புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

புரட்டாசி சனிக்கிழமை விரதம்

தமிழ் மாதங்கள் மொத்தம் 12. அதில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால் அது புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் ஆகும். புரட்டாசி மாதம் என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது திருமாலின் கோவிந்தா என்னும் திருநாமமே.

புரட்டாசி மாதம் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பனாதகும்.

புரட்டாசி மாத வழிபாடு பெருமாள் வழிபாட்டுக்குரிய இந்த புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவை மட்டுமே உண்பார்கள். அதுதான் சிறந்ததும் கூட. இந்த மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்குப் பெருமாளுக்குப் படையல் போட்டு துளசி தீர்த்தம் வைத்து கோவிந்தா கோவிந்தா என்று பெருமாளை அழைத்து வழிபடுவது வழக்கம். முடிந்தால் இந்த மாதத்தில் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டால் மிகவும் சிறப்பு.

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?புரட்டாசி மாத வழிபாட்டு முறைகள்

  1. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை படைத்து வழிபட வேண்டும்.
  2. அது எந்த சனிக்கிழமையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  3. அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும்.
  4. பூஜை அறையில் உள்ள  அனைத்து தெய்வங்களுக்கும் மலர் சூடி அலங்கரிக்கவும்.
  5. உங்களிடம் பெருமாள் படமாகவோ அல்லது விக்ரகமாகவோ இருந்தால் அதனை எடுத்து நன்கு சுத்தம் செய்து பூ வைத்து பெருமாளை அலங்காரம் செய்யவும்.
  6. பின்பு வீட்டில் இருக்கும் காமாட்சி விளக்கு, குத்து விளக்கு ஏற்றவும்.
  7. பின்பு பெருமாளுக்கு நெய்வேத்தியமாக செய்தவற்றை படைக்கவும்.
  8. படையலில் முக்கியமாக இடம்பெற வேண்டியது மாவிளக்கு, துளசி தீர்த்தம்..
  9. பச்சரிசி மற்றும் வெல்லம் கலந்து செய்த மாவிளக்கில் நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
  10. துளசி தீர்த்தம் வைக்க வேண்டும்.
  11. மாவிளக்கு போடுவது பெருமாளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
  12. பின் சர்க்கரை பொங்கல், வடை, பாயாசம் மற்றும் பல உணவுகளை தயாரித்து பெருமாளுக்கு படைக்க வேண்டும்.
  13. வீட்டில் இருக்கும் அனைவரும் பெருமாளின் நாமத்தை நெற்றியில் போட்டுக் கொள்ள வேண்டும்.
  14. பின் கற்பூர தீபாராதனை மற்றும் சாம்ப்ராணி காட்டி பெருமாளை வழிபட வேண்டும்.
  15. முதலில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் துளசி தீர்த்தத்தை கொடுத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
  16. பின் படைத்த பிரசாதத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.
  17. இவ்வாறு வழிபடுவாதால் பெருமாளின் முழு அருளும் நமக்கு கிடைத்து திருமாலின் பார்வை நம் மீது படும். வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்று நிறைவான வாழ்க்கை அமையப் பெரும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

watermelon payasam

உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி

குளு குளு தர்பூசணி பாயாசம் தேவையான பொருட்கள் தர்பூசணி – 2 கப் ( பொடியாக நறுக்கியது ) நெய் – தேவையான அளவு முந்திரி, திராட்சை – தேவையான அளவு சர்க்கரை –...
மீன் வறுவல்

சுவையான மீன் மிளகு வறுவல் செய்வது எப்படி ?

மீன் மிளகு வறுவல் மீன் ஒரு சத்தான ஆரோக்கியமான உணவாகும். மீனில் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. மீனை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை குறைபாடு,...
துளசி மருத்துவ நன்மைகள்

துளசி மருத்துவ குணங்கள்

துளசி துளசி மூலிகைகளின் ராணி என அழைக்கபடுகிறது. துளசியில் உள்ள மருத்துவ குணங்களால் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசியின் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. துளசி...
fruits kanavil vanthal

பழங்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பழங்கள் கனவில் வந்தால் கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. தூக்கத்தில் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விடை தெரியாத கனவுகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த...
பந்தக்கால் நடுதல்

திருமணத்தில் பந்தக்கால் அல்லது முகூர்த்தகால் நடுவது ஏன்?

பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவது ஏன்? பெரும்பாலான இந்து திருமணங்களில் திருமணதிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவார்கள். எதற்கு இந்த பந்தக்கால் நடுகிறார்கள் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. நம்...
கிரகமாலிகா யோகங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம் (Graha Malika Yogam) ராகு, கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் மாலை போல அமைய பெற்று இருந்தால் அதற்கு கிரக மாலிகா யோகம் என்று...
மீன் குழம்பு செய்வது எப்படி

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீன் – ½  கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 ...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.