ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #4

ஜாதகத்தில் யோகங்கள்

யோகம் என்பது 2 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் உண்டாகும் யோகங்களை குறிப்பதாகும். அவ்வாறான சில கிரக இணைப்புகள் நல்ல பலன்களையும், சில தீய பலன்களையும் தரலாம். அந்த வகையில் பலவிதமான யோகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும். நாம் இந்த பகுதியில் ஒரு சில யோகங்களையும் அதனால் உண்டாகும் பலன்களையும் பார்ப்போம்,

யோகங்கள் என்றால் என்ன

மாதுரு மூலதன யோகம் :

2ம் வீட்டு அதிபதி, 4ம் வீட்டு அதிபதியுடன் சேர்ந்திருந்தால் மாதுரு மூலதன யோகம் உண்டாகிறது.

மாதுரு மூலதன யோகத்தின் பலன்கள் :

தாயாரின் ஆதரவு கிடைக்கும். தாயின் உதவியால் அதிக லாபம் கிட்டும்.

களத்திர மூலதன யோகம் :

2ம் வீட்டு அதிபதியை 7ம் வீட்டு அதிபதி பார்த்தால் களத்திர மூலதன யோகம் உண்டாகிறது.

களத்திர மூலதன யோகத்தின் பலன்கள் :

வாழ்க்கை துணை மூலம் அதிக லாபங்கள் கிடைக்கும்.

அங்கிஸ யோகம் :

குருபகவான் உச்சம் பெற்று சந்திரன் லக்னத்திற்கு 5, 7 மற்றும் 9ம் வீடுகளில் இருப்பதால் உண்டாவது அங்கிஸ யோகம் ஆகும்.

அங்கிஸ யோகத்தின் பலன்கள் :

நீண்ட ஆயுள் உடையவர்கள். எல்லா செல்வங்களையும் பெற்று வசதியுடன் வாழ்வார்கள்.

வசீகர யோகம் :

புதன், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக இருந்தால் வசீகர யோகம் உண்டாகிறது.

வசீகர யோகத்தின் பலன்கள் :

அழகான தோற்றம் உடையவர்கள். வசீகர முகத்தோற்றம் உடையவர்கள்.

சௌரிய யோகம் :

லக்னதிலோ அல்லது லக்னத்திற்கு 3ம் வீட்டில் சுப கிரகம் இருப்பது அல்லது தனாதிபதி வலுவாக இருந்தால் சௌரிய யோகம் உண்டாகிறது.

சௌரிய யோகத்தின் பலன்கள் :

இந்த யோகம் உடையவர்களுக்கு சகல வசதிகளுடன் பலரும் போற்றும் வாழ்க்கை உண்டாகிறது. கீர்த்தி மற்றும் செல்வாக்குடன் வாழ்வார்கள்.

உதாந்திரி யோகம் :

லக்னத்திற்கு 2ம், 5ம் மற்றும் 9ம் அதிபதிகள் லக்னத்தில் நின்றால் உதாந்திரி யோகம் உண்டாகிறது.

உதாந்திரி யோகத்தின் பலன்கள் :

சட்டம் மற்றும் விவாத துறையில் வல்லவராக விளங்குவார்கள். மகிழ்ச்சியான குடும்பம் அமையப் பெற்று வாழ்வார்கள்.

ஆன்மீக யோகம் :

குருவும், சனியும் எவ்விதத்திலாவது சம்பந்தம் பெறுவது அதாவது பார்வை / சேர்கை / பரிவர்த்தனை இவற்றில் ஏதாவது ஒன்றை பெற்றிருப்பது ஆன்மீக யோகம் ஆகும்.

ஆன்மீக யோகத்தின் பலன்கள் :

இவர்கள் தெய்வ நம்பிக்கை அதிகம் இருக்கும். ஆன்மீக வாழ்க்கையை வாழ்பவர்கள்.

இல்லற சந்நியாசி யோகம் :

சனியின் வீட்டில் சந்திரன் இருப்பது அல்லது சனி தன் இரு வீடுகளில் ஒரு வீட்டை பார்ப்பதால் இல்லற சந்நியாசி யோகம் உண்டாகிறது.

இல்லற சந்நியாசி யோகத்தின் பலன்கள் :

இவர்கள் எதிலும் பற்று இல்லாமல் வாழ்வார்கள். இல்லறத்தில் குறைந்த ஈடுபாடு இருக்கும். இதனால் இவர்கள் இல்லற சந்நியாசி ஆகின்றனர்.

