ஆண் கை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் கை மச்ச பலன்கள்

உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். மேலும், மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. ஒருவருக்கு மச்சம் இந்த இடத்தில் இருந்தால் இந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று மச்ச சாஸ்திரம் என்னும் நூல் கூறுகிறது. ஜோதிடத்தில் மச்சத்தை வைத்தும் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியும் கூறுவார்கள். அந்த வகையில் இந்த பகுதியில் ஆணின் கைகள், விரல்கள், தோள்கள் பகுதியில் தோன்றியிருக்கும் மச்சங்களின் பலன்கள் பற்றி இந்த பகுதியில் விரிவாக் பார்ப்போம்.

ஆண் விரல் மச்ச பலன்கள்

ஆண் கை மற்றும் விரல் மச்ச பலன்கள்

ஆணின் வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள், மற்றும் சரளமான பணவரவு உண்டு. மேலும் பல நல்ல பலன்களைக் கொடுக்கும்.

ஆணின் இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு எதிர்பாராத வகையில் தோல்வி ஏற்படும். மேலும் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்

ஆணின் வலது கை கட்டை விரலில் மச்சம் இருந்தால் அவர்கள் செல்வ செல்வாக்குடன் ஆரோக்கியம் மற்றும் தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாய் இருப்பார்கள்.

ஆணின் இடது கை கட்டை விரலில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனைகள் அடிக்கடி தோன்றி மறையும்.

ஆணின் வலது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால் அவர்களின் தோற்றம் கம்பீரமாக இருக்கும், மற்றும் செல்வாக்கு நிறைந்தவர்களாய் இருப்பார்கள்.

ஆணின் இடது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால் அவர்கள் மற்றவர்கள் பார்வைக்கு அப்பாவியாக காட்சியளிப்பார்கள்.

ஆணின் வலது கை நடுவிரலில் மச்சம் இருந்தால் அவர்களின் தொழில் வியாபாரங்களில் இலாபம் அதிகம் கிடைக்கும்.

ஆணின் இடது கை நடுவிரலில் மச்சம் இருந்தால் அவர்கள் ஓரளவு வசதியான வாழ்க்கை வாழ்வார்கள்.

ஆணின் வலது கை மோதிர விரலில் மச்சம் இருந்தால் அவர்கள் அறிவு, ஆற்றல், புத்திசாலித்தனம் நிறைந்தவர்களாய் இருப்பார்கள்.

ஆணின் இடது கை மோதிர விரலில் மச்சம் இருந்தால் அவர்கள் யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிட மாட்டார்கள்.

ஆணின் வலது கை ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் அவர்கள் நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களாய் இருப்பார்கள்.

ஆணின் இடது கை ஆள்காட்டி விரலில் இருந்தால் மச்சம் இருந்தால் அவர்கள் கடுமையான உழைப்பின் மூலம் தான் பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கும்.

ஆணின் இடது புறங்கையில் மச்சம் இருந்தால் அவர்கள் சண்டை, சச்சரவு என்றாலே ஒதுங்கிவிடுவார்கள்.

ஆணின் வலது புறங்கையில் மச்சம் இருந்தால் அவர்கள் பலருடைய விரோதத்தை எளிதில் தேடிக்கொள்வார்கள்.

ஆண்களின் வலது அல்லது இடது கட்டை விரலின் அடியில் மச்சம் இருந்தால் உறவு பகையாகும். கெட்ட பழக்க வழக்கங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆண்களின் வலது கை சுண்டு விரலின் அடியில் மச்சம் இருந்தால் ஆயுள் பெருகும். தேவைக்கு சற்று அதிகமாகவே செல்வம் இருக்கும். நல்ல சந்ததி உண்டு.

ஆண்களின் இடது சுண்டு விரலின் அடியில் மச்சம் இருப்பது நல்லது அல்ல. அவர்களுக்கு மேலே சொன்ன பலன்களுக்கு நேர் மாறான பலன்கள் ஏற்படும்.

ஆண்களின் வலது கை நடுவிரல் அடியில் மச்சம் அனைத்து விதத்திலும் நல்ல பலன்கள் ஏற்படும்.

ஆண்களின் இடது நடுவிரல் அடியில் மச்சம் இருந்தால் அவ்வளவு நல்ல பலன்களைத் தராது.

