ஆண் தலை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் தலை பகுதி மச்ச பலன்கள்

சாமுத்திரிகா லட்சணத்தின்படி ஆணின் உடலில் எந்த பாகத்தில் மச்சம் இருக்கிறது என்பதை வைத்து மச்ச சாஸ்திரம் பலன்களை கூறுகிறது. அந்த வகையில் இந்த பகுதியில் ஆணின் தலை, நெற்றி, மூக்கு, வாய், காது, கன்னம் போன்ற பகுதிகளில் மச்சம் இருந்தால் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பதை விரிவாக பார்ப்போம்.

ஆண் தலை மச்ச பலன்கள்

ஆணின் தலையில் வலது பக்கம் மச்சம் இருந்தால் அரசாங்கத்தில் பெரும் பதவிகளை வகிப்பார்கள்.

ஆணின் தலையில் தலையில் இடது பக்கம் மச்சம் இருந்தால் பொது வாழ்க்கையில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

ஆண் நெற்றி மற்றும் புருவம் மச்ச பலன்கள்

ஆணின் இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் அவருக்கு தீர்காயுள் உண்டு.

ஆண் தலை மச்ச பலன்கள்

ஆணின் நெற்றியின் வலது பக்கம் மச்சம் இருந்தால் தனயோகம், மற்றும் திடீர் அதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் கொண்ட மனைவி அமைவாள்.

ஆணின் நெற்றியின் இடது பக்கம் மச்சம் இருந்தால் அவர்களுக்கு ஓரளவு வசதியான வாழ்க்கை அமையும்.

ஆணின் புருவங்களில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு முன்கோபம் அதிகம் இருக்கும்.

ஆணின் வலது புருவத்தில் மச்சம் இருந்தால் மனைவியால் யோகம் உண்டாகும்.

ஆணின் இடது புருவத்தில் மச்சம் இருந்தால் அவர் செலவாளியாக இருப்பார்கள்.

ஆண் கண் மச்ச பலன்கள்

ஆணின் கண்களில் மச்சம் இருந்தால் அவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள்.

ஆணின் வலது கண்ணில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் புகழ் உண்டாகும்.

ஆணின் இடது கண்ணில் மச்சம் இருந்தால் அவர்கள் சுதந்திர மனப்பான்மை உடையவர்களாய் இருப்பார்கள்.

ஆணின் இடது கண்ணின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் சொத்து சம்பந்தமான் விஷயங்களில் கஷ்டங்களை சங்கடங்களை சந்திப்பார்கள்.

ஆணின் இடது கண்ணின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு உறவினர்களுடன் பிரச்சனைகள் ஏற்படும்.

ஆணின் வலது கண் வெண்படலத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு புகழ், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் இருக்கும்.

ஆணின் இடது கண் வெண்படலத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் வறுமையான வாழ்க்கை வாழ்வார்கள். இருந்தாலும் அதை சமாளிக்கும் மன பக்குவமும் இயற்கையாகவே அமைந்து இருக்கும்.

ஆண் கண்ணில் மச்சம் இருந்தால்

ஆணின் இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழே மச்சம் இருந்தால் அவர்கள் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

ஆணின் இரண்டு கண்களில் ஏதாவது ஒரு கண்ணின் வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் ஒரே சீராக இருக்கும்.

ஆண் கன்னம் மச்ச பலன்கள்

ஆணின் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் உழைப்பால் உயர்ந்தவராக இருப்பார்கள்.

ஆணின் வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வசீகரம் மற்றும் தயாள குணம் கொண்டவராக இருப்பார். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

ஆணின் இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் பழகுவதற்கு இனிமையானவராக இருப்பார். மேலும் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள்.

ஆண் மூக்கு மச்ச பலன்கள்

ஆணின் மூக்கின் மேல் மச்சம் இருந்தால் அவருக்கு சுகபோக வாழ்க்கை அமையும்.

ஆணின் மூக்கின் கீழே மச்சம் இருந்தால் அவர்கள் தவறான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.

ஆணின் மூக்கின் வலதுபுறம் மச்சம் இருந்தால் அவர் நினைத்ததை அடையும் வரை ஓயமாட்டார்.

ஆணின் மூக்கின் இடது பக்கம் மச்சம் இருந்தால் அவர்களுக்கு கூடா நட்பு, மற்றும் பெண்களால் அவமானம் ஏற்படலாம். மேலும் இவர்கள் எதையும் நம்பாதவர்களாக இருப்பார்கள்.