பூமி லாப யோகம் :

4 ம் வீட்டிற்கு அதிபதி லக்னத்திலோ அல்லது லக்னாதிபதி 4 ம் வீட்டிலோ இருந்தால் அல்லது 4 ம் வீட்டிற்கு உரியவன் பலம் பெற்று இருந்தால் பூமி லாப யோகம் உண்டாகிறது.

பூமி லாப யோகத்தின் பலன்கள் :

இவர்களுக்கு நிலம், மனை, வீடு வாங்கும் யோகம் அதிகம் இருக்கும்.

யோகங்களின் வகைகள்

படுக்கை சுக யோகம் :

12ம் அதிபதி சுப கிரகங்கள் சம்பந்தம் பெற்றிருந்தால் படுக்கை சுக யோகம் உண்டாகிறது.

படுக்கை சுக யோகத்தின் பலன்கள் :

நல்ல உறக்கம் உண்டாகும். கட்டில் சுகம் உண்டு

பந்து பூஜ்ய யோகம் :

4 ஆம் அதிபதி உச்சம் பெற்று அல்லது நட்பு பெற்று குரு பார்வை பெற்றிருக்க உண்டாவது பந்து பூஜ்ய யோகம் ஆகும்.

பந்து பூஜ்ய யோகத்தின் பலன்கள் :

இவர்களுக்கு உறவினர்கள் மூலம் ஆதரவு உண்டாகும்.

விமலா யோகம்

12 ம் அதிபதி 12ல் இருப்பது விமலா யோகம் ஆகும்.

விமலா யோகத்தின் பலன்கள் :

இவர்கள் சுதந்திரமாக வாழ விரும்புவார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு நன்மையே செய்வர். இவர்கள் தொண்டு செய்வதற்கென்றே பிறந்தவர்கள் ஆவார்கள்.

பூமி விருத்தி யோகம்

4 ஆம் வீட்டிற்கு அதிபதி தனது உச்ச வீட்டிலோ, சொந்த வீட்டிலோ, நட்பு வீட்டிலோ இருந்து அதை சுப கிரகங்கள் பார்த்தால் பூமி விருத்தி யோகம் உண்டாகிறது.

பூமி விருத்தி யோகத்தின் பலன்கள்

இந்த யோகம் வாய்க்க பெற்றவர்களுக்கு சொந்த வீடு அமையும். வீட்டின் மூலம் வருமானமும் கிடைக்கும்.

உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்கங்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

காய்கறிகள் கனவில் வந்தால் என்னபலன்

காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்

காய்கறிகள் கனவில் வந்தால் பலருக்கும் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விசித்திர கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது, இதற்கு அர்த்தம்...
திதியும் நெய்வேத்தியமும்

எந்த திதிக்கு என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்

திதி என்றால் என்ன ? இறை வழிபாடு என்பது நாம் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். இறைவழிபாடு செய்யும்போது மனம் அமைதி அடையும், மன நிம்மதி உண்டாகும், புத்தி தெளிவடையும், எதிர்மறை எண்ணங்கள்...

சகட தோஷம் என்றால் என்ன? சகட தோஷ பரிகாரங்கள்

சகட தோஷம் சகட அல்லது சகடை என்றால் சக்கரம் என்று அர்த்தம். சக்கரம் எப்படி கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் செல்கிறதோ அது போல் இந்த சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாகச்...
நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி

நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி?

நாட்டுக் கோழி குழம்பு நாட்டு கோழி குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. அது உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாட்டு கோழி குழம்பை எவ்வாறு எளிதாக...
chinese garlic chicken

சைனீஸ் கார்லிக் சிக்கன்

சைனீஸ் கார்லிக் சிக்கன் தேவையான பொருட்கள் 1. சிக்கன் – ½  கிலோ ( எலும்பில்லாதது ) 2. மைதா – 3 ஸ்பூன் 3. சோள மாவு – 3 ஸ்பூன் 4. உப்பு - தேவையான அளவு 5....
மாவிலை தோரணம் கட்டும் முறை

சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம் பயன்படுத்துவது ஏன்?

மாவிலை தோரணம் வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும். வீட்டில் நடக்கும் எந்த...
உள்ளங்கை தரிசனம்

காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது

  காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது நாம் ஒவ்வொரு நாள் இரவு தூங்கி எழுவது என்பது இறைவன் நமக்கு கொடுக்கும் வரம் ஆகும். ஒவ்வொரு நாளும் நாம் காலையில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.