நவகிரக மச்சம் என்றால் என்ன? அவற்றின் பலன்கள் யாவை?

நவகிரக மச்சம்

சிலருக்கு பிறக்கும்போதே உடலில் நவகிரக மச்சங்கள் இருக்கும். நவகிரக மச்சம் என்பது சூரியன் போன்ற வடிவிலோ, சந்திர வடிவிலே, இன்னும் சில விசேஷ நவகிரக குறியீடுகள் போலவே, உருவத்திலோ, வடிவத்திலோ, நிறத்திலோ, பல்வேறு வகையான மச்சங்கள் காணப்படும். இதை பற்றிய விரிவான பலன்கள் சாமுத்ரிகா லட்சணம் என்னும் நூலில் காணப்படுகிறது. இவ்வாறு இந்த மச்சங்கள் உங்கள் உடலில் காணபட்டால் அவற்றிற்கு என்ன பலன்கள் உண்டாகும் என்பதை விரிவாக கீழே அறிந்து கொள்ளலாம்.

சூரிய மச்சம்

நவகிரக மச்சம் என்றால் என்ன

உடலில் ஏதேனும் ஒரு இடத்தில் மங்கலான மஞ்சள் நிறத்தில் சூரிய வடிவில் மச்சம் இருந்தால் அவர்கள் சூரியனின் அருளைப் பெற்றவர்கள். இந்த மச்சம் உடையவர்கள் தைரியம் உள்ளவர்களாக காணப்படுவார்கள். எந்தப் வேலையையும் முன்நின்று நடத்தும் பொறுப்பு இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். ஆனாலும் இவர்களில் சிலருக்கு திருமணம் தாமதமாக நடக்கலாம். இவர்கள் 40 வயதிற்கு மேல் நன்றாக இருப்பார்கள். சிலருக்கு பித்தம் சம்மந்தமான வியாதிகள் ஏற்படலாம். இவர்களில் பலர் உயர்ப்பதவிகளில் அதிகாரிகளாக இருப்பார்கள்.

சந்திர மச்சம்

உடலின் எந்தப் பாகத்திலாவது சற்று வெளுப்பான நிறத்தில் சந்திரன் போன்ற வடிவில் மச்சம் இருந்தால் அவர்கள் சந்திரனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். இந்த மச்சம் உள்ளவர்கள் எதற்குகெடுத்தாலும் அவசரப்படுவார்கள். மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளை உடனே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தனக்கு எதாவது பிரச்சனை என்றால் கூட அடுத்தவர்களை எதிர்ப்பார்க்காமல் தானே தீர்த்துக் கொள்ள முயலுவார்கள். இவர்களுக்கு முரட்டு சுபாவம் சற்று அதிகமாக இருக்கும். இவர்களது செல்வ நிலை நிலையாக இல்லாமல் மாறி, மாறி இருக்கும். அதிக உணர்ச்சி வசப்படுவார்கள். இவர்களுக்கு சங்கீதத்தில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

செவ்வாய் மச்சம்

உடலின் எந்தப் பாகத்திலாவது பெரியதாகவோ, சிறியதாகவோ சிவப்பு நிற மச்சம் இருந்தால், அவர்கள் செவ்வாய்யின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அதிகத் தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் இருக்கும். எதையும் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாகப் பேசி விடுவார்கள். இவர்களில் பல பேர் போலீஸ், ராணுவம், தீயணைப்பு, மருத்துவம் போன்ற உயர்ந்த துறைகளில் பணிபுரிபவர்களாக இருக்கலாம்.

மச்சங்கள் உண்டாக்கும் பலன்கள்

புதன் மச்சம்

உடலில் காணப்படும் மச்சம் பெரிதாகக் மாநிறத்தில் இருந்தால் அவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் அறிவாளியாக இருப்பார்கள். எதையும் ஆராய்ச்சி செய்து பார்க்கும் மனப்பான்மை சிலருக்கு அதிகம் இருக்கும். இவர்கள் வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். இவர்களில் பலர் தன் சொந்த முயற்சியால் முன்னேறுவார்கள். இவர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவாகவே இருக்கும். வாயுத் தொல்லை, நரம்புத் தளர்ச்சி போன்றவை சிலருக்கு ஏற்படலாம். இவர்களில் ஒரு சிலர் ஜோதிடர், ஆராய்ச்சியாளர், விஞ்ஞானி, கணித வல்லுனர் ஆகவோ இருக்கலாம்.