ஆண்களின் வலது கை ஆள்காட்டி விரல் அடியில் மச்சம் இருந்தால் மிகுந்த யோகமான பலன்களைத் தரும். ஆனால் இவர்கள் கொஞ்சம் சுயநலக்காரர்களாக இருப்பார்கள். லாபம் இல்லாமல் எந்தக் காரியத்திலும் ஈடுபட மாட்டார்கள்.

ஆண் கை பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்

ஆண்களின் இடது கை ஆள் காட்டி விரலின் அடியில் மச்சம் இருந்தால் கொஞ்சம் அசடாக இருப்பார்கள்.

ஆண்களின் வலது கை மோதிர விரலின் அடியில் மச்சம் இருந்தால் மிக நல்ல பலன்களைத் தரும்.

ஆண்களின் இடது கை மோதிர விரலின் அடியில் மச்சம் இருந்தால் இவர்களின் மனம் ஒருமனதாக இருக்காது. மற்றவர்களுக்கு வாக்குக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆண் தோள் மச்ச பலன்கள்

ஆணின் வலது பக்க தோளில் மச்சம் இருந்தால் அவர்கள் தைரியம் நிறைந்தவர்களாய் இருப்பார்கள். ஆனால் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.

ஆணின் இடது பக்க தோளில் மச்சம் இருந்தால் அவர்கள் பதற்றப்படும் குணம் கொண்டவர்களாய் இருப்பார்கள்.

ஆண் பெண் மச்ச பலன்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

திணை இட்லி

திணை அரிசி இட்லி

திணை இட்லி திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற ஏரளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட மிகவும் சிறந்த உணவு திணையாகும். திணை இட்லி எப்படி செய்வது...
கன்னி ராசி குணங்கள்

கன்னி ராசி பொது பலன்கள் – கன்னி ராசி குணங்கள்

கன்னி ராசி குணங்கள் கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தின் 2,3,4 ஆம் பாதம், ஹஸ்தம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் மற்றும் சித்திரை நட்சத்திரத்தின் 1, 2...
சாத்துக்குடி பழம் மருத்துவ நன்மைகள்

மருத்துவ குணங்கள் நிறைந்த சாத்துக்குடி பழம்

சாத்துக்குடி பழம் சாத்துக்குடி பழம் சிட்ரஸ் வகை பழங்களில் ஒன்றாகும். தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில், சாத்துக்குடி தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் மத்திய தரைக்கடல் பகுதியின் பிராந்தியங்களில் சாத்துக்குடி வளர்க்கப்பட்டது. இது மெக்ஸிகோ...
ஏகாதசி திதி

ஏகாதசி திதி பலன்கள், ஏகாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

ஏகாதசி திதி ஏகாதசி என்ற வார்த்தையை ஏகம் – தசம் என இரண்டாக பிரிக்க வேண்டும். ஏகம் என்றால் ஒன்று, தசம் என்பது பத்து என்று அர்த்தம். இரண்டையும் கூட்டினால் 11. இது திதிகளின்...
தனுசு ராசி குணநலன்கள்

தனுசு ராசி பொது பலன்கள் – தனுசு ராசி குணங்கள்

தனுசு ராசி குணங்கள் தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். தனுசு ராசியில் மூலம், மற்றும் பூராடம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், உத்திராடம் நட்சத்திரத்தின் 1-ம் பாதமும் இதில் அடங்கியுள்ளன. இந்த ராசி...
how to make aval payasam in tamil

அவல் பாயாசம் செய்வது எப்படி ?

அவல் பாயாசம் தேவையான பொருட்கள் அவல் – 1 கப் வெல்லம் – ½ கப் பால் - 2 கப் ஏலக்காய் தூள்  - சிறிதளவு முந்திரிப்பருப்பு – தேவையான அளவு நெய்...
4 வகை ராசிகளும் அதன் குணங்களும்

4 வகை ராசிகளும், அதன் குணங்களும்

ராசிகளின் வகைகள் மற்றும் அதன் குணங்களும் நீரும், நெருப்பும் ஒன்றாக இணையாது. நிலத்தோடு காற்றும் இணையாது. ஆனால் நெருப்போடும் காற்றும், நிலத்தோடு நீரும் இணையும். அதுபோலத்தான் இணையாக உள்ள ராசிக்காரர்களை இணைத்தால் மட்டுமே இல்லறம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.