கை மற்றும் கால் நகங்களை அழகாக வைத்திருக்க சில டிப்ஸ்

அழகான நகங்களை பெற   

நம் உடலின் மற்ற பாகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல நகங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நகங்களை அழகாக வைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். நகங்களை பராமரிப்பதில் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்.

நகங்களை பராமரிப்பது எப்படி நகங்கள் அழகாக இருக்க நகங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். பெண்களின் கைகளுக்கு அழகு சேர்ப்பதில் நகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிலருக்கு நகங்கள் எளிதில் உடைந்து விடும். நகத்தில் சொத்தைகள் உண்டாகும். நகங்கள் எளிதில் உடைவதற்கு காரணம் இரும்புச் சத்து மற்றும் கால்சியம் சத்துக் குறைபாடுகள் தான். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடுவது அவசியமாகும்.

கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்ளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் குறைபாட்டினால் தான் நகங்களில் சொத்தை, நக சுத்தி போன்றவை ஏற்படுகிறது . நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதின் மூலமாகவும், சத்துக் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாலும் நகங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

நகங்களை பராமரிப்பது எப்படி ?

 • கை மற்றும் கால்களில் நகங்கள் சிலருக்கு கடின தன்மையுடன் இருக்கும். நகத்தை வெட்டுவதும் கடினமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகத்தினை வெட்டுவது சிறந்தது. குளித்தவுடன் நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால்  எளிதாக வெட்ட முடியும். நகங்கள் உறுதியாக இருக்க
 • நகத்தை வெட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தேங்காய் எண்ணெய் சிறிதளவு தடவி ஊறிய பின் நகத்தை வெட்டினாள் எளிதாக வெட்ட முடியும்.
 • சமையல் செய்தல், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், சாப்பிடுதள் போன்ற செயல்களுக்கு பின் நகங்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சாப்பிட்ட பின் விரல் இடுக்குகளில் நகங்களில் சுத்தம் செய்வது நல்லது.
 • பாத்திரம் கழுவுதல் , துணி துவைத்த பின் நகங்களில் சோப்பு துணுக்குகள் உட்புக வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு சோப்புகள் நகங்களில் இருந்தால் நாளைடைவில் நகம் சொத்தை பட்டு விடும். எனவே நகங்களை நன்றாக பிரஷ் வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
 • நம் உடல் மற்றும் முகத்தில் வறட்சி ஏற்படுவதை போல நகங்களிலும் வறட்சி ஏற்படும். வறட்சி ஏற்படாமல் தடுக்க  இரவு படுக்கும் முன் கை மற்றும் கால் நகங்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை நகத்தில் தடவி 2 நிமிடத்திற்கு மசாஜ் செய்து விட்டு படுக்கலாம். இதனால் நகங்கள் ஈரப்பதத்துடன் இருக்கும். இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.நகம் வெட்டுதல்
 • மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகங்களைத் தேய்த்து சுத்தப்படுத்தினால்  நகங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி நகங்கள் சுத்தமாகவும் பளிச்சென்றும் இருக்கும்.
 • நகங்களை வெட்டும் போது நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும்.
 • நகத்தினை பற்களால் கடிக்கும் பழக்கம் மிகவும் தவறானது. இதனால் நகத்தில் உள்ள கிருமிகள் வாய் வழியாக சென்று பலவேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
 • நகங்களை வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் வெட்ட வேண்டும். நகம் வளர்க்க விரும்புபவர்கள் நகங்களை ட்ரிம் செய்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
 • கழிவறை, குளியலறைகளை சுத்தப்படுத்தும் போதும் வீட்டை துடைக்கும் போதும் நாம் பயன்படுத்தும் சில கெமிக்கல் நிறைந்த பொருட்களால் பொருட்களால் நகங்கள் பாதிப்படையும். எனவே கைகளில் உறைகள் அணிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
 • கற்றாழை ஜெல் 2 ஸ்பூன், கிளிசரின் 2 ஸ்பூன் எடுத்துக் கலந்து கை மற்றும் கால்களில் நன்றாக அப்ளை செய்துவிட்டு 10 நிமிடங்கள் கழித்துக் கழுவி வர நகங்கள் மற்றும் கை கால்கள் மிருதுவாக இருப்பதை நன்கு உணர முடியும்.
 • பால் காய்ச்சும்போது அதில் இருக்கும் ஆடையை எடுத்து, கைகள் மற்றும் நகங்களில் அப்ளை செய்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் அதில் உள்ள எண்ணெய் பசையை உறிஞ்சி கைகள் ஈரப்பதத்துடன் இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

raagi recipes

உடலுக்கு வலுசேர்க்கும் கேழ்வரகு பர்பி

கேழ்வரகு பர்பி தேவையான பொருட்கள் ராகி மாவு – 1 கப் ரவை – ¼ கப் வெல்லம் – 1 கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு ...
கனவு பலன்கள் நாய்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் பூனை கனவில் வந்தால் 1. வீட்டு அடுபாங்கரையில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு வந்தால் அது நல்ல சகுனம் அல்ல என்று அர்த்தம். 2. பூனை...
prawn podimas

இறால் பொடிமாஸ்

இறால் பொடிமாஸ் தேவையான பொருட்கள் இறால் -1/2 கிலோ வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் கடுகு – ¼ ஸ்பூன் உளுத்தம்...
தவளை கனவு பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் உண்டாகும் பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
சிக்கன் சூப் செய்வது எப்படி

சிக்கன் சூப் எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் சூப் உடல் நலிவுற்றவர்கள் காய்கறிகள் மற்றும் சூப்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சூப் குடிப்பதால் உடல் பலப்படும், பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், இளைத்த உடலை தேற்றும்....
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சதயம் நட்சத்திரத்தின் இராசி : கும்பம் சதயம் நட்சத்திரத்தின் அதிபதி : ராகு சதயம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி சதயம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : யமன் சதயம் நட்சத்திரத்தின் பரிகார...
செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம் தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ பட்டை – 1 துண்டு புளி – சிறிதளவு தனியாத் தூள் – ½ ஸ்பூன் மிளகாய்த் தூள் – ½...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.