குரு மச்சம்

உடலில் எங்காவது நீல நிறத்தில் மச்சம் காணப்பட்டால் அவர்கள் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலனோர் சற்று உடல் பருத்து காணப்படுவார்கள். சிலருக்கு வட்ட வடிவமான முகம் இருக்கும். இவர்களுக்கு ஆன்மீக சிந்தனை மேலோங்கி இருக்கும். இவர்களில் சிலர் சட்ட பயின்றவர்களவும், இன்னும் சிலர் ஆசிரியர்களாகவும் இருப்பார்கள். எப்போதுமே யாருக்காவது அறிவுரை, உபதேசம் போன்றவை செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு சிலருக்கு தோல் சம்பந்தமான சரும வியாதிகள் தோன்றலாம்.

சுக்கிர மச்சம்

உடலில் எங்காவது பெரியதாக பழுப்பும், வெளுப்பும் கலந்த நிறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தைப் உட்பட்டவர்கள் ஆவார்கள். இது ஒரு அபூர்வமான மச்ச அமைப்பாகும். இவர்கள் பெரும்பாலோனோர் மாநிறத்துடன் காட்சி இருப்பார்கள். இவர்களுக்கு காம உணர்ச்சி அதிகமாக இருக்கும். இனிமையாகப் பேசும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த மச்ச அமைப்பை கொண்டவர்கள் உலக புகழ்பெற்ற தலைவர்கள் ஆகவோ, செல்வந்தர்கள் ஆகவோ இருப்பார்கள் என்கிறது மச்ச சாஸ்திரம். இந்த மச்ச அமைப்பை பெற்றவர்கள் பெண்களைக் கவரும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அழகும், செல்வமும் ஒரு சேரப் பெற்று இருப்பார்கள்.

நவகிரகங்கள் சம்பந்தமான மச்சங்கள்

சனி மச்சம்

உடலில் எங்காவது பெரிதாக கருப்பு நிறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் சனி பகவான் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். இந்த வகை மச்சம் தான் பெரும்பாலும் பலருக்கு காணப்படுகிறது. இவர்கள் நல்ல உழைப்பாளிகளாக இருப்பார்கள். பிறர் இவர்களுக்கு நல்லது செய்தாலும் தீங்கு செய்தாலும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். புகழ்ச்சிக்கு மயங்கும் குணம் கொண்டவர்கள். தனிமையில் பொழுதை கழிப்பதை விரும்புவார்கள். இவர்களில் சிலருக்கு ஜீரணக் கோளாறுகள், சரும வியாதிகள், ரத்தம் சம்மந்தமான வியாதிகள் சிலருக்கு ஏற்படலாம்.

ஆண் பெண் மச்ச பலன்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மொட்டை போடுவது ஏன்

பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் தெரியுமா

குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஒரு உண்மை மறைந்திருக்கும். அப்படிப்பட்ட...
சிம்ம ராசி குணங்கள்

சிம்ம ராசி பொது பலன்கள் – சிம்ம ராசி குணங்கள்

சிம்ம ராசி குணங்கள் சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். சிம்ம ராசியில் மகம், பூரம் நட்சத்திரத்தின் 4 பாதங்களும், உத்திரம் நட்சத்திரத்தின் 1ம் பாதமும் அடங்கியுள்ளன. சிம்ம ராசியானது கால புருஷனின் இதயத்தை...
riddles and brain teasers

Riddles and Puzzles with answers | Riddles and Brain Teasers with Answers

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பரணி நட்சத்திரத்தின் இராசி : மேஷம் பரணி நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பரணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை – துர்க்கை பரணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
குழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்

எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்

எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் குழந்தை பிறப்பதே அதிஷ்டம் தான்,கிழமை என்பது உறவுகள் என்று பொருள். அனைத்து கிழமைகளும் ஒவ்வொரு கடவுளுடைய தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இருந்தாலும் குழந்தை எந்த கிழமைகளில் பிறந்தால்...
HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...
வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை

வெறும் வயிற்றில் எந்த உணவை சாப்பிடுவது நல்லது

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவுகள்  உடல் ஆரோக்கியத்தில் காலை உணவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நாளுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் காலை உணவின் மூலமே நமக்கு கிடைக்கிறது. அன்றைய நாள் முழுவதும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.