மார்கழி மாத சிறப்புகள் பற்றி தெரியுமா

மார்கழி மாத சிறப்புகள்

மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்கின்றனர். ஆனால், உண்மையில் பெருமாளுக்கு மட்டும் அல்ல, மார்கழி அனைத்து தெய்வங்களுக்குமே உகந்த மாதமாகும். அதனால் தான் மாணிக்க வாசகர் சிவபெருமானை போற்றி திருவெம்பாவை இயற்றி மார்கழி மாத விடியற்காலையில் பாடியுள்ளார். மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான் கோயில்களிலும் கூட சிறப்பு வழிபாடு நடைபெறும். அப்போது திருவெம்பாவை ஆனது அனைத்து சிவன் கோவில்களிலும் அப்போது பாடப்படும்.

மார்கழி மாதத்தின் சிறப்புகள்

பாவை நோன்பு, வைகுந்த ஏகாதசி, ஸ்ரீஹனுமந்த் ஜெயந்தி, சிவபெருமானின் ஆருத்ரா தரிசனம் என அனைத்து இறைவழிபாடுகளும் மார்கழி மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. சபரி மலை விரதம், பூஜை, வழிபாடு என இவை அனைத்தும் கூட மார்கழி மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. மொத்தத்தில் மார்கழி அது தெய்வங்களுக்கான மாதம் அல்லது ஆன்மீக மாதம் என்று கூட சொல்லலாம். இந்த மாதத்தில் தெய்வங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மொத்தத்தில், தெய்வங்களை தொழுவதற்கென்றே உள்ள மாதம் தான் மார்கழி.

பிரம்ம முகூர்த்த மாதம்

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவ உலகில் ஒரு நாள் எனப்படுகின்றது. அதில் மார்கழி மாதமானது தேவலோகத்தில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தம் ஆகின்றது. இந்தக் பிரம்ம முகூர்த்தகால வழிபாடு, தியானம் இவற்றுக்கு மட்டுமே உகந்த காலம் எனப்படுகின்றது. எனவே தான் இம்மாத மாலை நேரங்களில் இறை வழிபாட்டின் ஒரு பிரிவான பாட்டு, நடனம், கச்சேரிகள் நடைபெறுகின்றன. இந்த மாத காலத்தில் தான் ஸ்ரீரங்கம் கோயிலில் இராப் பத்து, பகல் பத்து போன்ற விழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

மார்கழி அதிகாலை கோலமிடுவது ஏன்?

மார்கழி மாதத்தில் அதிகாலை கோலம் இடுவது கூட அதிக நன்மையை தரக்கூடியது. இதற்கு ஒரு காரணம் உண்டு. விஞ்ஞான ரீதியாக மார்கழி மாதத்தில் ஆக்ஸிஜன் நிறைந்த ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் இருக்கும் என்பதால் அதிகாலை நேரத்தில் கோலம் போடுவதன் மூலம் நல்ல ஆக்ஸிஜன் பெற்று உடல் ஆரோக்கியம் அடையும்.

மார்கழி சிறப்புகள்

1. ரமண மகிரிஷி, அன்னை சாரதா தேவி, பாம்பன் சுவாமிகள் ஆகியோர் மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள்.

2. மார்கழியில்,திருவாதிரை கொண்டாட்டத்தில் சிவபெருமான் வணங்கப்படுகிறார்.

3. பெண்கள் பாவை நோன்பின் மூலம் ஆதிசக்தி அன்னையை வழிபடுகின்றனர்.

4. வைணவர்களால் வைகுண்ட ஏகாதசி கடைபிடிக்கப்படுகிறது.

5. பன்னிரு ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி மார்கழி மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது.

6. முருகப் பெருமானுக்கு படி உற்சவம் நடத்தப்படுகிறது.

7. 63 நாயன்மார்களில் வாயில நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குருபூஜை மார்கழி மாதத்தில் தான் நடைபெறுகிறது.

