால் என்ன? அவை யாவை?

திருமண பொருத்தம் என்றால் என்ன? ஒருவருக்கு வாழ்க்கையில் முக்கியமான மற்றும் வாழ்வின் திருப்பு முனையாக அமைவது திருமண உறவுதான். இன்றைய நவநாகரீக உலகில் அறிவியலும், விஞ்ஞானமும் நன்கு வளர்ந்த இந்த காலக் கட்டத்தில் திருமணங்கள்...
மட்டன் சுக்கா வறுவல்

செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் செய்வது எப்படி

செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் தேவையான பொருட்கள் மட்டன் கால் – ½ கிலோ  ( எலும்பில்லாதது ) சோம்பு - ½ ஸ்பூன் பட்டை – 1 துண்டு கிராம்பு – 2 ...
கம்பு குழி பணியாரம் செய்முறை

இனிப்பு கம்பு குழி பணியாரம்

இனிப்பு கம்பு குழி பணியாரம் செய்வது எப்படி  கம்பு சத்து மிகுந்ததும், ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தானியமாகும்.  கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லதாகும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க...
பெண் கால் மச்ச பலன்கள்

பெண் கால் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் கால் மச்ச பலன்கள் சாமுத்திரிக லட்சனப்படி ஒரு பெண்ணிற்கு குறிப்பிட்ட இடங்களில் மச்சம் இருந்தால் அவருக்கு என்ன பலன்கள் உண்டாகும் என குறிப்பிடப்பட்டிற்கிறது. அந்த வகையில் இந்த பகுதியில் பெண் பாதம், மூட்டு,...
சூரிய தோஷம்

நான்கு முக்கிய தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும்

தோஷங்களும் பரிகாரங்களும் இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான ஜாதகங்களில் கீழ்கண்ட இந்த நான்கு தோஷங்கள் தான் அதிகம் காணப்படுகிறது. அந்த நான்கு தோஷங்கள் என்னென்ன? அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். செவ்வாய் தோஷம் ஜாதக கட்டத்தில்...
கிரகமாலிகா யோகங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம் (Graha Malika Yogam) ராகு, கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் மாலை போல அமைய பெற்று இருந்தால் அதற்கு கிரக மாலிகா யோகம் என்று...
மாங்கல்ய தோஷம் பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? பெண்ணின் ஜாதகத்தில் உள்ள சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவது தாமதமாகும் அல்லது அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காமல்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.