அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தின் இராசி : விருச்சிகம்
அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி
அனுஷம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய்
அனுஷம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : லக்ஷ்மி
அனுஷம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : துர்க்கை & காளி
அனுஷம் நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் : தேவ கணம்
அனுஷம் நட்சத்திரத்தின் விருட்சம் : மகிழ மரம் (பாலில்லாத மரம்)
அனுஷம் நட்சத்திரத்தின் மிருகம் : பெண் மான்
அனுஷம் நட்சத்திரத்தின் பட்சி : வானம்பாடி
அனுஷம் நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்

அனுஷம் நட்சத்திரத்தின் வடிவம்

அனுஷம் நட்சத்திரம் அனுடம் என்றும் அழைக்கபடுகிறது. அனுஷம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 17வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘பனை’ என்ற பெயரும் உண்டு. அனுஷம் நட்சத்திரம் வான் மண்டலத்தில் குடம், தாமரை போன்ற வடிவங்களில் காணப்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

அனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்புக்கு அடிமையானவர்கள். குழந்தை மனம் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களை போல் அல்லாமல் சற்று வித்தியாசமான மனநிலையை கொண்டிருப்பார்கள். பசியை பொறுத்து கொள்ள மாட்டார்கள். நிதானமான பேச்சுகளை உடையவர்கள். உண்மை பேசுவதையே விரும்புவார்கள். எதிர்கால திட்டங்களில் விருப்பம் உடையவர்கள். எல்லோரும் விரும்பக்கூடியவர்கள். பெற்றோரை பேணிக்காப்பவர்கள். மிதமான வேகம் உடையவர்கள். நல்ல சொற்களை பேசக்கூடியவர்கள். செல்வம் உடையவர்கள்.

இவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்கள். மேன்மையான பதவிகளை வகிக்கக்கூடியவர்கள். மற்றவர்களின் மனம், குணம் அறிந்து செயல்படுவதில் சிறந்தவர்கள். அவசியம் ஏற்பட்டால் எந்த எல்லைக்கும் போக தயங்க மாட்டார்கள். இவர்கள் நன்கு படித்துத் தேர்ச்சி பெற்றவர்களாகவும், பணம் சம்பாதிப்பதில் சாமர்த்தியமாகவும் இருப்பதுடன், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவியும் செய்வார்கள். இவர்களுக்கு நிரந்தர நண்பர்களோ, அல்லது நிரந்தர உறவுகளோ அமைவதில்லை. தங்கள் இஷ்டப்படி நடப்பதால் அடுத்தவர்களின் அன்பும், ஆதரவும் இவர்களுக்கு கிடைக்காது.

இளம்வயதிலேயே வாழ்க்கை மீது பற்றுவந்துவிடும். அதனால் சிறு வயதிலேயே தொழில் அல்லது வேலை என்று இவர்கள் வாழ்க்கைப் பயணம் ஆரம்பிக்கும். தடைகளை தாண்டும் தைரியமும், வல்லமையும் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு இயற்கையாகவே உண்டு. கடின உழைப்பாளிகள். சகோதர உறவுகள் சரியாக வருவதில்லை. ஏதோ பெயருக்கு இருப்பார்களே தவிர அவர்களால் நன்மைகள் பெற முடியாது. வெளிநாட்டு வாழ்க்கையில் ஆர்வம் கொண்டவர்கள். குறைந்த தன்னம்பிக்கை மற்றும் ஆழ்ந்த அறிவு உடையவர்கள்.

இவர்கள் பல்வேறு கஷ்டங்களை வாழ்வில் சந்தித்தாலும் திருமண வாழ்க்கை திருப்திகரமாக அமையும். இவர்களின் குண நலன்களை புரிந்து கொள்ளும் வாழ்க்கை துணையால் சிக்கலான பிரச்சனைகளைக் கூட சந்தோஷமாக தாண்டிவிடுவார்கள். இவர்களுக்கு பயணங்களில் அதிக இருக்கும். தங்கள் மனதில் ஏற்படும் வலியை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். பொதுவாக இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இவர்களை விடப் பெரிய மனிதர்களாக, உயர்ந்தவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் சிக்கனமாக வாழ்க்கையை நடத்துவார்கள். புண்ணிய காரியங்கள் செய்வதில் விருப்பமுடையவர்கள். எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க என நினைப்பார்கள். இரவு பகல் பாராமல் உழைக்கும் கடுமையான உழைப்பாளிகள். எந்த உயிரினத்துக்கும் தீங்கு விளைவிக்க கூடாது என நினைப்பவர்கள். தர்ம சிந்தனை இவர்களுக்கு மேலோங்கி இருக்கும். நயமாக பேசுவதில் வல்லவர்கள். பிறர் மனம், மற்றும் குணம் இவற்றை அறிந்து அதற்கேற்ப செயல்படுவதில் வல்லவர்கள்.

