பறவைகளை கனவில் கண்டால் ஏற்படும் பலன்கள்

பறவை கனவு பலன்கள்

ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்களை பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளர்கள். அந்த வகையில் பல்வேறு விதமான பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

பறவைகள் கனவு பலன்கள்

பறவைகளை கனவில் கண்டால்

1. பறவைகள் பறப்பது போல கனவு வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்று அர்த்தம்.
2. பறவை முட்டையை கனவில் கண்டால் எந்த தொழிலில் இறங்கினாலும் அது வளர்ச்சி பெறும் என்று அர்த்தம்.
3. பறவை தன் குஞ்சுக்கு உணவு கொடுப்பது போல கனவு கண்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்று பொருள்.
4. பொதுவாக பறவைகள் கனவில் வந்தால் நாம் இருக்கும் இடத்தின் சூழ்நிலை மாறப்போகிறது என்று அர்த்தம்.
5. பறவைக்கு தானியம் தூவுவது போல் கனவு கண்டால், காதலில் வெற்றி பெற போகிறோம் என்று அர்த்தம்.
6. பறவையை கையில் தூக்கி கொண்டு போவது போல் கனவில் கண்டால், தேர்வில் வெற்றி வாகை சூட போகிறோம் என்று அர்த்தம்.
7. வானத்தில் பறவைகள் கூட்டமாகப் பறந்துசெல்வது போல கனவு வந்தால், நெடுநாட்களாக இருந்து வந்த துன்பங்கள் நம்மை விட்டு விலகும். புதிய பதவி தேடி வரும். புகழ் கூடும் என்று அர்த்தம்.

புறா கனவில் வந்தால்

புறா கனவு பலன்கள்

1. இரண்டு புறாக்கள் ஜோடியாக பறப்பது போல் கனவு கண்டால் உங்கள் நண்பர்களிடையே உள்ள நட்பில் விரிசல் விழும் என்று அர்த்தம்.
2. புறாவை பிடிக்க முயற்சி செய்வது போல் கனவு வந்தால் புதிய நண்பர்களின் நட்பை பெறுவோம் என்று அர்த்தம்.
3. புறாக்கள் கூட்டம் கனவில் வந்தால் சில உறவுகளை பிரிய நேரிடும் என்று அர்த்தம்.
4. வெள்ளை புறா கனவில் வந்தால் உத்தியோக மாற்றம் ஏற்படும் என்று பொருள்.
5. கருப்பு நிற புறா கனவில் வந்தால் துக்கமான செய்தி ஒன்று வரும் என்று அர்த்தம்.
6. புறா வேடன் கையில் இருப்பது போல கனவு கண்டால் அது நல்லதல்ல.

கழுகு கனவில் வந்தால்

1. கழுகு கனவில் வந்தால் யாரோ உங்களை கவிழ்த்து விட சதி செய்கிறார்கள் என்று அர்த்தம்.
2. கழுகு பிணத்தை கொத்தி தின்பது போல கனவு கண்டால் நமக்கு வியாதி ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடைபெறும் என்று பொருள்.
3. பருந்து அல்லது கழுகை கனவில் காண்பது நல்ல சகுனம் அல்ல.

காக்கா கனவில் வந்தால்

காக்கை கனவில் வந்தால்

1. காகம் தலையில் கொத்துவது போல கனவு கண்டால் கெடுதல் ஏற்பட போகிறது என்று பொருள்.
2. காகம் உங்களை பிடித்தது போல கனவு கண்டால் அளவுக்கு அதிகமான பொறுப்புகளை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ ஏற்படும்.
3. காகம் கத்துவது போல் கனவு வந்தால் திருட்டு நடக்க வாய்ப்பு இருப்பதன் அறிகுறியாகும்.
4. பொதுவாக காகத்தை கனவில் காண்பது நல்ல சகுனம் அல்ல.
5. காக்கா குளிப்பது போல கனவு கண்டால் நம்மை பிடித்த சனி தோஷம் விலக போகிறது என்று அர்த்தம்.
6. அண்டங்காக்கை கனவில் வந்தால் நெருங்கிய நண்பருக்கு அசம்பாவிதம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
7. காகம் கரைவது போல கனவு கண்டால் கெடுதலான காலம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

