மஹா சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம்

மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மஹா சிவராத்திரி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மார்ச் 1 ஆம் தேதி மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக அனைத்து சிவன் கோவில்களிலும் நடைபெற உள்ளது.

நாம் எந்த விரதம் இருந்தாலும், அதற்கான பலன்கள் என்ன, எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டு விரதம் இருப்பது நல்லது. அந்த வகையில் சிவராத்திரி தினத்தில் எப்படி விரதம் இருந்தால் சிவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

சிவராத்திரி பூஜை முறைகள் சிவராத்திரி என்றாலே இரவு முழுவதும் உண்ணா விரதம் இருந்து உறங்காமல் கண் விழித்து விரதமிருந்து முழு ஈடுபாட்டுடன் சிவ பெருமானை நினைத்து வழிபடும் ஒரு இரவாக இருந்து வருகிறது.

சிவராத்திரியில் பல வகைகள் உள்ளன. அவை மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று குறிப்பிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாசி மாத அமாவாசைக்கு முந்தைய நாள் வரும் சிவராத்திரியே மஹா சிவராத்திரியாக அனுஷ்டிக்கப்படுகிறது.

மஹா சிவராத்திரி அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் சிவ பெருமானுக்கு நன்கு ஜாம பூஜைகள் நடைபெறும். ஒரு கால பூஜைக்க்கும் மற்றொரு கால பூஜைக்கும் இடையே மூன்று மணி நேரம் இடைவெளி இருக்கும் என்பது தான் கணக்கு. இன்று மாலை 6 மணி முதல் அதிகாலை வரை தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். அனைத்து சிவபக்த்தர்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு ஈசனின் அருளை பெற வேண்டும்.

நான்கு கால பூஜைகள்

முதல் கால பூஜையில் கலந்து கொள்வோர் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருட்களான பால், தயிர், நெய், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் போன்றவற்றை வாங்கி கொடுக்கலாம்.

இரண்டாம் ஜாம பூஜையில் கலந்து கொள்வோர் பாயாசத்தை நிவேதனமாக வழங்குவது சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு செய்வதன் மூலம் தொழில் முன்னேற்றம் அடையும், செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

மூன்றாம் ஜாம பூஜையில் கலந்து கொள்வோர் அபிஷேக ஆராதனைகளை கண்டுகளித்து சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை செய்து நிவேதனமாக எள் சாதம் வழங்குவதன் மூலம் சிவனின் அருளை பரிபூரணமாக பெற முடியும். இந்த நேரம் லிங்கோத்பவ நேரமாக கருதப்படுவதால் விரும்பியபடி மரணம் நிகழும். துர்மரணங்கள் தவிர்க்கப்படும்.

நான்காம் ஜாம பூஜையில் கலந்து கொள்வோர் சுத்த அன்னம் எனப்படும் நெய்வேத்திய பொருளை நிவேதனம் செய்ய வேண்டும். உங்களால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். இவ்வாறு முறையாக வழிபடுவதன் மூலம் இறுதி காலத்தில் நிம்மதியாக வாழ்ந்துவிட்டு மோட்சம் அடையலாம்.

இரவு முழுவதும் கண்விழித்து உபவாசம் மேற்கொண்டு சிவநாமம் ஜெபித்து விரதம் இருப்பது மட்டும் முழுபலனையும் தந்துவிடாது. மறுநாள் பகல் முழுவதும் விழித்திருக்க வேண்டும் பூஜை புனஸ்காரங்கள் தான் முடிந்தாயிற்றே என்று படுத்து தூங்கிவிடக் கூடாது. சிவனை நினைத்து நெஞ்சுருகி விழித்திருப்பதன் மூலம் மகாசிவராத்திரியின் முழு பலனையும் அடையலாம் என்கிறது சாஸ்திரம்.

சிவராத்த்ரி விரதம் சிவராத்திரி அன்று நாம் செய்ய வேண்டியவை

சிவராத்திரி அன்று  நாம் அதிகாலையில் எழுந்தது  வீட்டை சுத்தம் செய்து, குளித்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறு அணிந்து, பஞ்சாட்சரம் என சொல்லக்கூடிய ’ஓம் நமசிவாய’ எனும் நாமத்தை கூறி, நாம் சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

எந்த ஒரு விரதத்தை தொடங்குவதற்கு முன் ஒரு நூலை மஞ்சளைத் தடவி, மஞ்சள் நூலாக்கி அதை கையில் கட்டிக் கொள்ளுங்கள். இந்த மஞ்சள் நூலை கட்டிக் கொண்டால் விரதம் ஆரம்பம் என பொருள்.

காலையில் நம் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு விரதத்தை தொடங்கலாம். அன்று முழுவதும் விரதமிருந்து, அன்று மாலை முதல் சிவ பூஜை செய்ய வேண்டியது அவசியம்.

இரவு முழுவதும் கண்விழித்துச் சிவ ஆராதனை செய்யப் போகிறவர்கள் இரவில் சிவ லிங்கத்திற்கு ஐந்து முறை அல்லது மூன்று முறை பூஜைகள் செய்ய வேண்டும்.

கோவிலில் சென்று வழிபடுவோர் கோவிலுக்கு வரும் பக்த்தர்களுக்கு தங்காளால் இயன்ற பிரசாதத்தை நெய்வேத்தியமாக வழங்குவது மிகவும் புண்ணியமாகும்.

இவ்வாறு சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனை நோக்கி வழிபட்டால் வாழ்வில் அனைத்து தடைகளும் நீங்கி வாழக்கை வளம்பெறும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சோம்பு தண்ணீர் நன்மைகள்

தினமும் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் சித்த மருத்துவத்தில் சோம்பு ஒரு சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சோம்பை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடித்து வந்தால் இரத்தில் இருக்கக்கூடிய அழுத்தத்தையும்,  இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த...
யோகங்கள் என்றால் என்ன

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #4

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது 2 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் உண்டாகும் யோகங்களை குறிப்பதாகும். அவ்வாறான சில கிரக இணைப்புகள் நல்ல பலன்களையும், சில தீய பலன்களையும் தரலாம்....
pineapple kesari recipe

பைனாப்பிள்  கேசரி செய்முறை

பைனாப்பிள்  கேசரி செய்முறை  தேவையான பொருட்கள் ரவை – 1 கப் சர்க்கரை – ¾ கப் தண்ணீர் – 2 கப் கேசரி கலர் - சிறிதளவு அன்னாசிபழத் துண்டுகள் – ½...
தவளை கனவு பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் உண்டாகும் பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
ஆவணியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சிம்மராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஆவணி மாதமாகும். இது தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதம் ஆகும். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும், வேங்கை மாதம் என்றும் சித்தர்கள்...
அமில பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

அமில பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

அமில பாதிப்பு ஏற்பட்டால் வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலங்கள் உபயோகப்படுத்துவோம். எவ்வளவுதான் ஜாக்கிரதையாக அமிலத்தை கையாண்டாலும் நம்மை அறியாமல் ஒரு சில விபத்துகள் ஏற்படும். மேலும்...
கற்றாழை வளர்ப்பது எப்படி

கற்றாழை மருத்துவ பயன்கள்

கற்றாழை கற்றாழை ஒரு பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த பேரினமாகும். இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் வளரும் தன்மை கொண்டது. கற்றாழை லில்லியேசி என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயகமாகக்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.