கேரளா ஸ்பெஷல் பலாப்பழ பாயாசம்

பலாப்பழ பாயாசம்

பலாப்பழத்தில் எண்ணற்ற உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளன. சுவையான பலாப்பழ பாயாசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

பலாப்பழ பாயாசம்

தேவையான பொருட்கள்

  1. பலாப்பழ சுளைகள் – தேவையான அளவு
  2. தேங்காய் பால் – 2 கப்
  3. பொடி செய்த வெல்லம் – 1 கப் ( இனிப்பு சுவைக்கேற்ப )
  4. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  5. நெய் – சிறிதளவு
  6. தண்ணீர் – தேவையான அளவு
  7. முந்திரி, திராட்சை – சிறிதளவு

செய்முறை

  1. முதலில் பலாப் பழத்தின் சுளைகளை நன்கு பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு அகன்ற பாத்திரத்தில் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும்.
  3. நெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள பலாப்பழ துண்டுகளை சேர்க்கவும்.
  4. 2 நிமிடத்திற்கு பலாப்பழத்தை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  5. ஓரளவிற்கு பலாப்பழம் வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  6. பலாப்பழம் வெந்ததும் எடுத்து வைத்துள்ள தேங்காய் 2 கப் தேங்காய் பாலை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
  7. பின்னர் பொடி செய்து வைத்துள்ள வெல்லத்தை சேர்க்கவும்.
  8. வெல்லம் நன்கு கரைந்து சிறிது நேரம் கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்த பின் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து அடுப்பில் இறக்கி விடவும்.
  9. பின்னர் ஒரு சிறிய வாணலியில் கொஞ்சம் நெய் சேர்த்து முந்திரி, திராட்சை வறுத்து எடுத்து கொள்ளவும்.
  10. வறுத்த முந்திரி திராட்சையை பாயாசத்தில் சேர்த்து பரிமாறினால் சுவையான கேரளா ஸ்பெஷல் பலாப்பழ பாயாசம் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நரை முடி வராமல் தடுக்க

நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ்

நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ் நமது வாழ்வியல் மாற்றங்களும் முடி நரைப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. முடி நரைப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணமாகும். உணவு பழக்க வழக்கத்தில் சில...
கம்பு குழி பணியாரம் செய்முறை

இனிப்பு கம்பு குழி பணியாரம்

இனிப்பு கம்பு குழி பணியாரம் செய்வது எப்படி  கம்பு சத்து மிகுந்ததும், ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தானியமாகும்.  கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லதாகும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க...
இறால் சீஸ் ரோல்

இறால் சீஸ் ரோல் – Prawn Cheese Roll

இறால் சீஸ் ரோல் இறால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறால் உணவு பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம் இது சுவை, மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகவும் திகழ்கிறது....
பறவைகள் கனவு பலன்கள்

பறவைகளை கனவில் கண்டால் ஏற்படும் பலன்கள்

பறவை கனவு பலன்கள் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்களை பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளர்கள். அந்த வகையில் பல்வேறு விதமான பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம், பறவைகளை கனவில்...
நவராத்திரி வழிபாடு

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் 

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் மாகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை வரக்கூடிய 9 நாட்களை தான் நாம் நவராத்திரி என்று அழைக்கிறோம். நாளை...
சர்க்கரை நோய் வர காரணம்

இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம்

சர்க்கரை நோய்  இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வீட்டில்  ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம். நாகரீகம் என்ற பெயரில் நம்...
9ம் எண் குணநலன்கள்

9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 9ம் எண்ணின் அதிபதி செவ்வாய் பகவனாவார். 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் 9ம் எண்ணின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். எண் கணிதத்தில் அதிக வல்லமையும்,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.