கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் செய்முறை

அடை பிரதமன்

அடை பிரதமன் செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  • அரிசி  – 50 கிராம்
  • வெல்லம் – 100 கிராம்
  • தேங்காய் பால் – 200 கிராம்
  • தேங்காய் துண்டுகள் – தேவையான அளவு
  • முந்திரி –  தேவையான அளவு
  • ஏலக்காய் தூள் – தேவையான அளவு
  • நெய் – தேவையான அளவு

செய்முறை

  • அரிசியை சுத்தம் செய்து கழுவி நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஊற வைத்த அரிசியை மென்மையாக தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியான பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
  • வாழை இலையை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து அதில் நெய் தடவி வைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவை நெய் தடவி வைத்துள்ள  வாழை இலையில் மெலிதாக பரப்பி மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுத்துக்  கொள்ளவும்.
  • மாவு வெந்த பிறகு  இலையில் இருந்து எடுத்து ஆறவிடவும்.
  • சூடு ஆறிய பின் மாவினை சிறு சிறு துண்துகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் வெல்லத்தைக் தண்ணீரில் சேர்த்து கரைத்து  வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்க்கவும்.
  • நெய் சூடானதும் அதில் முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து வறுக்கவும்.
  • அதே வாணலியில் மேலும் சிறிது நெய்யை சேர்த்து சூடாக்கி வேக வைத்து வைத்துள்ள  அடையை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.
  • கரைத்து வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை அடையில் சேர்த்து கிளறிவிடவும்.
  • மிதமான தீயில் வைத்து அடிபிடிக்காமல் கிளறி விடவும்.
  • அடை வெல்லத்துடன் சேர்ந்து கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
  • கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அதில் தேங்காய் பாலை சேர்த்து கிளறவும்.
  • பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால் சுவையான கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆடாதொடை இலையின் பயன்கள்

நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடாதோடா இலை

ஆடாதோடா இலை மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப...
ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி

ஆட்டுக்கால் சூப் வைப்பது எப்படி

ஆட்டுக்கால் சூப் தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் - 4 தனியா தூள் – 2 ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் சீரகத் தூள் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் –...
அமுக்கிராகிழங்கின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தாவின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தா அமுக்கிராக்கிழங்கின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவாகும். இது அஸ்வகந்தா, அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம் போன்ற வேறு பல பெயர்களாலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, வேர்,...
செட்டிநாடு சில்லி இறால் எப்படி செய்வது

சுவையான செட்டிநாடு சில்லி இறால் – Chettinadu Chilli Iraal

செட்டிநாடு சில்லி இறால் (Chettinadu Chilli Iraal) இறாலை வைத்து செய்யப்படும் நாவு வகைகள் சுவை மிகுந்தவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறாலை விரும்பி சாப்பிட காரணம் அது சத்தானது, சுவை மிகுந்தது,...
கனவு பலன்கள் நாய்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் பூனை கனவில் வந்தால் 1. வீட்டு அடுபாங்கரையில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு வந்தால் அது நல்ல சகுனம் அல்ல என்று அர்த்தம். 2. பூனை...
ஜோதிடத்தில் யோகங்கள்

யோகங்கள் என்றால் என்ன? பலவகையான ஜாதக யோகங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...
சர்ப்ப தோஷங்களின் வகைகள்

சர்ப்ப தோஷங்கள் என்றால் என்ன? சர்ப்ப தோஷங்களின் வகைகள்

சர்ப்ப தோஷங்கள் நம்முடைய ஜாதகத்தில் ஏதாவது இரு இடங்களில் ராகுவும், கேதுவும் இடம் பெற்றிருப்பார்கள். அனைத்து கிரகங்களும் ராகு - கேதுக்களுக்கு இடையில் அமைந்து, ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பூரண...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.