ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி

ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி

spicy chickkan grevy

தேவையான பொருட்கள்

 1. சிக்கன் – ½ கிலோ
 2. வெங்காயம் – 2  ( பொடியாக நறுக்கியது )
 3. தக்காளி – 2 ( பொடியாக நறுக்கியது )
 4. பச்சை மிளகாய் – 2 ( நீளவாக்கில் நறுக்கியது )
 5. துருவிய தேங்காய் – ½ கப்
 6. இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
 7. தனியா – 1 ஸ்பூன்
 8. கசகசா – 1 ஸ்பூன்
 9. சீரகம் – 1 ஸ்பூன்
 10. சோம்பு – ½ ஸ்பூன்
 11. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
 12. பட்டை துண்டு – 1
 13. ஏலக்காய் – 2
 14. கிராம் – 2
 15. மிளகாய் தூள் – ½ ஸ்பூன்
 16. உப்பு – தேவையான அளவு
 17. எண்ணெய் – தேவையான அளவு
 18. கருவேப்பிலை – சிறிதளவு
 19. கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

 1. முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
 2. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்துக் கொள்ளவும். சிக்க்கனில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 30 நிமிடம் வரை ஊற விடவும்.
 3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் வைத்து  தனியா, சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பை சேர்த்து சுமார் 2 நிமிடத்திற்கு நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
 4. வறுத்த பொருட்களை ஆற வைத்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
 5. ½ கப் தேங்காய் துருவலை மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் கசகசாவையும்  சேர்த்து நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 6. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
 7. எண்ணெய் சூடானதும் அதில் வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
 8. வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
 9. தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
 10. பின் இத்துடன் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
 11. சிக்கன் ஓரளவிற்கு வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விடவும், இத்துடன் சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
 12. மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
 13. தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க விடவும்.
 14. நன்கு கொதித்த பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதினை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
 15. தேங்காய் விழுது சேர்த்து அதிக நேரம் கொதிக்காமல் சிறிது நேரம் கொதித்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான காரசாரமான ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவது சரியா

பாம்பு புற்றுக்கு பால், முட்டை வைப்பது ஏன்?

பாம்பு புற்றுக்கு பால், முட்டை கோவில்கள், வயல்வெளிகள் ஆகியவற்றில் பாம்பு புற்று இருப்பதை பார்த்திருப்போம். பாம்பு புற்றுக்கு பால் மற்றும் முட்டை வைத்திருப்பதையும் பார்த்திருப்போம். நம் முன்னோர்கள் பாம்பிற்குப் பால் மற்றும் முட்டை வைப்பார்கள்....
ஆண் கால் பகுதி மச்சத்தின் பலன்கள்

ஆண் கால் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் கால்கள் மச்ச பலன்கள் உடலில் ஒவ்வொரு பாகத்தில் தோன்றும் மச்சங்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை மச்ச சாஸ்திரம் என்னும் நூல் விளக்குகிறது. அந்த வகையில் ஆணின் கால் பகுதியில் எந்த இடத்தில்...
யோகங்களின் வகைகள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #10

ஜாதக யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதக கட்டத்தில் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது...
பஞ்சமி திதி பலன்கள்

பஞ்சமி திதி பலன்கள், பஞ்சமி திதியில் செய்ய வேண்டியவை

பஞ்சமி திதி பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில...
வேதை பொருத்தம் என்றால் என்ன

வேதைப் பொருத்தம் என்றால் என்ன? எப்படி பார்ப்பது

வேதைப் பொருத்தம் என்றால் என்ன? வேதை என்கிற சொல்லுக்கு ஒன்றுக்கொன்று தாக்குதல் என்று அர்த்தம். வேதைப் பொருத்தம் என்பது வேதனையில்லாத வாழ்க்கையை அமைக்கக்கூடிய பொருத்தம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரம் மட்டும் வேதையாக...
சிவராத்திரி பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மஹா சிவராத்திரி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மார்ச் 1 ஆம் தேதி மஹா சிவராத்திரி...
சதுர்த்தசி திதி

சதுர்த்தசி திதி பலன்கள், சதுர்த்தசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

சதுர்த்தசி திதி சதுர்த்தச என்பதற்கு பதினான்கு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 14 வது நாள் சதுர்த்தசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.