தலப்பாகட்டு மட்டன் பிரியாணி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி தேவையான பொருட்கள்

 1. சீரக சம்பா அரிசி (அல்லது) பாஸ்மதி அரிசி – ½ கிலோ
 2. மட்டன் கறி – ½ கிலோ
 3. பெரிய வெங்காயம் – 3 ( பெரியது )
 4. தக்காளி – 2 ( பெரியது )
 5. பச்சை மிளகாய் – 2
 6. இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
 7. தயிர் – 1 கப்
 8. தனி மிளகாய்த்தூள் – 4 ஸ்பூன்
 9. மல்லித் தூள் – 2 ஸ்பூன்
 10. பட்டை – 3 துண்டு
 11. கிராம்பு – 2
 12. ஏலக்காய் – 2
 13. எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
 14. எண்ணெய் – தேவையான அளவு
 15. நெய் – தேவையான அளவு
 16. உப்பு – தேவையான அளவு
 17. புதினா – சிறிதளவு
 18. கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை

 1. மட்டனை பெரிய துண்டுகளாக வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
 2. பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 3. அரிசியை 2 முறை கழுவிய பின் அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
 4. பின்னர் ஒரு பெரிய அகன்ற பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் சம அளவில் சேர்த்துக் கொள்ளவும்.
 5. எண்ணெய் சூடானவுடன் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
 6. தாளித்த பின் நீளமாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும்.
 7. வெங்காயம் பொன்னிறமாக சிவந்து வதங்கியதும் நீளமாக நறுக்கி வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
 8. தக்காளி நன்கு கரைந்து வதங்கியவுடன் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
 9. இத்துடன் 4 ஸ்பூன் தனி மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலாவின் பச்சை வாசனை போன பின் 1 கப் தயிர், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும்.
 10. அத்துடன் சிறிதளவு புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
 11. இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்துக் கொள்ளவும். மட்டனை சேர்த்து ஒரு 5 நிமிடத்திற்கு நன்றாக கிளறி விடவும்.
 12. மசாலாவும் மட்டனும் இரண்டற கலக்கும் விதம் நன்கு கிளறி விடவும்.
 13. பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மூடி பொட்டு கொதிக்க விடவும்.
 14. நன்கு கொதிக்கும் நேரத்தில் ஊற வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்.
 15. இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
 16. மிதமான தீயில் 20 நிமிடம் வேக விடவும்.
 17. 20 நிமிடத்திற்கு பின் மூடியை திறந்து சிறிதளவு கொத்தமல்லி தழை , கொஞ்சம் நெய் சேர்த்து இறக்கினால் சுவையான தலப்பாகட்டு மட்டன் பிரியாணி ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

காபி, டீ

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல சத்தான ஆரோக்கியமான உணவை தேர்ந்த்தெடுத்து சாப்பிடுவது மிகவும் முக்கயமானதாகும். அவ்வாறு நாம் பார்த்து பார்த்து சாப்பிடும் உணவை எப்போது எப்படி சாப்பிட...
கண்களை குளிர்ச்சியாக்கும் வெள்ளரிக்காய்

கண்களுக்கு குளிர்ச்சியை தரும் சிறந்த உணவுகள்

கண்களுக்கு குளிர்ச்சியை தரும் சிறந்த உணவுகள் உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, வேலைப்பளு போன்றவற்றால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போவதால், அடிக்கடி கண்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாக, சிறு வயது முதலே...
ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை ஓரிதழ்த்தாமரை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. வயல்வெளிகள், பாழ் நிலங்கள், களர் நிலங்களிலும் சாதாரணமாகக் வளரும். ஈரப்பதம் மிக்க இடங்களில் வளரும். இது நீளமான இலைகளை உடையது. ஓரிதழ்த்தாமரை இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை. இது...
தசமி திதி

தசமி திதி பலன்கள், தசமி திதியில் செய்ய வேண்டியவை

தசமி திதி தசம் என்றால் பத்து என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். இராவணனை தசமுகன் அதாவது பத்து தலை உடையவன் என்று அழைப்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் இருந்து வரும்...
பஞ்சமி திதி பலன்கள்

பஞ்சமி திதி பலன்கள், பஞ்சமி திதியில் செய்ய வேண்டியவை

பஞ்சமி திதி பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில...
மட்டன் குருமா குழம்பு வைப்பது எப்படி

மட்டன் குருமா செய்வது எப்படி

மட்டன் குருமா ஆட்டுக்கறி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது, கூடவே ஆரோக்கியமும் நிறைந்தது. மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதில் ஒன்றுதான் மட்டன் குருமா. இந்த மட்டன் குருமா செய்வதற்கு மணமானது மற்றும் எளிதானது,...

30 வயதை கடந்த பெண்களா நீங்கள் ?  அப்போ இந்த பதிவை கண்டிப்பா பாருங்க.

பெண்களின் வாழ்க்கை முறை   பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பல வேலைகளை செய்கின்றனர். குழந்தைகளை கவனித்துக்கொள்வது, வீட்டு வேலைகளை செய்வது, சமைப்பது, வீட்டை நிர்வகிப்பது என பல்வேறு பொறுப்புகளை சுமந்து செல்கின்றனர். அதிலும் வேலைக்கு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.