பூச்சிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூச்சிகள் கனவில் வந்தால்

கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கும்போது நம்மை அறியாமல் வருவதாகும். குறிப்பிட்ட சில சமயங்களில், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. நாம் காணும் கனவில் வரும் பூச்சிகளை பொருத்து பலன்களும் மாறும். என்ன வகையான பூச்சிகள் கனவில் வந்தால் என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பது பற்றிப் விரிவாக பார்ப்போம்.

கனவில் பூச்சிகளை கண்டால்

1. எட்டுகால் பூச்சி கனவில் வந்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று அர்த்தம்.
2. சிலந்தி கனவில் வந்தால் பொருள் வரவுக்கு அதிகரிக்கும் என்று அர்த்தம்.
3. சிலந்தி கூட்டை கலைப்பது போல கனவு வந்தால் குடும்பத்தில் பாதிப்பு ஏற்படும் என்று அர்த்தம்.
4. கரப்பான்பூச்சி கனவில் வந்தால் குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
5. அந்து பூச்சியை கனவில் கண்டால் பொருள் இழப்பு ஏற்படும் என்று பொருள்.
6. அட்டைப்பூச்சி கனவில் வந்தால் எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
7. ஈக்கள் நம்மை சுற்றி சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகை அதிகரிக்கும் என்று அர்த்தம்.
8. ஈக்கள் மொய்ப்பது போல கனவு வந்தால் வியாதிகள் வரும் என்று அர்த்தம்.
9. தேனீக்கள் தேன் கொண்டு வருவது போலவும், கூட்டை கட்டுவது போலவும் கனவு கண்டால் குடும்பத்தில் நல்லது நடக்கும் என்று அர்த்தம்.
10. தேனீக்கள் கனவில் வந்தால், வாகனப் பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று பொருள்.
11. தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும்,குடும்பம் பிரியும்.
12. வண்டுகள் தேனை சேகரிப்பது போல் கனவு கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் என்று பொருள்.
13. பட்டாம்பூச்சி கனவில் வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும் என்று அர்த்தம்.
14. பட்டாம்பூச்சி வீட்டை விட்டு வெளியே செல்வது போல கனவு கண்டால் பண பற்றாக்குறை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
15. வெட்டுக்கிளியை கனவில் கண்டால் பார்க்கும் வேலையில் பாதிப்பு ஏற்படும் என்று அர்த்தம்.
16. பச்சை வெட்டுக்கிளி வயலில் இருப்பது போல கனவில் கண்பது நன்மை நடைபெற போவதன் அறிகுறியாகும்.
17. பூரான் கனவில் வந்தால் எதிர்பாராத பொருள் வரவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஜாதகத்தில் யோகங்கள்

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #6

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும், அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கோள்கள் இருக்கும் நிலையை வைத்து நிர்ணயிக்கபடுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...
எலும்பு முறிவு குணமாக

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள் எலும்பு முறிவு என்பது சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் ஏற்படுகிறது. ஆய்வின்படி 10ல் 6 பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது எலும்புமுறிவு பாதிப்புக்கு...
பிரதோஷ சிறப்புகள்

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும்

பிரதோஷம் பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை...
சாலை விபத்து ஏற்பட்டால்

சாலை விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

சாலை விபத்து ஏற்பட்டால் முதலுதவி சாலை விபத்து எதிர்பாரதவிதமாக ஏற்படுவது. மற்ற வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தான் அதிகம் விபத்தில் சிக்குகின்றனர். விபத்து ஏற்பட்டவுடன் என்ன செய்வது என்று பலருக்கும்...
மூன்று முடிச்சு போடுவதின் அர்த்தம்

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ?

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ? திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள், நம்பிக்கைகள் நிறைந்ததாகும். திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. சில சடங்குகள் ஏன், எதற்காக செய்கிறோம்...
6ம் எண் குணநலன்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 6ம் எண் சுக்கிரன் பகவானுக்குரிய எண்ணாகும். 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள். 6ம் எண்ணின் ஆதிக்கத்தில்...
கனவு பலன் திருமணம்

பொதுவான கனவு பலன்கள்

பொதுவான கனவு பலன்கள் நாம் தூக்கத்தில் காணும் எல்லா கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. சிலர் நமக்கு வரும் கனவுகள் நம் நினைவுகளின் கற்பனை வடிவம் என கூறுகின்றனர். அதாவது மனிதர்களின் ஆழ்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.