மார்கழி மாத பக்தியின் சிறப்பு

மேலும் மார்கழியில் பஜனை பாடுவது என்பது மிகவும் விசேஷமாகும். இதற்குப் பின்னாலும் கூட ஒரு மிகபெரிய காரணம் உண்டு. மார்கழி மாதம் என்பது தேவ லோகத்தில் அதிகாலை பொழுதாகும். இது இறைவன் விழித்தெழும் சமயம் என்பதால் தேவர்கள் முன் கூட்டியே எழுந்து இறைவனை திருப்பள்ளி எழுச்சி செய்யத் தயாராகும் காலம் ஆகும். அந்த சமயத்தில் சுவாமியை புகழ்ந்து பாடி வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம் நோய் நீங்கி குடும்பத்தில் செல்வம் பொங்கும் என்பது ஐதீகம். அதனால் தான் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் கடவுள் திருநாமங்களைச் சொல்லி பஜனை செய்திடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது. இது இன்றளவும் கூட கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மார்கழி மாத விரதங்களில் ஏதேனும் ஒன்றை முழுமையாகக் கடைபிடித்தால் கூட பின்வரும் நன்மைகள் நமக்கு கிடைக்கும். அதன் படி, மார்கழி மாத விரதம் இருப்பவர்களுக்கு,

1. நல்ல தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

2. தவறுகளை மன்னிக்கும் குணம் மேலோங்கும்.

3. மனம் நல்ல விதத்தில் செயல்படும். இதனால் தெளிவான, தீர்கமான முடிவுகள் எடுக்க முடியும்.

4. மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

5. ஆயுள் அதிகரிக்கும்.

6. இறை அருளால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.

இப்படியாக இவ்வளவு சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் நாமும் கூட நமது இஷ்ட தெய்வத்தை தினமும் தொழுவோம். சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

செரிமானம் சீராக நடைபெற

செரிமான கோளாறு ஏன் ஏற்படுகிறது ? அதற்கான தீர்வுகள்.

உணவு செரிமான கோளாறால்  உண்டாகும் பாதிப்புகள்  சராசரி மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு முறை அவசியமாகின்றது. உணவை சாப்பிடும்போது, அவசர, அவசரமாக சாப்பிடுகின்றோம். அதனால், உடலானது பல பிரச்சனைகளை...
பெண்கள் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி  சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் தங்களை கவனிக்க தவறிவிடுகின்றனர். ஒரு வீட்டின் பெண் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த குடும்பத்தில் உள்ள...

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் – 4 கால்கள் கத்திரிக்காய் - 4 புளி - ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப் ...

மீன ராசி பொது பலன்கள் – மீன ராசி குணங்கள்

மீன ராசியின் குணங்கள் மீன ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். மீன ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் இதில் அடங்கியுள்ளன. இது கால...
அஷ்டமி நவமி திதிகள்

அஷ்டமி, நவமி திதிகள் ஏன் மக்களால் புறகணிக்கப்டுகின்றன

அஷ்டமி, நவமி திதிகள் அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களுக்கு பிறகு வரும் 8வது நாள் அஷ்டமி, 9வது நாள் நவமி ஆகும். அஷ்டமி, நவமி வரும் திதிகளில் நல்ல காரியங்கள் செய்ய கூடாது, அல்லது...
carrot halwa recipe

சுவையான கேரட் அல்வா எப்படி செய்வது

கேரட் அல்வா தேவையான பொருட்கள் கேரட் சர்க்கரை பால் ஏலக்காய் முந்திரிப் பருப்பு 6.உலர்ந்த திராட்சை நெய் செய்முறை காரட்டை தோல் சீவி சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை நன்கு துருவி எடுத்துக் கொள்ளவும். ...
தினப் பொருத்தம் என்றால் என்ன

தினப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்க்க வேண்டும்

தினப் பொருத்தம் என்றால் என்ன? தினப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் முதல் பொருத்தம் ஆகும். தினப் பொருத்தம் என்பது கணவன், மற்றும் மனைவிக்கு இடையே தினசரி எந்த மாதிரியான சூழ்நிலைகள் நிலவும் என்பதை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.