ஆண் மூக்கு மச்ச பலன்கள்

ஆணின் மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் ஆணவம், கர்வம், பொறாமை, தயக்ககுணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆணின் மூக்கு துவாரங்களுக்கு மேலே மச்சம் இருந்தால் நவநாகரீத்தில் மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள்.

ஆணின் வாய் பகுதி மச்ச பலன்கள்

ஆணின் நாக்கில் மச்சம் இருந்தால் அவர்கள் பொய் பேசுபவர்களாகவும், வாக்கு பலிதம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

ஆணின் உதட்டில் மச்சம் இருந்தால் அவர்கள் பலவித கலைகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

ஆணின் மேல் மற்றும் கீழ் உதடுகளில் மச்சம் இருந்தால் அவர்கள் செயல்களில் அலட்சியம் காட்டுபவர்களாகவும், காதல் உணர்வு மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள்.

ஆணின் மேவாய் (உதடுகளுக்கு மேல்) மச்சம் இருந்தால் அவர்கள் செல்வாக்கு மற்றும் இசைத்துறையில் நாட்டம் உள்ளாவ்ர்கலாக இருப்பார்கள், மற்றும் சமூகத்தில் இவர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கும்.

ஆணின் மோவாயின் இடது பக்கம் மச்சம் இருந்தால் அவர்களின் வாழ்க்கை ஒரே சீராக இருக்காது மற்றும் கல்வியறிவும் குறைவாக இருக்கும்.

ஆணின் மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் மிகுந்த ஞானமுள்ளவர்களாக இருப்பார்கள்.

ஆணின் காதுகளில் மச்சம் இருந்தால்

ஆணின் இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் அவரை தேடி வந்தடையும்.

ஆணின் வலது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் அவருக்கு தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.

ஆணின் காதின் பின் பக்கம் மச்சம் இருந்தால் அவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், உற்சாகம் நிறைந்ததாகவும் இருக்கும்.

ஆணின் வலது காது நுனியில் மச்சம் இருந்தால் அவருக்கு சில கண்டங்கள் வரலாம்.

காது மச்ச பலன் ஆண்

ஆணின் இடது காது நுனியில் மச்சம் இருந்தால் அவருக்கு தகாத சேர்க்கை மற்றும் அவமானங்கள் ஏற்படும். இவர்கள் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.

ஆணின் காதின் உள்ளே மச்சம் இருந்தால் அவருக்கு பேச்சாற்றல், மற்றும் திடீர் யோகம் உண்டாகும்.

ஆணின் தொண்டை பகுதியில் மச்சம் இருந்தால் அவருக்கு திருமணத்துக்கு பின்பு யோகம் உண்டாகும்.

ஆண் பெண் மச்ச பலன்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி

பித்தத்தை தணிக்கும் நெல்லிக்காய் துவையல்

நெல்லிக்காய் துவையல் தேவையான பொருட்கள் பெரிய நெல்லிக்காய் – தேவையான அளவு தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயத்தூள் – ¼...
கனவுகள் உண்மையா

கனவுகள் பலிக்குமா, எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும்

கனவுகள் பலிக்குமா நாம் உறக்கத்தில் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் என்றும் இன்னும் சிலர் மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே...
திணை இட்லி

திணை அரிசி இட்லி

திணை இட்லி திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற ஏரளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட மிகவும் சிறந்த உணவு திணையாகும். திணை இட்லி எப்படி செய்வது...
ஜாதக யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #12

ஜாதக யோகங்கள் : யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது கெடு பலனையும்...
அட்சதை போடுவது எதற்காக

திருமணத்தில் அட்சதை தூவி வாழ்த்துவது ஏன்?

திருமணத்தில் அட்சதைப் போடுவது ஏன்? திருமணம், சீமந்தம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, கிரகப்பிரவேசம் என எந்த மங்களகரமான நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெரியவர்களின் ஆசி அட்சதை மூலமாகத்தான் நமக்கு கிடைக்கிறது. அட்சதையை தூவி ஆசீர்வதிக்கும்...
ஜாதிக்காய் மருத்துவ நன்மைகள்

ஜாதிக்காய் மருத்துவ குணங்கள்

ஜாதிக்காய் வரலாறு ஜாதிக்காய் முதன் முதலில் மொலுக்கஸ் தீவுகளில் கண்டுபிடிக்கபட்டது. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் ஜாதிக்காய் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல்...
எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும்

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்? நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.