மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம், மிதுனம்
மிருகசீரிஷம் 1, 2ம் பாத நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம்
மிருகசீரிஷம் 3, 4ம் பாத நட்சத்திரத்தின் இராசி : மிதுனம்
மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய்
மிருகசீரிஷம் 1, 2ம் பாத நட்சத்திரத்தின் இராசி அதிபதி – ரிஷபம் : சுக்கிரன்
மிருகசீரிஷம் 3, 4ம் பாத நட்சத்திரத்தின் இராசி அதிபதி – மிதுனம் : புதன்
மிருகசீரிஷ நட்சத்திரத்தின் அதிதேவதை -: ஈஸ்வரன்
மிருகசீரிஷ நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் -: முருகன்
மிருகசீரிஷ நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் -: தேவகணம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தின் விருட்சம் -: கருங்காலி (பாலில்லா மரம்)
மிருகசீரிஷ நட்சத்திரத்தின் மிருகம் -: சாரை பாம்பு
மிருகசீரிஷ நட்சத்திரத்தின் பட்சி -: கோழி
மிருகசீரிஷ நட்சத்திரத்தின் கோத்திரம் -: அகத்தியர்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் வடிவம்

மிருகசிரிஷம் நட்சத்திரம் மிருகசிரீடம் எனவும் அழைக்கபடுகிறது. மிருகசிரீஷம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 5ம் இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘மான்றலை’ என்ற பெயரும் உண்டு. மிருகசிரீஷம் நட்சத்திரம் வான் மண்டலத்தில் மான் தலை போன்றும், தேங்காயின் மூன்று தலை போன்றும் காட்சியளிக்கும்.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிருகசிரீஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

மிருகசிரீஷம் நட்சத்திரகாரர்கள் எப்போதும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள் மற்றும் பண்போடு பழகக்கூடியவர்கள். நல்ல பேச்சுத்திறமை உடையவர்கள். இவர்கள் துணிவுடனும், யாருக்கும் பயப்படாத குணத்துடனும் இருப்பார்கள். கொஞ்சம் கர்வம், திமிர் தான் என்னும் அகந்தையும் உடையவர்கள். யாரையும் சார்ந்து இருக்க மாட்டார்கள். எப்பொழுதும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்.

இவர்கள் நல்ல உறுதியான உடல் அமைப்பை உடையவர்கள். இரகசியங்களை பாதுகாப்பவர்கள். தீர்க்கமான அறிவினை உடையவர்கள். தாய் மற்றும் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள். யார் சொல்லுக்கும் கட்டுப்பட மாட்டார்கள். எல்லாவற்றையும் தன் சுய சிந்தனையோடு செய்து முடிப்பார்கள். வாழ்வில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களுக்கு அபார நினைவாற்றல் இருக்கும். இவர்களுக்கு பல பெரிய மனிதர்களிடம் நல்ல மதிப்பும், மரியாதையும் அளிப்பார்கள்.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞானம் சார்ந்த கருத்துக்களை அறிந்தவர்கள். உற்சாகமுடையவர்கள். தனச்சேர்க்கை உண்டு. கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள். சாஸ்திர ஞானம் பெற்றவர்கள். தங்கள் கருத்துக்களை உடனடியாக வெளியிட மாட்டார்கள். ஆனால் பேச ஆரம்பித்தால் வார்த்தைகள் பளீர் என்று வரும். ஆணித்தரமாக பேசுவார்கள். வாழ்கையில் உயர்வு உண்டு. சத்தியம் தவறாதவர்கள். நேர்த்தியானவற்றை நன்கு உணர்ந்து பாராட்டக்கூடிய இவர்கள் எப்போதுமே, சரியான பாதையை தேர்ந்தெடுப்பார்கள்.

இவர்களுக்கு முன் கோபம் அதிகமிருக்கும். தேவையான இடத்தில தாழ்ந்தும் போவார்கள். தன் கண்முன் நடக்கும் தவறை பயமில்லாமல் தட்டி கேட்கும் தைரியம் கொண்டவர்கள். இவர்களுக்கு விட்டு கொடுக்கும் பண்பு குறைவு. உற்சாகமாக தனது பணிகளை செய்வார்கள். இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள். தனக்கென ஒரு தனி வழியை உருவாக்கி கொண்டு நடப்பார்கள். சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். சிறந்த நிர்வாக திறமை கொண்டவர்கள்.

