சர்ப்ப தோஷங்கள் என்றால் என்ன? சர்ப்ப தோஷங்களின் வகைகள்

சர்ப்ப தோஷங்கள்

நம்முடைய ஜாதகத்தில் ஏதாவது இரு இடங்களில் ராகுவும், கேதுவும் இடம் பெற்றிருப்பார்கள். அனைத்து கிரகங்களும் ராகு – கேதுக்களுக்கு இடையில் அமைந்து, ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பூரண கால சர்ப்ப தோஷமாகும். ஏதேனும் ஒரு கிரகம் வெளியே அமைந்தாலும் அது கால சர்ப்ப தோஷம் ஆகாது. லக்னம், ஏழாம் வீடு தவிர மற்ற வீடுகளில் அமரும் ராகு – கேதுக்களைப் பொறுத்து சர்ப்ப தோஷம் பல வகைப்படும். அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்.

சர்ப்ப தோஷங்களின் வகைகள்

சர்ப்ப தோஷத்தின் வகைகள்

அனந்த கால சர்ப்ப தோஷம்

ராகு முதல் வீட்டிலும், கேது 7ம் வீட்டிலும் இருக்க, மற்ற கிரகங்கள் இவர்களுக்கிடையே அமைந்திருப்பது அனந்த கால சர்ப்ப தோஷம் ஆகும். இதை விபரீத கால சர்ப்ப தோஷம் என்றும் ஆனந்த கால சர்ப்ப தோஷம் என்றும் கூறுவார்கள். இந்த ஜாதக அமைப்பை பெற்றவர்கள் பல்வேறு இடையூறு, கஷ்டங்களை வாழ்க்கையில் அனுபவித்து, தங்கள் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னுக்கு வருவர். இவர்களுக்கு திருமணக் காலத்தில் சில இடையூறுகள் ஏற்படலாம்.

சங்கசூட சர்ப்ப தோஷம்

ராகு 9-ஆம் வீட்டிலும், கேது 3-ஆம் வீட்டிலும் இருக்கும் ஜாதக அமைப்பு சங்கசூட சர்ப்ப தோஷம் என அழைக்கபடுகிறது . இந்த ஜாதக அமைப்பை கொண்டவர்கள் நிறைய பொய்களை கூறுவர். இவர்கள் சற்று முன்கோபிகள் இவர்களின் வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

கடக சர்ப்ப தோஷம்

ராகு 10 ஆம் வீட்டிலும், கேது ஆம் வீட்டிலும் இருந்தால் அது கடக சர்ப்ப தோஷம் ஆகும். இவர்கள் வாழ்வில் நிறைய சட்ட சிக்கல்கள் வரும். அரசாங்கத் தண்டனை பெறுவார்கள். 10-ல் இருக்கும் ராகு இருட்டு சம்பந்தமான தொழிலைக் கொடுப்பர். ராகு சட்டத்திற்கு புறம்பான வேலைகளைச் செய்யத் தூண்டுவார்.

குளிகை சர்ப்ப தோஷம்

ராகு 2-ஆம் வீட்டிலும், கேது 8-ம் வீட்டிலும் இருந்தால் அது குளிகை சர்ப்ப தோஷம் ஆகும். இந்த ஜாதக அமைப்பை பெற்றவர்கள் உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்படும். இழப்புகள், விபத்துகள் நேரும். பொருளாதாரப் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். ராகு பலம் பெற்றிருந்தால் வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும்.

வாசுகி சர்ப்ப தோஷம்

ராகு 3-ம் வீட்டிலும், கேது 9-ம் வீட்டிலும் இருந்தால் அது வாசுகி சர்ப்ப தோஷம் ஆகும். இவர்களுக்கு தொழிலில் பிரச்சனைகள் ஏற்படும். இவர்கள் இளைய சகோதரர்களால் அதிகம் பாதிக்கபடுவார்கள்.

சங்கல்ப சர்ப்ப தோஷம்

ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் வீட்டிலும் இருந்தால் அது சங்கல்ப சர்ப்ப தோஷம் எனப்படுகிறது. இந்த ஜாதக அமைப்பை பெற்றவரின் வேலை, தொழில் கெடும். தாயாரின் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

பத்ம சர்ப்ப தோஷம்

ராகு 5-ம் வீட்டிலும், கேது 11-ம் வீட்டிலும் இருந்தால் அது பத்ம சர்ப்ப தோஷம் ஆகும். இந்த ஜாதக அமைப்பை பெற்றவர்கள் வீட்டில் குழந்தைகள் பிறப்பதில் பிரச்சனைகள் ஏற்படும். மேலும் இவற்றுடன் சந்திரன் கெட்டால் ஆவித் தொல்லை ஏற்படும். மேலும் நண்பர்களால் ஏமாற்றமும், நோய் உண்டானால் குணமாக தாமதம் ஏற்படும்.

