அழகான உடல் அமைப்பை பெற எளிய டிப்ஸ்
உடல் எடை அதிகரிப்பால் இன்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் அனைவரும் எதிர்ப்பார்ப்பது மெலிந்த அழகான உடல் அமைப்பை தான். நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதின் மூலம் ஸ்லிம்மான அழகான உடல் தோற்றத்தை பெற முடியும். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றின் மூலம் அழகான உடல் தோற்றத்தை பெற முடியும்.
தண்ணீர் :
தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. தண்ணீர் அதிக அளவில் குடிப்பதால் பசி குறையும். உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
கிரான்பெர்ரி ஜூஸ்:
நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கலோரிகளை குறைக்க கிரான்பெர்ரி ஜூஸ் உதவும்.
யோகர்ட், தேன்:
புரதச்சத்து அதிகம் உள்ள யோகர்ட், மெட்டபாலிசம் அதிகரிக்க உதவும்.
கேரட் ஜூஸ்:
ஊட்டச் சத்துக்கள் அதிகம் உள்ள கேரட் ஜூஸில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்கும் பித்தநீர் சுரக்க கேரட் ஜூஸ் உதவுகிறது.
சிட்ரஸ் ஜூஸ்:
ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை ஆகிய பழங்களில் சிட்ரஸ் அதிகம் உள்ளது. இதில் கலோரிகள் குறைவாக உள்ளன. மேலும், இவற்றில் வைட்டமின் C மற்றும் B அதிகம் உள்ளது.
கிரீன் டீ:
உடல் எடையை குறைத்து மெட்டபாலிசத்தை அதிகரிக்க கிரீன் டீ உதவும்.
ஆப்பிள் சைடர் வினிகர்:
ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அளவுகளை குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் உதவும்.
புரதச்சத்து மிகுந்த உணவு:
உணவில் புரதச்சத்து அதிகம் சேர்த்துக்கொண்டால் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, தசைகள் வலுவாகி, உடல் எடை குறைய உதவும்.
பாக்கெட் உணவுகள் வேண்டாம்:
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் சர்க்கரை, கொழுப்புச்சத்து, உப்பு, கலோரிகள் அதிகம் உள்ளன. நார்ச்சத்து, வைட்டமின், மினரல் சத்துக்கள் குறைவாக உள்ளன. எனவே அதை தவிர்ப்பது நல்லது.
உடல் எடையை சீராக பராமரிக்க இவற்றை கடைபிடிக்கவும்:
- உணவில் கவனம் தேவை
- போதியளவு தூக்கம்
- காலை உணவை தவிர்க்காதீர்
- சுறுசுறுப்பாக இருக்கவும்
- தவறாதுஉடற்பயிற்சி செய்யவும்
- புரதச்சத்து அதிகம்எடுத்துக்கொள்ளவும்.
உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும்போது கட்டாயம் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்.
- குளிர்பானங்கள்
- குக்கீஸ், கேக்
- உருளைக்கிழங்கு சிப்ஸ்
- கொழுப்பு மிகுந்த சிவப்பிறைச்சி
- மல்டி-கிரெய்ன் பிரெட்
- மைக்ரோவேவ் பாப்கார்ன்
- பீட்சா
- மாம்பழம், வாழைப்பழம், திராட்சை
- சோயா சாஸ்
- ஐஸ்கிரீம்
- சாக்லேட்
- எண்ணெயில் பொரித்த உணவுகள்
- தர்ப்பூசணி பழம்
- மதுபானம்
- பிரஞ்சு பிரைஸ்