மிருகசீரிஷம் நட்சத்திரம் முதல் பாதம் :

இவர்களிடம் மிருகசிரீஷ நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். மன பலம் உள்ளவர்கள். கல்வியில் ஓரளவு விருப்பம் உள்ளவர்கள். கலைகள் மூலம் இலாபம் அடையக்கூடியவர்கள். தன்னம்பிக்கை, துணிச்சல் உள்ளவர்கள். எல்லாம் தெரியும் என்ற கர்வம் உடையவர்கள். மற்றவர்களுக்கு கஷ்டமாக இருக்கும் காரியங்களையும் எளிதில் முடித்து காட்டுவார்கள். இவர்கள் பருமனான உடல் வாகு கொண்டவர்கள். இவர்களுக்கு சிறிய விஷயங்களுக்கும் அதிக கோபம் வரும்.

மிருகசீரிஷம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் மிருகசிரீஷ நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். புத்திசாலிதனம் உடையவர்கள். இரக்க குணம் கொண்டவர்கள். இவர்களுக்கு நல்ல கல்வியறிவும், தெய்வ பக்தியும் இருக்கும். எந்த காரியத்தை எடுத்து கொண்டாலும் அதில் திட்டமிட்டு செயலாற்றுபவர்கள். சொன்னதை செய்யக்கூடியவர்கள். இவர்கள் வாதம் செய்வதில் வல்லவர்கள். பிறருக்கு நன்றாக உபதேசம் செய்வார்கள். இவர்கள் ஆணாக இருந்தால் பெண்கள் மேல் அதிக ஈர்ப்பு இருக்கும்.

மிருகசீரிஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புபவர்கள். உத்தம குணங்களை கொண்டவர்கள். கலைஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் உயர்ந்த குணம் உடையவர்களாக இருப்பார்கள். வசீகரமான தோற்றம் கொண்டவர்கள். ஆடை, அணிகலன்கள் மேல் அதிக ஆர்வம் இருக்கும். ஆசாரங்களை மதித்து நடப்பார்கள்.

மிருகசீரிஷம் நட்சத்திரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் மிருகசிரீஷ நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கக்கூடியவர்கள். முடிந்தவரை உண்மை பேச வேண்டும் என நினைபவர்கள். வஞ்சக எண்ணங்கள் கொண்டவர்கள். பிடிவாத குணமும், மன அழுத்தம் கொண்டவர்கள். தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மனபோக்கை கொண்டவர்கள். பிரச்சனைகளை தாங்களாகவே உருவாக்கி கொள்ளக்கூடியவர்கள். எதையும் துணிச்சலாக செய்வார்கள். பிடிவாத குணம் அதிகம் இருக்கும். தானம், தர்மம் செய்வதில் விருப்பம் உடையவர்கள்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சித்திரையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பன்னிரண்டு தமிழ் மாதங்களில் முதல் மாதம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். முன்வைத்த காலை எதிலும் பின் வைக்க மாட்டார்கள்....
தேங்காயில் குடுமி ஏன் வைக்க வேண்டும்

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா?

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா நாம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பதற்கு தேங்காய், பூ, பழம், கொண்டு முதலானவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு சாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்போது தேங்காயை...

Tamil Riddles and Brain Teasers | Tamil Vidukathai with answers | Brain games Tamil

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
லக்ஷ்மி குபேர பூஜை எவ்வாறு செய்ய வேண்டும்

செல்வம் கொழிக்கும் லக்ஷ்மி குபேர பூஜை

செல்வம் கொழிக்கும் லக்ஷ்மி குபேர பூஜை லக்ஷ்மி குபேர பூஜை செய்ய சிறந்த நாள் வியாழக்கிழமை. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அன்று மாலை லக்ஷ்மி குபேர பூஜை செய்வதால் மகாலக்ஷ்மியின்...
மூன்று முடிச்சு போடுவதின் அர்த்தம்

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ?

திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது ? திருமணம் என்றாலே பல்வேறு சடங்குகள், சம்ப்ரதாயங்கள், நம்பிக்கைகள் நிறைந்ததாகும். திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. சில சடங்குகள் ஏன், எதற்காக செய்கிறோம்...
அமாவாசை திதி

அமாவாசை திதி பலன்கள், அமாவாசை திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

அமாவாசை திதி அமாவாசை திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளின் வரிசையில் அமாவாசை முக்கிய இடத்தை பிடிக்கிறது. அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அன்றைய தினத்தில் இந்த...
Riddles with Answers

Brain Teasers with Answers | Riddles and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.