கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தின் அதிபதி சனி பகவனாவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் சற்று உயரமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல கவர்ச்சியான, மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். தெய்வ பக்தியும், இரக்க குணமும் உள்ளவர்கள். பிடிக்காதவர்களிடம் விலகியே இருப்பார்கள். அவர்கள் மூலம் எந்த ரூபத்தில் எந்த உயர்வு வந்தாலும் ஏற்று கொள்ள மாட்டார்கள். உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து, இவர்களுக்கு எதிர்ப்பு இருக்கும்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

இவர்கள் எந்த விஷயத்தையும் அலசி ஆராயாமல் ஒரு முடிவுக்கு வரமாட்டார்கள். அமைதியான பேர்விழிகள். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க கூடியவர்கள். பல்வேறு விஷயங்களை பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் அவ்வளவு எளிதில் எதையும் வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள். எல்லோருக்கும் உதவி செய்யும் வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். நினைவாற்றல் அதிகம் கொண்டவர்கள். எண்ணங்களை செயலாக்க கடுமையாக உழைப்பார்கள். எதையும் ஒளிவு, மறைவில்லாமல் பேசுவார்கள். இவர்கள் நியாய, அநியாயத்தை யாராக இருந்தாலும் பயமின்றி எடுத்துச் சொல்வார்கள்.

இவர்கள் வாழ்வின் பிற்பகுதியில் தான் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அந்த சமயத்தில் செல்வச் செழிப்பும், சொத்துக்களும் உண்டாகும். எதையும் எளிதில் உள்வாங்கி கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். எதையாவது பற்றி சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். வாழ்வில் வெற்றி பெறுவதற்கு தேவையான வழிகளை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். எதற்கும் பயப்பட மாட்டார்கள். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை முகத்தில் காட்டி கொள்ள மாட்டார்கள். எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருப்பார்கள்.

விளையாட்டுத் சம்பந்தபட்ட துறையில், இவர்களுக்கு அதிக ஈடுபாடு இருக்கும். இவர்கள் பார்ப்பதற்கு சாதரணமாக வலுவில்லாதவர்கள் போல தெரிந்தாலும் வலுவான உடற்கட்டை கொண்டவர்கள். பணத்தை சேர்ப்பதிலும், செலவழிப்பதிலும் மிகுந்த கவனமாக இருப்பார்கள். இவர்கள் ஒழுக்கம் மற்றும் சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் தான் கொண்ட எண்ணங்களிலும் செயல்களிலும், மிகுந்த உறுதியுடன் இருப்பார்கள்.

இவர்கள் மற்றவர்கள் நம்பிக்கை மற்றும் நட்புக்கு விசுவாசமாக இருப்பார்கள். இவர்களில் ஒரு சிலர் குடும்ப பொறுப்பை சிறு வயதிலே ஏற்பார்கள். மூட நம்பிக்கை, பழக்க வழக்கங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள். வாழ்க்கையில் பலவித ஏற்றதாழ்வுகளை இவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். பழைய சாஸ்திர சம்பிரதாயங்களில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இவர்கள் எதையும் விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி செய்து விளக்கம் காண்பவர்களாக இருப்பார்கள். ஒரு விஷயத்தில் முடிவு எடுத்துவிட்டால் அவ்வளவு எளிதில் அதில் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பரந்த மனப்பான்மை உள்ளவர்கள்.

யார் எதை கேட்டாலும் பொறுமையாகவும் சாந்தமாகவும் பதில் சொல்வார்கள். எல்லா விஷயங்களையும் கொஞ்சம் விட்டுப் தான் பிடிப்பார்கள். இவர்கள் அவ்வளவு எளிதில் மற்றவர்களுடன் பழக மாட்டார்கள். மற்றவர்களை பேச விட்டு, அவர்களின் நாடி பிடித்து பார்த்து விட்டுத்தான் தான் சொல்ல வேண்டிய விஷயத்தைப் பேசுவார்கள். எத்தனை திறமைகள் இவர்களுக்குள் மறைந்து கிடந்தாலும் சரியாகவும், முறையாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்தத் தெரியாமல் திணறுவார்கள். இவர்களை போன்றே மனநிலை கொண்ட ஒருவரையே வாழக்கை துணையாக்க விரும்புவார்கள்.

இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை கிழக்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து அமையும். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை சற்று உயரமான உருவம் கொண்டவராகவும், எடுத்த முடிவுகளில் உறுதியானவராகவும், தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் திருமண தடை நீங்க சிவபெருமானையும், முருகனையும் வணங்கி வரலாம்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

tamil vidukadhaigal

Riddles with Answers | Vidukathaigal and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் விடுகதைகள்   இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
பல்வேறு திருமண சடங்குகள்

பல்வேறு விதமான திருமண சடங்குகள்

திருமண சடங்குகள் திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என முன்னோர்கள் சொல்லி வைத்தனர். இரு மனங்கள் இணைவது திருமணமாகும். திருமணம் ஒவ்வொருவர் வாழ்விலும் அத்தியாவசியமான ஒன்றாகும். திருமணம் எந்த அளவு முக்கியமோ, அதே அளவு...
செரிமானம் சீராக நடைபெற

செரிமான கோளாறு ஏன் ஏற்படுகிறது ? அதற்கான தீர்வுகள்.

உணவு செரிமான கோளாறால்  உண்டாகும் பாதிப்புகள்  சராசரி மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு முறை அவசியமாகின்றது. உணவை சாப்பிடும்போது, அவசர, அவசரமாக சாப்பிடுகின்றோம். அதனால், உடலானது பல பிரச்சனைகளை...
குபேர எந்திரம்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள் தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் நாம் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வழிபடுவதின் மூலம் சகல சௌபாக்கியங்களையும்  நாம் பெற முடியும். தீபாவளி...
கேழ்வரகு சேமியா இட்லி

கேழ்வரகு சேமியா இட்லி செய்முறை

கேழ்வரகு சேமியா இட்லி கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற  பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) ஏற்படாமல் தடுக்க கேழ்வரகு...
நரை முடி வராமல் தடுக்க

நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ்

நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ் நமது வாழ்வியல் மாற்றங்களும் முடி நரைப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. முடி நரைப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணமாகும். உணவு பழக்க வழக்கத்தில் சில...
7ம் எண் குணநலன்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 7ம் எண் கேது பகவானுக்குரிய எண்ணாகும். 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றவர்கள் செல்லும் வழியை தவிர்த்து...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.