குயில் கனவில் வந்தால்

1. குயில் கனவில் வந்தால் நம் மனதுக்கு பிடித்தது போல நல்ல வாழ்க்கைத்துணை அமையும் என்று அர்த்தம்.
2. கருங்குயிலை கனவில் கண்டால் கெட்ட செய்திகள் வரும் என்று அர்த்தம்.
3. குயில்கள் சண்டை போடுவதை போல கனவு வந்தால் அது நல்ல சகுனம் அல்ல.

கோழி மற்றும் சேவல் கனவில் வந்தால்

சேவல் கனவில் வந்தால்

1. கோழி, அதன் குஞ்சுகளோடு உணவு தேடுவது போல் கனவு வந்தால், பழைய வீடு, மற்றும் கட்டிடங்களை சீர்செய்து புதுப்பிக்கும் நிலை ஏற்படும் என்று அர்த்தம்.
2. சேவல் கூவுவது போல் கனவு வந்தால், மிகப்பெரிய மாற்றங்கள் நம் வாழ்க்கையில் ஏற்பட போகின்றன என்று பொருள்.
3. கோழி மற்றும் சேவலை ஒன்றாக கனவில் வந்தால் நல்ல சம்பவங்கள் நடைபெற போகின்றன என்று அர்த்தம்.
4. வான்கோழி கனவில் வந்தால் நல்லதல்ல, குடும்பத்தில் சோக நிகழ்ச்சி நடைபெறும் என்று அர்த்தம்.

வாத்து மற்றும் அன்னம் கனவில் வந்தால்

1. வாத்து கனவில் வந்தால் நாம் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் என்று அர்த்தம்.
2. வாத்து மற்றும் குயிலை கனவில் கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகள் விரைவில் வெற்றி பெறும் என்று அர்த்தம்.
3. அன்னபறவை கனவில் வந்தால் தெய்வ அருள் கிட்டும்.
4. கறுப்பு நிற அன்னப் பறவையைக் காண்பது நல்லதல்ல.

கிளி கனவில் வந்தால்

1. ஒன்றுக்கும் மேற்பட்ட கிளிகளை கனவில் கண்டால் செய்யும் தொழில் மேலும் விருத்தி அடையும் என்று அர்த்தம்.
2. கிளிகள் தானியங்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் பொருள் சேதம் ஏற்படும் என்று அர்த்தம்.
3. கிளிகள் பறந்து செல்வது போல கனவு கண்டால், குழந்தை பருவ நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் ஏற்படும் என்று அர்த்தம்.               4. கிளி இறந்து போனது போல கனவு வந்தால் கடன்கள் ஏற்படும் என்று அர்த்தம்.

மயில் கனவில் வந்தால்

மயில் கனவு பலன்கள்

1. மயில் தோகையை விரித்து ஆடுவது போல கனவு வந்தால் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்து சேரும்.
2. மயில் அகவுவது போல கனவு கண்டால், கணவன் மனைவி இடையே உள்ள அன்பு அதிகமாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அர்த்தம்.
3. மயில், அல்லது வானம் பாடியை கனவில் கண்டால் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும் என்று அர்த்தம்.
4. மயில் பறந்து செல்வது போல கனவு கண்டால் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடைபெறும்.

குருவி கனவில் வந்தால்

1. குருவிகள் கனவில் வந்தால் குடும்பத்தில் உள்ள கஷ்டங்களும், நோய்களும் தீரும் என்று அர்த்தம்.
2. குருவிகள் ஜோடியாக இருப்பது போல கனவு வந்தால் நல்ல செய்தி ஒன்று வந்து சேரும் என்று அர்த்தம்.
3. குருவி கூடு கலைக்கப்படுவது போல கனவு கண்டால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்று அர்த்தம்.

