வறுமை நீங்க வீட்டில் வைத்திருக்க கூடாத சில பொருட்கள்

வீட்டில் வைத்திருக்க கூடாத பொருட்கள்?

வீட்டில் என்றும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் நாம் அனைவருமே விரும்புவோம். அவ்வாறு நம் வீடு இருக்க நாம் நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும், எதிர்மறை ஆற்றலை குறைத்து நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்ய வேண்டும்.

சிலர் நம்மிடம் பேசும் போது மிகவும் அழகாக இருக்கும். அவர்களிடம் இருக்கும் நேர்மறை எண்ணங்கள் நம்மிடமும் உண்டாவதை நாம் உணர முடியும். சிலர் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வீட்டை பராமரிக்கும் அழகு மிக சிறப்பாக இருக்கும். ஆனால், ஒரு சிலரோ வீட்டை நேர்த்தியாக வைக்காமல் அலங்கோலமாக வைத்திருப்பார்கள். அதிலும் தேவையில்லாத பொருட்களை கழிக்காமல் அதையும் பொக்கிஷம்போல் பாதுகாத்து வைத்திருப்பார்கள்.

உடைந்த கண்ணாடி வீட்டை நாம் எப்படி பராமரித்து சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்கிறோமோ அதை வைத்து தான் நம் எண்ணங்களும் வாழ்க்கையும் அமையும். வீடு தூய்மையாக இருந்தால் மனதில் குழப்பங்கள், தேவையில்லாத சிந்தனைகள் ஏற்படாது. வீட்டில் சில தேவையற்ற பொருட்களை வைத்திருப்பதின் மூலமாகவும் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். வீட்டில் எதை வைத்திருக்கலாம், எதை வைத்திருக்கக் கூடாது என்பதை இப்போது பார்க்கலாம்.

நேர்மறை எண்ணங்கள்

நம் வீட்டில் நேர்மறை ஆற்றல் இருந்தால் மனதில் புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் நிறைந்திற்குக்கும். ஒரு சில இடங்களுக்கு நாம் செல்லும்போது நல்ல மனமுள்ள வாசனை மிகுந்த பத்திகள் ,அறைகளுக்கு பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் போன்றவற்றை பயன்படுத்தியிருப்பதை கவனித்திருப்பீர்கள்.

அத்தகைய வாசனைமிக்க பொருட்கள் இயல்பாகவே நல்ல எண்ணங்களை அதிகரிக்க செய்யும், இத்தகைய வாசனை எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க செய்யும் ஆற்றல் கொண்டது.

வீட்டின் தலைவாசலுக்கு முன்பு தினமும் தண்ணீர் தெளித்து துடைத்து, கோலமிடுவதும், மாலை நேரங்களில் தீபம் ஏற்றி வைப்பதும் நேர்மறை சக்திகளை எளிதாக வீட்டுக்குள் வரவழைக்கும். காலையில் எழுந்து குளித்த பின்னர் நறுமணம் தரும் ஊதுபத்திகளை சமையல் அறை மற்றும் ஹால் பகுதிகளில் ஏற்றி வைக்கலாம்.

உடைந்த மண் பாண்டங்கள்வீட்டிற்குள் இருக்கும்போது காலணிகள் அணியாமல் நடப்பது நல்லது. தரையில் பாதம் பதியும்போது, எதிர்மறை ஆற்றல்களை பூமி ஈர்த்துக் கொள்வதால், உடலில் ‘ஆற்றல் சமநிலை’ உண்டாகும். வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழையும் முன்பு, காலணிகளை தலை வாசலுக்கு வெளிப்புறமாக விட வேண்டும். கை, கால்களை நன்றாகக் கழுவிய பின்னர் வீட்டிற்குள் செல்வது நல்லது.

