திருமணத்தில் ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்?

ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்?

திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்களை அரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைக்கும் நடைமுறை காலம் காலமாக நமது வழக்கத்தில் உள்ளது. ஏன் ஆரத்தி எடுக்கிறார்கள் என பலருக்கும் தெரிவதில்லை. பலரும் இதை வெறும் திருஷ்டி கழிப்பதற்கான ஒரு சம்பிரதாயம் என நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், இது வெறும் திருஷ்டி கழிப்பதற்காக மட்டும் உண்டாக்கப்பட்ட ஓர் சடங்கு முறையல்ல.

இதற்கு பல அறிவியல் காரணங்கள் உண்டு. தம்பதிகளுக்கு தீய சக்திகளினால் தீமைகள் ஏற்படாமல் இருக்கவும், கண் திருஷ்டி ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அதை போக்கவும் இந்த ஆரத்தியானது எடுக்கப்படுகிறது.

ஆரத்தி எடுக்கபடுவது ஏன்

ஆரத்தி எதற்காக?

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரங்களில் ஒன்று ஆரத்தி எடுப்பது. ஆரத்தி எடுப்பது பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களில் காணலாம். ஆரத்தி எடுப்பதால் கண் திருஷ்டி நீங்கும் என நம் முன்னோர்கள் கூறுவார்கள். இதன் முக்கிய நோக்கமே, யாருக்கு ஆரத்தி எடுக்கிறோமோ அவருக்கு லட்சுமி, சரஸ்வதி ஆகிய இரண்டு தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும் என்பதாகும்.

ஆரத்தி வேறு எங்கெல்லாம் எடுக்கபடுகிறது?

ஆரத்தி தூர பயணம் முடித்து வருபவர்கள், புதிதாக திருமணம் முடித்த மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் மற்றும் குழந்தை, மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வருபவர்கள்  ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை நமது வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுக்கும் முறை

ஆரத்தி எப்படி எடுக்கபடுகிறது?

ஆரத்தி எடுப்பதற்கு முதலில் தாம்பாளத் தட்டில் மஞ்சளும் (லட்சுமி), சுண்ணாம்பும் (சரஸ்வதி) வைத்து எடுத்து கொள்ள வேண்டும். அந்த மஞ்சளையும், சுண்ணாம்பையும் சிறிது தண்ணீர் விட்டு கலக்க வேண்டும். மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்த தண்ணீர் சிவப்பு நிறமாக மாறும். பின்பு இதன் மேல் ஒரு வெற்றிலை வைத்து அதன் மேல் கற்பூரத்தை வைத்து ஏற்ற வேண்டும். இதை ஆரத்தி எடுக்க போகிறவரின் உடலை 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஏன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு?

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் சக்தியுண்டு. இது உடலிலுள்ள உள்ள கண்ணுக்கு தெரியாத விஷ கிருமிகளை அழிக்கிறது. ஆரத்தி சுற்றிய பின் அந்த ஆரத்தி எடுத்த நீரை கொட்டிவிட வேண்டும். யார் காலிலும் படாதபடி ஏதேனும் செடிக்கும் ஊற்றலாம்.

வாசலில் வைத்து ஆரத்தி எடுப்பது ஏன்?

வெளியில் இருந்து வரும்போது உடலில் பல நச்சு கிருமிகள் தொற்றியிருக்கும் நிலையில், வீட்டுக்குள் வரும்போது அது வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த பெரியவர்களை எளிதில் தொற்றிக்கொள்ளும். இதனால் அவர்களுக்கு உடலில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அதனால் தான் சம்பந்தப்பட்டவர்களை வாசலிலேயே நிற்க வைத்து ஆரத்தி எடுத்து வீட்டினுள் அழைத்து வருகிறார்கள்.

பலரும் இது ஓர் மூடநம்பிக்கை, வீண் சடங்கு என நினைத்து கொண்டிருகின்றனர். ஆனால் நமது முன்னோர்கள் செய்த செயல்களில் பல மருத்துவமும், அறிவியலும் மறைந்துள்ளது என்பது பலருக்கும் புரிவதில்லை.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தவளை கனவு பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் உண்டாகும் பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
கனவு பலன்கள் வீடு

கட்டிடங்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

கட்டிடங்கள் கனவில் வந்தால் கனவுகள் காணாதவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அதற்கேற்றார் போல நாம் நம் தூக்கத்தில் எண்ணற்ற கனவுகளை காண்கிறோம். ஒரு சில சமயங்களில் அதிசயக்க வைக்கும் கனவுகளும் உண்டு. ஆனால் அந்த...

சகட தோஷம் என்றால் என்ன? சகட தோஷ பரிகாரங்கள்

சகட தோஷம் சகட அல்லது சகடை என்றால் சக்கரம் என்று அர்த்தம். சக்கரம் எப்படி கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் செல்கிறதோ அது போல் இந்த சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாகச்...

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவான் ஆவார். இவர்களில் பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு, பெரிய வாய், அகலமான தோள்கள் கொண்டவராக இருப்பார்கள். கம்பீரமான உடல்வாகை...
நீர் விபத்துகளுக்கான முதலுதவிகள்

நீரில் மூழ்கியவரை காப்பாற்ற செய்ய வேண்டிய முதலுதவிகள்

நீரில் மூழ்கியவருக்கான முதலுதவிகள் நீச்சல் தெரியாதவர்கள் ஆர்வமிகுதியில் குளம், ஏரி, ஆறு அல்லது கடலில் குளிக்கும் போதும், படகில் செல்லும் போதும், நீச்சல் பயிற்சியின் போதும், தண்ணீர் விளையாட்டுகளின் போதும், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிகளுக்கு...
சித்தர்களின் சமாதி நிலை

சித்தர்களின் சமாதி நிலை என்றால் என்ன?

சித்தர்களின் சமாதி நிலை பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்த்தல் என்ற செயல் மூன்றும் சேர்ந்த நிலை தான் சமாதி நிலை. சாதாரண மனிதனின் மரணத்துக்கும், இந்த சித்தர்களின் சமாதி நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது....
கரிசலாங்கன்னி கீரை

கரிசலாங்கண்ணி மருத்துவ குணங்கள்

கரிசலாங்கண்ணி கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை என்பது ஒரு மருத்துவ மூலிகைச் மற்றும் கீரை செடியாகும். கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி ஆகும். மஞ்சள் நிற பூக்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.