இனிப்பு கம்பு குழி பணியாரம் செய்வது எப்படி
கம்பு சத்து மிகுந்ததும், ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தானியமாகும். கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லதாகும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க கம்பு மிகவும் பயன்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் கம்பினால் செய்யப்பட்ட உணவினை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. கம்பு இனிப்பு பணியாரம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி – 1 கப்
- கம்பு – 1 கப்
- உளுந்து – ½ கப்
- பொடித்த வெல்லம் – 1 கப்
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
- தேங்காய் துருவல் – சிறிதளவு
- எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு
செய்முறை
- பணியாரம் செய்வதற்கு முதலில் உளுந்து, கம்பு , பச்சரிசி மூன்றையும் சுத்தம் செய்து கழுவி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 3 மணி நேரம் ஊறிய பின் மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த மாவில் பொடித்த வெல்லம் , தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- கலந்த மாவினை ஒரு 10 நிமிடத்திற்கு அப்படியே வைத்து விடவும்.
- 10 நிமிடத்திற்கு பின் பணியார கல்லில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி மிதமான தீயில் பணியார மாவினை ஊற்ற வேண்டும்.
- பணியாரம் ஒரு பக்கம் வெந்தவுடன் மற்றொரு பக்கம் திருப்பி விடவும்.
- இரண்டு பக்கமும் வெந்தவுடன் சுடச் சுட எடுத்து பரிமாறினால் சுவையான கம்பு இனிப்பு பணியாரம் ரெடி.