கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் 

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள்

நம் முகத்திற்கு அழகை கொடுப்பதே நம் கண்கள் தான். நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும் கருவளையம் தான். அதிக நேரம் வெயிலில் அலைவதாலும், உடல் சூட்டின் காரணமாகவும் கருவளையம் ஏற்படலாம்.

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள்

கருவளையம் முகத்தின் வசீகரத்தை குறைத்து முக அழகினை கெடுத்து விடுகிறது.  கருவளையம் ஏற்பட மன அழுத்தமும், தூக்கமின்மை, மன உளைச்சல், அதிக நேரம் செல்போன் உபயோகப்படுத்துவது,  ஊட்டச்சத்து குறைபாடும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். எனவே சத்துள்ள உணவை உட்கொண்டு, சரியான நேரத்திற்கு தூங்குவதின் மூலமும் கருவளையத்தை சரி செய்ய முடியும்.

கருவளையம் நீங்க சில எளிய குறிப்புகள்

கருவளையம் வர காரணம் என்ன

 

 1. கண்களை முதலில் சுத்தமான நீரில் கழுவி விடுங்கள். பிறகு சுத்தமான காட்டனை எடுத்து பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைக்கவும். இவ்வாறு செய்வதால் கண்கள் குளிர்ச்சி அடைந்து கருவளையம் நாளடைவில் மறையும்.
 2. வெள்ளரிக்காயுடன் சம அளவு தக்காளி சேர்த்து நீர்விடாமல் அரைத்து அதன் சாறினை மட்டும் வடிகட்டி கண்களின் மீது தடவலாம்.
 3. உருளைகிழங்கை மிக்ஸியில் அடித்து அதன் சாறை பிழிந்து சுத்தமான காட்டனை அதில் நனைத்து சாறு இழுக்கும் வரை ஊறவிடவும். பிறகு அந்த காட்டனை எடுத்து கண்களின் மீது வைக்கவும்.
 4. பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல அரைத்து கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால் கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.
 5. 1 ஸ்பூன் மஞ்சள் தூளில், 2 ஸ்பூன் அளவு தேன் கலந்து நன்றாகக் குழைத்து கருவளையம் இருக்கும் இடத்தில் பேக் போல் போட்டுக்கொள்ளலாம்.
 6. ஒரு ஸ்பூன் தக்காளி சாருடன் ஒன்றரை ஸ்பூன் எலுமிச்சை சாறைக் கலந்து கருவளையத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.  ஒரு சில வாரங்களில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
 7. சுத்தமான தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும்.
 8. பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து அதில் பஞ்சை நனைத்து கண்களில் வைத்து சிறிது நேரம் கழித்து கண்களைக் கழுவினால் கண் கருவளையம் மறையும்.
 9. மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.
 10. எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து கண்ணுக்கு அடியில் ஒத்தி எடுக்க வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும்.
 11. குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து கண்களில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் மறையும்.
 12. ஆலிவ் ஆயில் கொண்டு கண்களில் மசாஜ் செய்தால் கண்கள் களைப்பு நீங்கி கருவளையம் மறையும்.
 13. வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்தால் கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி கருவளையங்களும் நீங்கிவிடும்.
 14. வெள்ளரிக்காயை பேஸ்ட் போல் அரைத்து கண்களில் தடவி கொள்ளவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் மறையும்.
 15. கண்ணுக்கு கீழே உள்ள கருப்பு வளையத்தை நீக்க  வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

prawn katlet

இறால் கட்லட் செய்வது எப்படி

இறால் கட்லட் தேவையான பொருட்கள் இறால் -  ½ கிலோ பெரிய வெங்காயம் – 1 ( பொடியாக நறுக்கியது ) இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் பச்சைமிளகாய் – 1...
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் அவிட்டம் நட்சத்திரத்தின் இராசி : மகரம் மற்றும் கும்பம் அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய் அவிட்டம் நட்சத்திரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பாதம் இராசி அதிபதி (மகரம்) : சனி அவிட்டம்...
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மற்றும் கன்னி உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன் உத்திரம் முதல் பாதத்தின் இராசி மற்றும் அதிபதி - சிம்மம் : சூரியன் உத்திரம் இரண்டாம்,...
பறவைகள் கனவு பலன்கள்

பறவைகளை கனவில் கண்டால் ஏற்படும் பலன்கள்

பறவை கனவு பலன்கள் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்களை பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளர்கள். அந்த வகையில் பல்வேறு விதமான பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம், பறவைகளை கனவில்...
27 நட்சத்திரங்கள் பெயர்கள்

27 நட்சத்திரங்கள் பற்றிய விரிவான ஒரு பார்வை

27 நட்சத்திரங்கள் ஒரு பார்வை ஜோதிடத்தில் மிக முக்கியமானது நட்சத்திரங்கள் ஆகும். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய பிறந்த ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ...
அதிரசம் செய்முறை

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்வது எப்படி

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் தீபாவளி அன்று நம் அனைவரது வீடுகளிலும் செய்யகூடிய பாரம்பரிய இனிப்பு வகையில் முக்கியமான ஒன்று அதிரசரமாகும். அதிரசத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெல்ல அதிரசம் மற்றொன்று சர்க்கரை அதிரசம்....
watermelon payasam

உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி

குளு குளு தர்பூசணி பாயாசம் தேவையான பொருட்கள் தர்பூசணி – 2 கப் ( பொடியாக நறுக்கியது ) நெய் – தேவையான அளவு முந்திரி, திராட்சை – தேவையான அளவு சர்க்கரை –...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.