அனுஷம் நட்சத்திரம் முதல் பாதம் :

இவர்களிடம் அனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் ஆழ்ந்த கூர்மையான அறிவை உடையவர்கள். வைராக்கியம் அதிகம் இருக்கும். நினைவாற்றல் கொண்டவர்கள். ஏட்டறிவு பெறுவதில் ஆர்வம் கொண்டவர்கள். உண்மையை பேச விரும்புவார்கள். இவர்களுக்கு தர்ம சிந்தனை அதிகம் இருக்கும். இவர்களுக்கு தனம்பிக்கை குறைவு. பசியை பொறுத்து கொள்ள மாட்டார்கள்.

அனுஷம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் அனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் அழகாக இருக்க விரும்புவார்கள். கலைகளை ரசிப்பவர்கள். இசையில் ஆர்வம் உள்ளவர்கள். அலங்காரத்தில் விருப்பம் உடையவர்கள். பொறுப்பும், பாசமும் உள்ளவர்கள். வாக்குத்திறமை உடையவர்கள். சிறந்த அறிவாளி, ஆனால் கஞ்சத்தனம் மிக்கவர்கள். பொறுப்புணர்ச்சி அதிகம் கொண்டவர்கள். வாய் சொல்லில் வீரராக இருப்பார்கள்.

அனுஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் அனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். கடமைகளை அறிந்து செயல்படுவார்கள். குடும்பத்தின் கஷ்ட, நஷ்டங்களை அறிந்து நடப்பார்கள். உழைக்க தயங்காதவர்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் விருப்பம் உடையவர்கள். ஞானம் உடையவர்கள். இனிய குரல் உடையவர்கள். சிறந்த கல்வியறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். பாசமாக இருப்பதை விரும்புவார்கள். சுக போகமாக இருப்பதை விரும்புவார்கள்.

அனுஷம் நட்சத்திரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் அனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்களின் வாழ்க்கை போரட்டங்கள் நிறைந்ததாகவே இருக்கும். முன்னேற்றம் என்பது இவர்களின் முயற்சியை பொறுத்தே அமையும். பொதுவாக தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களுக்கு வாழ்கையில் ஏற்ற தாழ்வுகள் அதிகம் இருக்கும். நாணயமானவராக இருப்பர்கள்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

முசுமுசுக்கை கீரை பயன்கள்

சுவாச பிரச்சனைகளை நீக்கும் அற்புத சக்தி கொண்ட முசுமுசுக்கை கீரை

முசுமுசுக்கை கீரை முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக படர்ந்து வளர்ந்திருக்கும். முசுமுசுக்கை செடியின் இலை, மற்றும் தண்டுகளில் சிறிய...
சில்லி சிக்கன் வீட்டில் செய்வது எப்படி

சில்லி சிக்கன் வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி

சில்லி சிக்கன் அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனை வித விதமாக சாப்பிட அதிக ஆர்வம் காட்டுவார்கள். தற்போதைய நவீன உலகில் வித விதமான சிக்கன்...
elumbu theimnaththai sari seyyum unavugal

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள்

எலும்பு தேய்மானம் எலும்புகள் நம் உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. எலும்புகள் நல்ல வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மனிதர்களுக்கு வயது மூப்பு ஏற்படும்போது...
brinjal uses in tamil

கத்திரிக்காய் மருத்துவ குணங்கள் | Brinjal Benefits in Tamil

கத்திரிக்காய் கத்தரிக்காய் செடியின் அறிவியல் பெயர் சொலனும் மெலோங்கெனா ஆகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடி கொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகையாகும். சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற...
எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும்

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்? நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது...
கேச பராமரிப்பு

உங்கள் கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள்

கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள் நம் தோற்றத்தை அழகாக காட்டுவதில் தலைமுடியும் பெரும்பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது. தலைமுடி ஆரோக்கியமாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருந்தால் அது கூடுதல் அழகையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தை...
மிதுன ராசி

மிதுன ராசி பொது பலன்கள் – மிதுன ராசி குணங்கள்

மிதுன ராசி குணங்கள் மிதுன ராசியின் அதிபதி புதன் பகவனாவார். மிதுன ராசியில் மிருகசீரிஷம் நட்சத்திரம் 3, 4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரங்கள் 1, 2, 3 ஆம் பாதங்கள் ஆகியவை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.