மகா பத்ம சர்ப்ப தோஷம்

ராகு 6-ம் வீட்டிலும், கேது 12-ம் வீட்டிலும் இருந்தால் அது மகா பத்ம சர்ப்ப தோஷம் ஆகும். இவர்களுக்கு நோயினால் தொல்லைகள் உண்டாகும். இவர்களின் எதிர்காலம் இடையூறுகள் நிறைந்ததாக இருக்கும். 6-ம் அதிபதியை பொறுத்து தான் இவர்களின் நோய் குணமாகுதலும், எதிரிகளை வெற்றி கொள்ளுவதும் இருக்கும்.

தக்ஷக சர்ப்ப தோஷம்

கேது லக்னத்திலும், ராகு 7ம் வீட்டிலும் இருந்தால் அது தக்ஷக சர்ப்ப தோஷம் கொண்ட அமைப்பாகும். இவர்களுக்கு முன்யோசனையும் யூகம் செய்யும் ஆற்றலும் இயல்பாகவே அமைந்திருக்கும். இவர்கள் தான் பாடுபட்டு சேர்த்த செல்வத்தை மது, மாதில் இழப்பார். திருமண வாழ்வில் தொல்லைகள் ஏற்படும்.

கார்கோடக சர்ப்ப தோஷம்

ராகு 8ம் வீட்டிலும், கேது 2ம் வீட்டிலும் இருந்தால் அது கார்கோடக சர்ப்ப தோஷம் கொண்ட ஜாதக அமைப்பு ஆகும். இவர்களுக்கு தந்தையின் சொத்துக்கள் எளிதில் கிடைக்காது. இவர்களுக்கு எதிரிகள் அதிகமாக இருப்பார்கள்.

நாக தோஷம் நீங்க

விஷ்தார சர்ப்ப தோஷம்

ராகு 11ம் வீட்டிலும், கேது 5ம் வீட்டிலும் இருந்தால் அது விஷ்தார சர்ப்ப தோஷம் ஆகும். இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இவர்கள் அடிக்கடி பயணங்கள் செய்வர். இவர்களின் வாழ்க்கையின் பிற்பகுதி சிறப்பாக இருக்கும்.

சேஷநாக சர்ப்ப தோஷம்

ராகு 12ம் வீட்டிலும், கேது 6ம் வீட்டிலும் இருந்தால் அது சேஷநாக சர்ப்ப தோஷம் ஆகும். இந்த ஜாதக அமைப்பை கொண்டவர்கள் உடல் நலத்தில் பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். வழக்குகளில் சிக்கல் உண்டாகும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நீர் விபத்துகளுக்கான முதலுதவிகள்

நீரில் மூழ்கியவரை காப்பாற்ற செய்ய வேண்டிய முதலுதவிகள்

நீரில் மூழ்கியவருக்கான முதலுதவிகள் நீச்சல் தெரியாதவர்கள் ஆர்வமிகுதியில் குளம், ஏரி, ஆறு அல்லது கடலில் குளிக்கும் போதும், படகில் செல்லும் போதும், நீச்சல் பயிற்சியின் போதும், தண்ணீர் விளையாட்டுகளின் போதும், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிகளுக்கு...
பொடுகு பிரச்சனையை தீர்க்க

பொடுகை விரட்ட இந்த ஹேர் மாஸ்கை ட்ரை பண்ணுங்க

பொடுகை விரட்ட எளிய டிப்ஸ்  தலையில் உருவாகும் பூஞ்சைத் தொற்று மற்றும் வறட்சி காரணமாக பொடுகு ஏற்படுகிறது. இது தலையில் அரிப்பு, முகத்தில் பருக்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. எண்ணெய் வடியும் சருமம், வறண்ட...
சாக்லெட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

சாக்லெட் உடலுக்கு நல்லதா ? கெட்டதா ?

சாக்லெட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா ? குட்டீஸ் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே சாக்லெட் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். கடைக்கு அழைத்து சென்றால், அவர்களது கை சாக்லெட்டை பார்த்து...
மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மகர லக்னத்தின் அதிபதி சனி பகவனாவார். மகர லக்கினத்தில் பிறந்தவர்கள் சாமர்த்தியசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். மனதிடம் அதிகம் உள்ளவர்கள். கடினமாக உழைக்ககூடியவர்கள். எப்போதும் கம்பீரமும் புன்னகையுமாக வலம் வருவார்கள்....
கோவில் குளத்தில் காசு போடுவது

கோவில் குளத்தில் காசு போடலாமா?

கோவில் குளத்தில் காசு ஏன் போடுகிறார்கள் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களுக்கு நாம் சென்றால் அந்த கோவில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு சிலர் அதில் காசு போடுவதையும்...
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவவர்களாக இருப்பார்கள். கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். மெலிந்த தேகம், அறிவு, அழகு, மன உறுதி...
மாம்பழ பாயாசம்

சுவையான மாம்பழ பாயாசம் செய்முறை

மாம்பழ பாயாசம் தேவையான பொருட்கள் மாம்பழ விழுது - ஒரு கப் மாம்பழ துண்டுகள் - ½ கப் சர்க்கரை – ½ கப் பால் - 1 லிட்டர் நெய் – சிறிதளவு ...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.