வீட்டில் வைத்திருக்க கூடாத பொருட்கள்

வீடு, அலுவலகங்களில் எதிர்மறை ஆற்றல்களை தூண்டி விடக்கூடிய தேவையில்லாத அதாவது வீட்டில் வைத்திருக்கக்கூடாத பொருட்கள் என்ன என்பதை பார்க்கலாம். வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தால் அங்கு கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள், கோபம் போன்றவை அடிக்கடி ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

துருப்பிடத்த பழைய இரும்பு அவ்வாறு எதிர்மறை எண்ணங்களையும், ஆற்றல்களையும் ஏற்படுத்தக்கூடியதாக உடைந்த கண்ணாடிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த மண் பாண்டங்கள், காய்ந்த செடிகள் அல்லது பட்டுப்போன மரங்கள், ஓடாத கடிகாரம், துருப்பிடித்த இரும்பு பொருட்கள், கிழிந்த ஆடைகள், உபயோகம் இல்லாத பழைய துணிகள், போன்றவற்றை கண்டிப்பாக வைத்திருக்கக்கூடாது. அதனால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி விடவேண்டும்.

ஏன் இவற்றை எல்லாம் நம் வீட்டில் வைத்திருக்க கூடாத என்றால் உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடி, முகம் பார்க்கமுடியாத வகையில் இரசம் போன கண்ணாடிகள், உடைந்த கண்ணாடி வளையல்கள், விரிசல் விழுந்த கண்ணாடிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த மண் பாண்டங்கள் போன்றவைகள் வீட்டில் இருந்தால் எதிர்மறை ஆற்றல் பெருகும். வருமானத்தில் தடையும், சிக்கல்களும் வந்து கொண்டே இருக்கும்.

காய்ந்த மரம், பூச்செடிகள் காய்ந்த செடிகள் இருந்தால் அது வீட்டை சுற்றிலும் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். அலுவலகம், வீடு, தோட்டம், பண்ணைகளில் பட்டுப்போன மரங்கள் இருந்தால் வறுமையை உண்டாக்கும்.

ஓடாத கடிகாரம் எதிர்மறை ஆற்றல்களை ஏற்படுத்தும். அதனால் கடன் பிரச்சனைகளும், சண்டை சச்சரவுகளும் ஏற்படும். துருப்பிடித்த இரும்பு பொருட்கள், கிழிந்த ஆடைகள், துணிகள் போன்றவைகள் இருந்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கும்.

இது போன்ற காரணங்களினால் அவைகளை உடனடியாக அப்புறப்படுத்தி விடுவது நல்லது. இவ்வகையான தேவையற்ற பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி வீட்டினை சுத்தமாகவும், அழகாவும், பராமரித்து வைத்திருந்தால் வீட்டில் ஆரோக்கியமும், சகல ஐஸ்வர்யங்களும் என்றும் நிறைந்திருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...
தினப் பொருத்தம் என்றால் என்ன

தினப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்க்க வேண்டும்

தினப் பொருத்தம் என்றால் என்ன? தினப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் முதல் பொருத்தம் ஆகும். தினப் பொருத்தம் என்பது கணவன், மற்றும் மனைவிக்கு இடையே தினசரி எந்த மாதிரியான சூழ்நிலைகள் நிலவும் என்பதை...
சருமம் அழகாக

உங்கள் சருமம் பால் போன்று வெண்மையாக வேண்டுமா?

சருமத்தை வெண்மையாக மாற்றும் பால் பால் நம் தினசரி வாழக்கையில் இடம்பெரும் ஒரு முக்கிய பொருளாகும். பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவிலான ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததாகும். பாலில்...
கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக் ஆண், பெண் இருவருக்குமே தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். குறிப்பாக பெண்களுக்கு தலைமுடிதான் அழகு. நீண்ட அடர்த்தியான...
அழகான பாதங்கள்

உங்கள் பாதங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்.

பாதங்கள் நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாதங்களின் அழகும் முக்கியம் தான். ஆனால் பெண்கள் தங்கள் முகம், தலைமுடி,...
சிக்கன் வறுவல் செய்வது எப்படி

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல்

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் இன்று...
இறால் கிரேவி செய்முறை

இறால் கிரேவி செய்வது எப்படி

இறால் கிரேவி செய்வது எப்படி இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை தாரளமாக சாப்பிடலாம்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.