தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

தனுசு லக்னத்தின் அதிபதி குரு பகவனாவார். தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளிகளாகவும், விவேகம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் வயதில் மூத்தவர்களையும், படித்தவர்களையும் மதித்து மரியாதை செலுத்துவார்கள். சுறுசுறுப்பான மனநிலையை கொண்டவர்கள். இவர்கள் இளகிய மனம் கொண்டவராதலால் அனைவராலும் விரும்பி நேசிக்கபடுவார்கள். இவர்கள் வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில் தான் செல்வச் செழிப்புடன் சுகமாக இருப்பார்கள்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

இவர்கள் அழகான தோற்றம் கொண்டவர்கள் மற்றும் தாராள மனது கொண்டவர்கள். இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், துணிச்சல் மிக்கவராகவும் இருப்பார்கள். விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். புகழ்ச்சியில் அதிக விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் சுயநலம் அதிகம் கொண்டவர்கள். ஆலய மற்றும் பொது ஸ்தாபனங்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வார்கள். இவர்கள் பல அயல் நாடுகளுக்குப் பயணம் செய்து பொருள் ஈட்டுவார்கள். இவர்களுக்கு சோம்பல் அறவே புடிக்காது.

பழைமையான விஷயங்களிலும், வேதம் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், புத்தகங்களிலும், இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். அமைதியான தோற்றமுடையவர்கள், எப்போதுமே சிரித்த முகத்துடன் வீண் பகட்டு, பொய், புரட்டு இவர்களிடம் இருக்காது. பிறரிடம் உண்மையாக இருக்க விரும்புவார்கள். மற்றவர்களும் அதே போல தன்னிடம் உண்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் இவர்கள் கோபம் கொள்ளும்போது கோபத்தில் தோன்றும் வார்த்தைகளின் கடுமை எதிரில் இருப்பவர்களை வாயடைக்க செய்யும்.

நல்ல ஒழுக்கமுடையவர்கள். மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய ஆதரவைக் கொண்டு, இவர்களின் உடன் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வார்கள். இவர்களால் இவர்களின் சகோதர, சகோதரிகள் தான் பயனடைவார்களோ தவிர அவர்களால் இவர்களுக்கு எந்த பயனும் இல்லை. உறவினர்கள் இவர்களை மோசம் செய்தால் அவர்களின் உறவை துண்டித்து கொள்ள தயங்க மாட்டார்கள். நல்ல இனிமையான குரல் வளம் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். எப்பேற்பட்ட கஷ்டங்கள், எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் இவர்களின் வாழ்க்கையில் குறுக்கிட்டடாலும் அதுவும் வாழ்கையின் ஒரு அங்கம் என அதை ஏற்று கொண்டு முன்னேற்ற பாதையில் செல்வார்கள். தர்ம சிந்தனை அதிகம் இருக்கும். எந்த ஒரு விசயத்தையும் அலசி ஆராய்ந்து முடிவு எடுப்பார்கள். இவர்கள் எல்லோருக்கும் ஆலோசனை சொல்லும் இடத்தில் இருப்பார்கள். பலருக்கும் இவர்களுடைய உதவியும், ஆலோசனையும் தேவைப்படும்.

எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக இருப்பார்கள். இவர்களிடம் ரகசியம் மட்டும் எதையும் சொல்ல கூடாது. தன்னுடைய சொந்த கருத்துகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பார்கள். ஆனால் எந்த விஷயத்தையும் அலசி ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுப்பதில் வல்லவர்கள். மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள். இவர்கள் தயாள மற்றும் ஈகை உள்ளம் கொண்டவர்கள்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் சற்று தாமதமாக நடக்கலாம். இவர்களின் வாழ்க்கைத்துணை தெற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வரும். இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை மிகுந்த புத்திக் கூர்மை கொண்டவராகவும் சாமர்த்தியம் உடையவராகவும் இருப்பார். வாழ்க்கைத் துணை மூலமாக மிகப் பெரிய நன்மைகள் இவர்களை வந்து சேரும். வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் திருமணத்திற்கு பிறகு ஏற்படும். இவர்கள் திருமண தடை நீங்க பெருமாளை வணங்கி வரலாம்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மிதுன லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் அழகானவர்கள், மற்றும் அறிவாளிகள் என்பதால் சாதுரியமான செயல்களை செய்வார்கள். நல்ல பேச்சாற்றல் மிக்கவராகவும், கணக்கில் ஆர்வம் மிக்கவராகவும்...
முடக்கத்தான் பயன்கள்

மூட்டு வலியை குணப்படுத்தும் முடக்கத்தான் கீரை துவையல்

முடக்கத்தான் கீரை துவையல் முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன.  முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலக்சிக்கல், மூல நோய், பக்கவாதம்  போன்ற நோய்கள்...
3ம் எண்ணின் பொதுவான குணம்

3ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

3ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 3ம் எண் தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியதாகும். 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்க எண்ணான 3ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 3ம் எண்ணில்...
விருட்ச பொருத்தம் என்றால் என்ன?

விருட்ச பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

விருட்ச பொருத்தம் என்றால் என்ன? விருட்சம் என்றால் மரம் என்று அர்த்தம். 27 நட்சத்திரங்களும் பால் உள்ள மரம் மற்றும் பாலற்ற மரம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருத்தம் புத்திர பாக்கியம் அடைய பார்க்கப்படுகிறது....
திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்? திருமண வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமான ஒன்றாகும். அதில் அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்றவை இல்வாழ்க்கையில் பரஸ்பரம் கணவன், மனைவி இடையே...
எலும்பு முறிவு குணமாக

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள் எலும்பு முறிவு என்பது சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் ஏற்படுகிறது. ஆய்வின்படி 10ல் 6 பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது எலும்புமுறிவு பாதிப்புக்கு...
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சித்திரை நட்சத்திரத்தின் இராசி : கன்னி மற்றும் துலாம் சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய் சித்திரை 1, 2ம் பாத நட்சத்திரத்தின் இராசி மற்றும் அதிபதி - கன்னி :...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.