வௌவால் கனவில் வந்தால்

வௌவால் கனவு பலன்கள்

1. வௌவால் தனியாகவோ, கூட்டமாகவோ கனவில் வந்தால் மிகவும் நல்லது.
2. வௌவால் வீட்டிற்குள் வந்தது போல கனவு கண்டால் கெட்ட செய்திகள் வரும் என்று பொருள்.
3. வௌவால் வீட்டிலிருந்து வெளியே செல்வது போல கனவு கண்டால் நமக்கு ஏற்பட்ட வறுமை நீங்கும் என்று அர்த்தம்.

மற்ற பறவைகள் கனவில் வந்தால்

1. கொக்கு கனவில் வந்தால் வயலில் விளைச்சல் அதிகரிக்கும் என்று அர்த்தம்.
2. தூக்கணாங்குருவி மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் மிகவும் நல்லது.
3. பாடும் பறவையை கனவில் கண்டால் மன மகிழ்ச்சி ஏற்படும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அர்த்தம்.
4. கௌதாரி கனவில் வந்தால் செய்யும் தொழிலில் மேன்மை ஏற்படும் என்று அர்த்தம்.
5. ஒரு ஆந்தையை கனவில் கண்டால் அது நல்லதல்ல. அதுவே ஆந்தை கூட்டத்தை பார்த்தால் மிகவும் நல்லது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

திப்பிலி மருத்துவ குணங்கள்

திப்பிலி மருத்துவ பயன்கள்

திப்பிலி திப்பிலி ஒரு மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது ஆங்கிலத்தில் ‘Long Pepper’ என அழைக்கபடுகிறது. இது இந்தியாவின் வெப்பமான...
அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்

அரிசி கழுவிய தண்ணீரில் மறைந்திருக்கும் அற்புத பயன்கள்

அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்  நம் சமையலைறையில் உள்ள பல பொருட்கள் நமது அழகை தக்கவைத்துக் கொள்ள பயன்படுகிறது. உதாரணமாக மஞ்சள் தூள், தயிர், அரிசி மாவு, தக்காளி, வெள்ளரிக்காய், இன்னும் பல உள்ளன....

காலை உணவை தவிர்க்கும் இல்லத்தரசிகளா நீங்கள் ?

காலை உணவை தவிர்க்கும் இல்லத்தரசிகளா நீங்கள் ? பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழலில் நிற்க நேரம் இல்லாமல் நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருகிறோம். குடும்பத்தின் ஆணி வேராக இருப்பது குடும்பத் தலைவி தான். என்னதான் கணவன்...
மொட்டை போடுவது ஏன்

பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் தெரியுமா

குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஒரு உண்மை மறைந்திருக்கும். அப்படிப்பட்ட...
தாரை வார்த்தல் என்றால் என்ன

திருமணத்தில் தாரை வார்த்தல் என்றால் என்ன?

தாரை வார்த்தல் என்றால் என்ன? திருமணம் செய்வதில் பல சடங்குகள் இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமானது தாரைவார்த்தல் சடங்காகும். ‘தாரை’ என்றால் நீர் என அர்த்தம். நீருக்குத் தீட்டில்லை. நீர் மந்திரநாத ஒலியின் அதிர்வை...
கனவு பலன்கள் வீடு

கட்டிடங்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

கட்டிடங்கள் கனவில் வந்தால் கனவுகள் காணாதவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அதற்கேற்றார் போல நாம் நம் தூக்கத்தில் எண்ணற்ற கனவுகளை காண்கிறோம். ஒரு சில சமயங்களில் அதிசயக்க வைக்கும் கனவுகளும் உண்டு. ஆனால் அந்த...
நட்சத்திர கணங்கள்

நட்சத்திர கணங்கள் மற்றும் அவற்றின் பண்புகள்

நட்சத்திர கணங்கள் ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் உள்ளன. 27 நட்சத்திரங்களுக்கு உண்டான கணங்கள் பற்றிய சில பொதுவான விஷயங்கள் குறித்து இப்பகுதியில் சற்று விரிவாக பார்ப்போம். பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் வழக்கம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.