உடலை வலுப்படுத்தும் உணவுகள்

உடலை வலுப்படுத்தும் உணவுகள் என்னென்ன?

உடலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள சத்தான உணவுகளை நாம் சாப்பிடுவது மிகவும் அவசியமாகும். உடல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருந்தால் தான் நம் தோற்றம் அழகாகவும் உடல் உறுதியாகவும் , சுறுசுறுப்புடனும் இருக்க முடியும்.

உடலை வலுப்படுத்தும் உணவுகள் எனவே நாம் சாப்பிடும் உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டு உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். நம் உடலை வலுவாக்க புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், கார்போஹைட்ரேட் போன்றவை மிகவும் அவசியமாகும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் சிலவற்றை நாம் பார்க்கலாம்.

பயிறு வகைகள்பயறு வகைகள்

உடலை வலுவாக்கும் உணவுகளில் முக்கியப் பங்கு வகிப்பது பயறு வகைகள். பயறு வகைகளில் புரதச் சத்து மிகுதியாக இருப்பதால், உடலின் சீரான வளர்ச்சிக்குப் புரதம் உதவுகிறது. உடலில் உயிரணுக்கள் உருவாவதற்கும், அவை வளர்ந்து பெருருவதற்கும், புரதச் சத்து அவசியம். தசைகள் வலுவடைவதற்கும், பொலிவு பெறுவதற்கும், புரத உணவு மிக அவசியம்.  தினமும் ஏதேனும் ஒரு பயறு வகைகளை நாம் சாப்பிடுவதின் மூலம் உடலுக்கு தேவையான புரதம் நமக்கு கிடைக்கிறது. இதை நாம் அப்படியே சாப்பிடுவதை காட்டிலும் முளைகட்டிய பயிருகளை சாப்பிடும்போது அதிகப்படியான சத்து நம் உடலுக்கு கிடைக்கிறது.

முட்டை முட்டை

நாம் சாப்பிடும் ஒவ்வொரு முட்டையிலிருந்தும் 6-ல் இருந்து 8 கிராம் வரையிலான புரதச் சத்து நமக்கு கிடைக்கிறது. இதில் எண்ணற்ற அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் முட்டையில் வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுசத்துகளும் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் உடல் வலுப்பெற உதவுகிறது.

தண்ணீர்தண்ணீர்

நம் உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அதேபோல, தசை திசுக்கள் 75 சதவிகிதம் தண்ணீரால் ஆனதாகும். எனவே தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது தசையின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இல்லையென்றால் நீர்வறட்சி ஏற்படும். இதனால் உடலின்  வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்பால் தசை வலிமை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தசையின் வலிமைக்கு உதவும்.

உடலை வலுப்படுத்தும் உணவுகள்மீன் எண்ணெய்

மீன் எண்ணெயில் தசை வளர்ச்சிக்குத் தேவையான ஆன்டி-இன்ப்ளாமிட்டரி   அதிக அளவில் உள்ளது. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். இதனால் உடலின் தேவையில்லாத கொழுப்புகள் குறைவதோடு, வலிமையான தசைகள் உருவாக உதவும்.

ஓட்ஸ்ஓட்ஸ்

இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதச்சத்து, தாதுப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடற்பயிற்சி செய்ததும் எடுத்துக் கொள்ள வேண்டிய சிறந்த உணவாகும் இது.

பசலைகீரைபசலைக்கீரை

பசலைக்கீரையில் உள்ள  பைட்டோசிடை ஸ்டீராய்டு (Phytoecdysteroids) என்ற வேதிப்பொருள் 20 சதவிகித தசை வளர்ச்சிக்கு உதவுவதாக, அமெரிக்காவில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அன்னாசி பழத்தின் பயன்கள்அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்னும் என்சைம் உள்ளது. இது தசைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதுடன், தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு இதைச் சாப்பிடுவது நல்லது.

வாழைபபழம்வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன்  ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும். உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமானால், அது தசை வளர்ச்சிக்கு உதவும்.

ப்ராக்கோலிபுரோக்கோலி

புரோக்கோலியுடன் தக்காளி, மக்காச்சோளம், மிளகு சேர்த்து சாலட்டாகச் சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின்-சி தசை திசுக்களின் ஆயுளை கூட்டும். நார்ச்சத்து , தாதுச்சத்துகளும் இதில் அதிகளவு உள்ளன. இவை தசை வளர்ச்சிக்கு உதவும்.

நார்ச்சத்து உணவுகள்பாதாம்

பாதாம்பருப்பில் கொழுப்புச்சத்து, புரதம், வைட்டமின்-இ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைவாக உள்ளன. இவை தசை வளர்ச்சிக்கு ஊட்டமளிப்பதோடு, வலிமைபெறவும் பெரிதும் உதவுகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மாம்பழ பாயாசம்

சுவையான மாம்பழ பாயாசம் செய்முறை

மாம்பழ பாயாசம் தேவையான பொருட்கள் மாம்பழ விழுது - ஒரு கப் மாம்பழ துண்டுகள் - ½ கப் சர்க்கரை – ½ கப் பால் - 1 லிட்டர் நெய் – சிறிதளவு ...
மூட்டு வலிக்கான தீர்வு

மூட்டு வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்

மூட்டு வலி பெரும்பாலானோர் மூட்டு வலி பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பலருக்கும் ஏற்படும் பாதிப்பாக அமைந்துள்ளது. மூட்டுகளில் வலி...
சிவகரந்தை நன்மைகள்

சிவக்கரந்தை மூலிகையின் மருத்துவ நன்மைகள்

சிவக்கரந்தை சிவக்கரந்தை மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு...

கடக ராசி பொது பலன்கள் – கடக ராசி குணங்கள்

கடக ராசி குணங்கள் கடக ராசியின் அதிபதி சந்திர பகவானாவார். கடக ராசியில் புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களின் அனைத்து பாதங்களும் அடங்கியுள்ளன. 12 ராசிகளில் இது 2வது சர...
தொடை கறி

ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி தேவையான பொருட்கள் மட்டன்  (தொடை கறி) - ½ கிலோ வினிகர் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 ஸ்பூன் ...
மந்திரம் என்றால் என்ன

எந்தெந்த விஷயங்களுக்கு என்ன மந்திரம் கூற வேண்டும்?

எந்தெந்த விஷயங்களுக்கு என்ன மந்திரம் கூற வேண்டும்? கோயிலில் சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது கோயில் குருக்கள் மந்திரங்கள் கூறி தீபாராதனை காட்டுவதை நாம் அனவைரும் பார்த்திருப்போம். இறைவனிடம் வந்து வேண்டுபவர்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும்,...
பூக்கள் கனவு பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் பலருக்கும் பலவிதமான வித்தியாசமான கனவுகள் ஒவ்வொரு நாளும் வரும். அதில் ஒரு சில விசித்திரமான கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.