கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சில எளிய வழிகள்

கண்களை பரமாரிக்க சில எளிய வழிகள்

நம் உடலில் மிகவும் மென்மையான உறுப்பு எது என்றால் அது நம் கண்கள் தான். கண்கள் ஒரு மனித்தனுக்கு மிகவும் இன்றியமையாதது. கண்களால் தான் நம் அனைத்தையும் பார்க்க முடிகிறது. நம் வாழ்க்கையில் நடக்கும் இன்பம் , துன்பம் அனைத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குவது கண்கள் தான்.

கண்களை எப்படி பாதுகாப்பது இன்றைய நவீன வாழ்க்கை சூழலில் கண் பார்வை குறைபாடு என்பது சிறு குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் பாதிப்பாக உள்ளது.  இதற்க்கு முக்கிய காரணம் சரியான தூக்கமின்மை.

இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருத்தல் கணினி, செல்போன், டிவி, பார்த்து விட்டு தூங்குவது போன்ற செயல்களால் கண்கள் மிகவும் பாதிப்படைகின்றன. கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இத்தகைய பாதிப்பிலிருந்து நம் கண்களை எப்படி பராமரிப்பது என்பதை பார்க்கலாம்.

கண் நோய்கள் வராமல் தடுக்க கண்களை பராமரிக்க சில டிப்ஸ்

 1. நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு,  தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்குவது இந்த மூன்றையும் நாம் சரியாக செய்தாலே நம் கண்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.
 2. நாம் உண்ணும் உணவில் கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவில்  சாப்பிடுவது கண்களுக்கு நல்லது.
 3. பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்கள், கண்களின் அழகை பராமரிக்கும் முக்கிய பொருட்கள். போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
 4. கண்களில் தூசு விழுந்தால், கண்களை கசக்கக் கூடாது; தூய்மையான குளிர்ந்த நீரால் கண்களை கழுவ வேண்டும். கண்களில் எண்ணெய் விடுவது முதலிய செயல்களை செய்யக் கூடாது.
 5. கண் பிரச்சனைகளுக்கு உடனே நல்ல கண் மருத்துவரை அணுகுவது நல்லது.
 6. மீன்கள் கண்களுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது. இதனால் கண் பார்வை குறைபாடுகள் சரியாகும். எனவே தினமும் உணவில் மீன் சேர்ப்பது நல்லது.
 7. கண்களில் தூசு விழுந்தால் கண்களை கசக்கவோ கூடாது, தூய்மையான குளிர்ந்த நீரால் கண்களை கழுவ வேண்டும்.
 8. டிவி, செல் போன் பார்க்கும் போது வெளிச்சத்தில் பார்க்க வேண்டும். இருட்டில் பார்க்கும் போது அதில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான கதிர்வீச்சு கண்களை பாதிப்படைய செய்யும்.
 9. கம்ப்யூட்டர் மானிட்டரை கண்பார்வைக் கோட்டிற்கு கீழ் அமையும்படி பார்த்துகொள்ளவும்
 10. கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும்போது சிறு சிறு இடைவேளைகள் எடுத்துகொள்வது அவசியம்.
 11. கோடை காலத்தில் உடலில் மட்டுமல்லாது கண்களிலும் வறட்சி ஏற்படும். கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்க அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
 12. வாரம் ஒரு முறை கட்டாயமாக சிறியவர் முதல் பெரியவர் வரை எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்வது அவசியமாகும். இதனால் உடல் சூடு குறைந்து கண்கள் குளிர்ச்சி அடையும்.

கண்களை ஆரோக்கியத்திற்கு நாம் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள்

 1. வாரம் இருமுறை கீரையை உணவில் செர்த்துக் கொள்ள வேண்டும்.
 2. சமையலுக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
 3. பல வகையான நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்களை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
 4. சிக்கன் , மட்டன் போன்றவற்றை தவிர்த்து கடல் உணவுகளான மீன், இறால், போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
 5. வைட்டமின் D அதிகம் உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

திரயோதசி திதி

திரயோதசி திதி பலன்கள், திரயோதசி திதியில் செய்ய வேண்டியவை

திரயோதசி திதி திரயோதச என்றால் பதின்மூன்று என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 13 வது நாள் திரயோதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரயோதசியை...
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரேவதி நட்சத்திரத்தின் இராசி : மீனம் ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி : புதன் ரேவதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு ரேவதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஈஸ்வரன் ரேவதி நட்சத்திரத்தின் பரிகாரத்...
prawn recipes

இறால் குழம்பு

இறால் குழம்பு தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ உருளைக்கிழங்கு -  1 ( பெரியது ) முருங்கைக்காய் - 1 கொத்தமல்லி – சிறிதளவு மிளகாய் தூள் -  2 ஸ்பூன் ...
வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம் வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாவதில்லை. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் குறைக்கிறது. உடல் எடை குறையவும் அதிலும் ஆரோக்கியமான...
புத்திர தோஷம்

புத்திர தோஷம் என்றால் என்ன? புத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் என்றால் என்ன நமக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகளை பொறுத்தே அமைகிறது. முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைபடுத்தியிருந்தால், அவர்கள் கொடுத்த சாபத்தால் இந்த ஜென்மத்தில் புத்திர தோஷம்...
மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் நன்மைகள் மற்றும் பயன்கள்

மங்குஸ்தான் பழம் மங்குஸ்தான் மரம் ‘குளுசியாசியே’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. இது பழங்களின் அரசி என அழைக்கபடுகிறது. இந்த பழம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து...
கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ மிளகாய் தூள் - 1  தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகு தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் -...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.