எடை குறைக்க உதவும் காய்கறிகள்
உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதில் பலருக்கும் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. உடல் எடை அதிகரிப்பால் உடல் பருமன் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் உடலில் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன. எடை அதிகரிப்பால் நம் உள்ளுருப்புகளும் பாதிப்படைகிறது.
நாம் உண்ணும் உணவின் மூலமாகவே நம் உடல் எடையை குறைக்க முடியும். அதற்கு நாம் என்ன சாப்பிடுகிறோம், எப்படி சாப்பிடுகிறோம் என்பதை கவனித்து உண்பது முக்கியமானதாகும். உடலுக்கு தேவையான, சத்துக்கள் நிறைந்த, எளிதில் சேரிமானம் ஆக கூடிய உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும்.
தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு தான் உடலில் சேர்ந்து உடல் எடையை அதிகரித்து பருமனாக்கி விடுகிறது. அதிக கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிடுவதினாலும், நாளொன்றுக்கு பல முறை சாப்பிடுவதினாலும், உணவு சாப்பிட்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதாலும் உடல் பருமனாகி விடுகிறது.
மேலும் மருத்துவ ரீதியாக தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பி பாதிக்கப்படுவதாலும், பிட்யூட்டரி சுரப்பி நோயினால் தாக்கப்படும் போதும், சில மருந்து மாத்திரைகளால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளினாலும் உடல் எடை அதிகரிக்கின்றது.
உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்
- பருமனாய் இருப்பவர்கள் சிறிது தூரம் நடந்தாலே, மூச்சு வாங்கத் தொடங்கும்.
- கால்கள் தளர்ச்சியடைந்து முகுந்த வலி உண்டாகும். அடிக்கடி அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.
- சுறுசுறுப்பாக எந்த வேலையையும் செய்ய உடல் ஒத்துழைக்காது.
- முழங்கால் மூட்டுகளில் வலியும், வீக்கமும் தோன்றும்.
- இரத்த நாளங்களை சுருங்கச் செய்யும்.
- இருதய நோய்களை ஏற்படுத்தும்.
- உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கும்.
- மந்தமான மனநிலை ஏற்படும்.
- சர்க்கரை நோய் பாதிப்புகள் வரக்கூடும்.
- நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கும்.
- தைராய்டு பாதிப்புகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
உடல் எடையை குறைக்கும் காய்கறிகள்
சுரைக்காய்
சுரைக்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.சுரைக்காயில் நீர்ச்சத்து, வைட்டமின்கள்,தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. சுரைக்காயில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால் இது எடை இழப்புக்கு மிகவும் சிறந்தது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அஜீரணம், நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை, புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் குறையும். எனவே, இதனை அடிக்கடி உணவில் சேர்ப்பதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
குடைமிளகாய்
குடைமிளகாயில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்கள் உடல் எடையை குறைப்பதுடன் உடலை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. குடைமிளகாயில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் ஆகியவை குறைவாகவே உள்ளது. எனவே, குடைமிளகாய் உடல் எடையைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடல் எடை குறையும். ஏனெனில் வெள்ளரியில் கலோரிகள் மிகக் குறைவாக உள்ளன. இது தவிர, வெள்ளரிக்காயால் எடை அதிகரிப்பு ஏற்படாது. இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. வெள்ளரிக்கையை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உடல் எடை குறைந்துவிடும்.
பாகற்காய்
பாகற்காயில் இருக்கும் இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C , நார்ச்சத்து போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. கசப்பான பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதுடன், உடல் எடையை எளிதாக குறைக்கும்.
ப்ராக்கோலி
ப்ரோக்கோலி எடை இழப்புக்கு பெருதும் உதவும் அத்துடன் பல ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. அதேபோல் ப்ரோக்கோலி சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். ப்ராக்கோலியை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். இது கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கிறது.
பசலைக்கீரை
பசலைக்கீரை உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. இதில குறைவான அளவே கலோரிகள் உள்ளன. எனவே, இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. 100 கிராம் பசலைக்கீரையில் 26 கலோரிகள் உள்ளது. மேலும் இதில் உள்ள பி வைட்டமின்கள் மற்றும் மக்னீசியம் மெட்டபாலிச செயல்பாட்டிற்கு உதவி செய்து உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை உருகச் செய்யும். அதோடு பசலைக்கீரையில் உள்ள பொட்டாசியம், உடலில் நீரின் அளவைப் பராமரிக்க உதவும்.
பீன்ஸ்
பீன்ஸில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.
கேரட்
துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி ஆகியவை கேரட்டில் மிகுதியாக காணப்படுகின்றன. கேரட் சாப்பிடுவதால் உடல் பருமன் குறைகிறது.கேரட் கண்களுக்கு நல்லது. அதுமட்டுமின்றி உடல் எடையைக் குறைப்பதில் கேரட் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
தக்காளி
தக்காளி உடல் எடையை குறைத்திடவும் அழகான சருமத்தை பெறவும் தக்காளி பயன்படுகிறது. ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க தக்காளி பெரிதும் உதவுகிறது. உங்களுடைய டயட்டில் தக்காளி இருந்தால் கண்டிப்பாக உங்களால் உடல் எடையை குறைக்க முடியும். தக்காளியை தோல் மற்றும் விதையை நீக்கி சாறு தயாரித்து குடிப்பதால், அவை சிறுநீர் கிருமித்தொற்றை நீக்குகிறது.
வெங்காயம்
வெங்காயத்தில் உடலில் தங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கும் சக்தி அதிகமாக உள்ளது. எனவே, உடல் எடையை எளிதில் குறைக்கலாம். அதுமட்டுமின்றி இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கான மெட்டபாலிசத்தை வெங்காயம் தூண்டுகிறது. வெங்காயம் சாப்பிடுவது வயிறு நிறைவாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.