மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி மாதமாகும். மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என கூறியுள்ளார். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அவர்கள் தந்தையை போன்றே இருப்பார்கள். தந்தை செய்து வரும் தொழிலையே செய்வார்கள்.

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் யாருக்கும் தீங்கிழைக்காத நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் யாருடைய தலையீடும் இல்லாத சுதந்திரமான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். இவர்களிடம் முன்கோபமும், பிடிவாத குணமும் இருக்கும். இவர்கள் ஒரு ஆடம்பர பிரியர்கள். ஆடம்பரமாக வாழ்வதற்கு செலவு செய்ய தயங்க மாட்டார்கள். மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் எதிர்காலத்தை எண்ணி ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஒரே இடத்தில் தங்கியிருக்க இவர்களால் முடியாது. கடவுள் மீது அதிக பக்தி கொண்டவர்கள் இவர்கள்.

யாராவது தவறு செய்தால் அதை பயமில்லாமல் துணிச்சலுடன் சுட்டி காட்டும் குணம் கொண்டவர்கள் இவர்கள். மற்றவர்கள் இவர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி யோசிக்கமாட்டார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யும் மனம் கொண்டவர்கள்.

இவர்கள் நீதி, நேர்மை, நியாயத்திற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். நல்லவர்களுடன் நல்ல தொடர்பில் இருக்கும் இவர்கள் தீயவர்களுடன் நட்புறவு வைத்துக் கொள்ளமாட்டார்கள். எதையும் கூர்ந்து கவனிப்பதில்  வல்லவர்கள். எல்லாருக்கும் அவர்களால் முடிந்த நன்மைகளைச் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் தனித்தன்மை நிறைந்திருக்கும். ஆகையால் ஒரு தொழிலை இவர்களிடம் நம்பி ஒப்படைத்தால் தொழில் விருத்தியாகும். இவர்கள் இளம் வயதிலேயே உலக அனுபவங்களைப் பெற்று இருப்பார்கள். நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து படிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

இம்மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த எழுத்தாற்றல் பெற்றிருப்பார்கள். ஆகையால் இவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக வர வாய்ப்புகள் அதிகம். இவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். இவர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அதை எப்பாடு பட்டாவது முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். அதே சமயம் இவர்களுடைய வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் வந்துவிட்டால், அந்த பிரச்சனைகளை கண்டு துவண்டு விடுவார்கள்.

இம்மாதத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு அறிவுரை சொல்வதில் வல்லவர்கள். ஆனால் இவர்கள் வாழ்க்கையின் முற்பகுதியில் தேவையில்லாத ஆடம்பர செலவுகள் செய்துவிட்டு, வாழ்க்கையின் பிற்பகுதியில் மிகவும்  சிரமப்படுவார்கள்.

இவர்கள் ஒரு காரியத்தை ஆரம்பித்தால் அதை முடிக்காமல் விடமாட்டார்கள். இவர்களுக்கு அரசியல், ஆன்மிகம், தத்துவம், அரசு பணிகளில் நிர்வாகம் போன்ற உயர்பணிகள் ஏற்றவை. இதில் ஈடுபட்டால் இவர்களால் செல்வத்தை குவிக்கமுடியும். சிறந்த எழுத்தாளர்களாகவும் இவர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கிரீன் டீ செய்முறை

கிரீன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா ?

கிரீன் டீ பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி ,டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன்...
அவல் லட்டு செய்வது எப்படி

ஆரோக்கியமான அவல் லட்டு செய்வது எப்படி

அவல் லட்டு தேவையான பொருட்கள் அவல் – 1 கப் வெல்லம் – 1 கப் முந்திரி, திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு ஏலக்காய் – சிறிதளவு ...
மஞ்சள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி அனைத்து வசதி வாய்ப்புகள் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் முழு மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அதனால்தான் ‘ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ‘ என்று முன்னோர்கள்...
பித்ரு தோஷம் போக்கும் ருத்ர கயா

21 தலைமுறை சாபங்களை போக்கும் ருத்ர கயா

21 தலைமுறை சாபங்களை போக்கும் ருத்ர கயா  அமாவாசை தினத்தன்று முன்னோர் வழிபாடு செய்வதன் மூலமாக பித்ரு சாபம் எதுவும் இருந்தால் அவை நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. இந்நிலையில், 21 தலைமுறையினரின் சாபங்களை போக்கும்...
காபி குடிப்பது நல்லதா

காபி குடிப்பதால் முகப்பரு ஏற்படுமா ?

காபி குடிப்பதால் முகப்பரு ஏற்படுமா ? கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரு சமயம் எத்தியோப்பியாவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு நாள் தங்களது ஆடுகள் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடனும், இரவில் தூங்காமல் விழித்திருந்ததையும் கவனித்தனர்....
நாடி பொருத்தம் என்றால் என்ன

நாடி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

நாடி பொருத்தம் என்றால் என்ன? நாடி பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும். ஆண், பெண் இருவருக்கும் நாடி பொருத்தம் பார்த்து திருமணம் செய்து முடித்தால் நோய் நொடி...
பிறந்த தேதி பலன்

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவரா, உங்கள் பிறந்த தேதி பலன்கள் இதோ

பிறந்த தேதி பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதிரியான குணநலன்கள் இருக்கும் என்பது போல், குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் குணநலன்கள் மாறுபடும். அதன்படி அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.