பூக்கள் கனவில் வந்தால்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகள் தூக்கத்தின் போது வருகின்றன. அதில் ஒருசில கனவுகளுக்கு என்ன பலன் என்று தெரியாமல் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். அந்தவகையில் பலருக்கும் பூக்களை பற்றிய கனவுகள் அடிக்கடி தூக்கத்தில் வரும். அப்படி பல்வேறு வகையான பூக்களை கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
1. மல்லிகை பூ கனவில் வந்தால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று பொருள்.
2. வெண் தாமரை / வெள்ளை தாமரை கனவில் வந்தால் சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்கும், கல்வி / செய்து வரும் வேலையில் உயர்வான நிலையை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
3. கர்ப்பிணி பெண்கள் கனவில் தாமரை மற்றும் வெள்ளை நிற பூக்கள் வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
4. கர்ப்பிணி பெண்கள் கனவில் செம்பருத்தி, ரோஜா ஆகிய சிவப்பு நிற பூக்கள் வந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது.
5. ரோஜா பூ கனவில் வந்தால் நீங்கள் ஏற்கனவே செய்த செயலுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். மேலும் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்று அர்த்தம்.
6. முல்லை பூ கனவில் வந்தால் தாய் வழி உறவில் தேவையான உதவிகள் கிடைக்கும் என்று அர்த்தம்.
7. பன்னீர் பூ கனவில் வந்தால் வெளியூர் அல்லது வெளி நாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் என்று அர்த்தம்.
8. பவளமல்லி கனவில் வந்தால் தந்தை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும் என்று பொருள்.
9. சாமந்தி பூ கனவில் வந்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க போகிறது என்று பொருள்.
10. வாடாமல்லி பூ கனவில் வந்தால் உறவினர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கும் என்று அர்த்தம்.
11. அல்லி பூ கனவில் வந்தால் மனைவி வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும் என்று பொருள்.
12. மரம் அல்லது செடியில் இருந்து பூக்களை பறிப்பது போல கனவு வந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும், சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்று அர்த்தம்.
13. பொதுவாக பூக்கள் கனவில் வந்தால் நன்மைகள் உண்டாகும் என்று அர்த்தம்.
14. மஞ்சள் நிற பூக்கள் கனவில் வந்தால், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்று அர்த்தம்.
15. தாமரை, வெள்ளைப் பூக்கள், பூமாலை இவற்றை மற்றவர்கள் கைகளில் இருந்து நாம் பெறுவது போல கனவு கண்டால் பெரும் புகழ் வந்து சேரும் என்று அர்த்தம்.
16. பூக்கள் பூத்துக் குலுங்குவது போல கனவு கண்டால், நல்ல பலன்கள் ஏற்படும் என்று அர்த்தம்.
17. மலர்கள் வாடிப்போனது போல கனவு கண்டால், வியாதிகள் உண்டாகும் என்று அர்த்தம்.
18. மிகுந்த வாசம் உள்ள பூக்களை கனவில் கண்டால் திருமணம் கூடி வருகிறது என்று அர்த்தம்.