தழும்பை மறையவைக்கும் எளிய இயற்கை மருத்துவம்

தழும்புகள் மறைய வைப்பது எப்படி ?

தழும்புகள் பொதுவாக இறுக்கமான ஆடைகள் அணிவதால், அம்மை தழும்புகள், பிரசவத் தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தினால் ஏற்படும் தழும்புகள், விபத்தினால் ஏற்படும் தழும்புகள், அலர்ஜியினாலும் தழும்புகள் ஏற்படுகிறது.

நம் உடல் அழகை கெடுப்பதில் தழும்புகள் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன. சில தழும்புகள் எளிதில் மறைந்து விடும். சில தழும்புகள் நம் வாழ்நாள் முழுவதும் மறைவதில்லை. இவ்வகையான தழும்புகள் முகத்திலோ கை கால்களிலோ ஏற்பட்டால் அது நம் அழகை கெடுப்பதாக அமைந்து விடும். தழும்புகளை மறைய வைக்க எத்தனை க்ரீம்களை நாம் பயன்படுத்தினாலும் அதில் எந்த ஒரு பலனும் இருப்பதில்லை.

தழும்புகளை மறைய வைக்கும் சில இயற்கை மருத்துவ குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.

தக்காளிதக்காளிச் சாறு

தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும் அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டியோ அல்லது அதன் சாற்றையோ தழும்பு உள்ள இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால், தழும்புகள் நாளைடைவில் மறைந்து விடும்.

எலுமிச்சை மருத்துவ பயன்கள்எலுமிச்சை சாறு

சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள்.  எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

கற்றாழை வளர்ப்பது எப்படிகற்றாழை

கற்றாழையில் உள்ள ஜெல்லானது மருத்துவ துறையில் அதிகமாக பயன்படுத்தும் மிக சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் பளபளக்கும்.

almond oilபாதாம் எண்ணெய்

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

milkபால்

பாலில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். ஏனெனில் அந்த அளவிற்கு நன்மைகள் அடங்கி உள்ளது. எனவே தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்துக் குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.

olive oilஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது. அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் எளிதில் மறைய தொடங்கும்.

sandal powderசந்தன பவுடர்

சந்தன பவுடரை ரோஸ்வாட்டர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் பூசி ஒரு  மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

aarkadu makkan beda

ஆற்காடு மக்கன் பேடா செய்வது எப்படி

ஆற்காடு மக்கன் பேடா தேவையான பொருட்கள் மைதா - 1 கப் இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம் வெண்ணெய்  - 1 ஸ்பூன் சமையல் சோடா - 1 சிட்டிகை எண்ணெய்...
திதியும் நெய்வேத்தியமும்

எந்த திதிக்கு என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்

திதி என்றால் என்ன ? இறை வழிபாடு என்பது நாம் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். இறைவழிபாடு செய்யும்போது மனம் அமைதி அடையும், மன நிம்மதி உண்டாகும், புத்தி தெளிவடையும், எதிர்மறை எண்ணங்கள்...
12 ராசிகள்

உங்கள் ராசிக்கு என்ன தானம் செய்தால் யோகம் உண்டாகும்

  உங்கள் ராசிக்கு  என்ன தானம் செய்தால் யோகம் உண்டாகும்     மேஷம் மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இந்த இராசியில் சத்திரிய கிரகமான சூரியன் உச்சம் அடைகிறார். இவர்களுக்கு அஷ்டமாதிபதியும் செவ்வாயாக இருப்பதால்,...
avoidable food in the morning

காலையில் இந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள் காலையில் நாம் சாப்பிடக்கூடிய முதல் உணவு என்ன என்பதை தேர்வு செய்வதில் அலட்சியம் காட்டக் கூடாது. நாம் முதலில் சாப்பிடக் கூடிய உணவு நம் உடலுக்கும், உள்ளுறுப்புகளுக்கும் அந்த நாள்...
தரை பசலை கீரை நன்மைகள்

தரை பசலை கீரையின் மகத்தான மருத்துவ பயன்கள்.

தரை பசலை என்கிற சிறு பசலை தரையில் படரும் கீரை வகைகளுள் பசலை கீரை முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறு பசலை, தரை பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு...
சித்தர்களின் சமாதி நிலை

சித்தர்களின் சமாதி நிலை என்றால் என்ன?

சித்தர்களின் சமாதி நிலை பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்த்தல் என்ற செயல் மூன்றும் சேர்ந்த நிலை தான் சமாதி நிலை. சாதாரண மனிதனின் மரணத்துக்கும், இந்த சித்தர்களின் சமாதி நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது....
அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்

அரிசி கழுவிய தண்ணீரில் மறைந்திருக்கும் அற்புத பயன்கள்

அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள்  நம் சமையலைறையில் உள்ள பல பொருட்கள் நமது அழகை தக்கவைத்துக் கொள்ள பயன்படுகிறது. உதாரணமாக மஞ்சள் தூள், தயிர், அரிசி மாவு, தக்காளி, வெள்ளரிக்காய், இன்னும் பல உள்ளன....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.