உணவு பொருட்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

உணவு பொருட்கள் கனவில் வந்தால்

மனித வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மனிதனால் உணவு இல்லாமல் வாழ முடியாது. அப்படிப்பட்ட உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

சாப்பிடுவது போல கனவு

1. பந்தியில் அமர்ந்து சாப்பிடுவது போல கனவு கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்று அர்த்தம்.
2. விருந்தில் உணவு உண்பது போல் கனவு வந்தால் திருமண தடை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.
3. காப்பி சாப்பிடுவது போலக் கனவு கண்டால் சுபச் செய்திகள் இல்லம் தேடி வரும் என்று அர்த்தம்.
4. இறைச்சி சாப்பிடுவது போல கனவு வந்தால் வியாதிகள் உண்டாகும் என்று அர்த்தம்.
5. மீன் இறந்து கிடப்பது போன்றோ, அல்லது கருவாடு கனவில் வந்தால் பகைவர்களின் தொல்லை ஏற்படும் என்று அர்த்தம்.
6. ஜாம் சாப்பிடுவது போலக் கனவு கண்டால் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெற போவதன் அறிகுறியாகும்.
7. சாதம் சாப்பிடுவது போல கனவு வந்தால் வியாதிகள் உண்டாகும் என்று பொருள்.
8. அரிசி கனவில் வந்தால், நாம் செய்யும் தொழில் மேன்மை அடையும், லாபம் அதிகரிக்கும் என்று அர்த்தம்.
9. காரமான பொருட்களை சாப்பிடுவது போல கனவு வந்தால் உங்கள் உழைப்பிற்கு தகுந்த ஊதியம் அல்லது சன்மானம் கிடைக்கும் என்று அர்த்தம்.
10. கோழி முட்டை கனவில் வந்தால் தொழில், வியாபாரம் சிறந்து விளங்க போவதன் அறிகுறியாகும்.

தேநீர் குடிப்பது போல கனவு கண்டால்11. டீ(தேநீர்) குடிப்பது போல கனவு கண்டால் பிரிந்து போன நண்பர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அர்த்தம்.
12. கோதுமை, அரிசி இவைகளை கனவில் கண்டால் செல்வ செழிப்பு ஏற்படும் என்று பொருள்.
13. முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை உண்டாகும் என்று அர்த்தம்.
14. சூடான பொருட்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் மனதில் நினைத்து கொண்டிருக்கும் வெகு நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்று அர்த்தம்.
15. உப்பு கனவில் வந்தால் பணம், பொருள் நிறைய சேர போகிறது என்று பொருள்.
16. வெல்லம் தின்பது போல கனவு கண்டால் வீட்டில் வறுமை ஏற்படும் என்று அர்த்தம்.
17. புளிப்பான உணவுகளை சாப்பிடுவது போலக் கனவு கண்டால் நமக்கு ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் விலகும் என்று அர்த்தம்.
18. தயிர் சாப்பிடுவது போல கனவு வந்தால் வீட்டில் லக்ஷ்மி கடாஷம் உண்டாக போகிறது என்று அர்த்தம்.
19. பருப்பு கனவில் வந்தால் பகைவர்கள் விலகி ஓடுவார்கள் என்று பொருள்.
20. பட்டாணி கனவில் வந்தால் வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெறும் என்று அர்த்தம்.
21. ரொட்டி (பிரட்) சாப்பிடுவது போல கனவு வந்தால் வீட்டில் வறுமை ஏற்படும் என்று அர்த்தம்.
22. பாயசம் சாப்பிடுவது போல கனவு கண்டால் நன்மைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
23. பால் குடிப்பது போல கனவு கண்டால் செல்வம் சேரும் என்று அர்த்தம்.
24. இஞ்சி கனவில் வந்தால், நோய்களால் பாதிப்பு ஏற்பட போகிறது என்று பொருள்.

இனிப்பு சாப்பிடுவது போல கனவு வந்தால்
25. இனிப்புகள் கனவில் வந்தால் மிகவும் நல்லது. வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்று அர்த்தம்.
26. ஏலக்காய் கனவில் வந்தால் பிறரால் மதிக்கப் பெறும் நிலையை அடைவீர்கள் என்று அர்த்தம்.
27. ஏலக்காய் சாப்பிடுவது போல கனவு வந்தால், மிகுந்த செல்வம் வரப்போவதன் அறிகுறியாகும்.
28. பசியால் வருந்துவது போலக் கனவு கண்டால் வறுமை ஏற்படலாம், செல்வங்கள் கூட கரையலாம் என்று அர்த்தம்.
29. தான் மட்டும் தனியாக சாப்பிடுவது போல் கனவு வந்தால் துன்பங்கள் ஏற்படும். உறவினர்களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்படலாம்.
30. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து விருந்தில் சாப்பிடுவது போலக் கனவு கண்டால், உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மச்ச சாஸ்திரம் என்றால் என்ன

மச்ச சாஸ்திரம் என்றால் என்ன? மச்ச பலன்களை எவ்வாறு கணிப்பது

மச்சம் என்றால் என்ன? நமது உடலில் தலையில் இருந்து கால் பாதம் வரை உள்ள தோலில் அமைந்துள்ள சிறு சிறு புள்ளிகள் தான் மச்சங்கள் ஆகும். இது மஞ்சள், நீலம், சிவப்பு, வெளுப்பு, கருப்பு...
சுவையான மீன் குழம்பு

ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு

ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு மீன் குழம்பு பிடிக்காதவர்களே இருக்க முடியாது. மீன் குழம்பு என்றாலே காரமானதாகத்தான் இருக்கும். அதிலும் ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு என்றால் நல்ல சுவையாக காரசாரமாக இருக்கும். வாங்க...
சுப யோகங்கள்

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் உள்ளதா? யோகங்கள் பகுதி #2

யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் ஒன்றினைவதால் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். அவ்வாறான சில கிரக சேர்க்கைகள் நல்ல பலனையும் தரலாம், அல்லது தீய பலனையும்...
potato uses in tamil

உடலை உறுதியாக்கும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு சோலானம் டியூபரோசம் என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படுத்தபடும், ஒருவகைக் கிழங்கு வகையாகும். உருளைக்கிழங்கு தாவரம் நிழற்செடி குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம்...
ஜாதக யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #7

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து நிர்ணயிக்கபடுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில் எந்த...
prawn podimas

இறால் பொடிமாஸ்

இறால் பொடிமாஸ் தேவையான பொருட்கள் இறால் -1/2 கிலோ வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் கடுகு – ¼ ஸ்பூன் உளுத்தம்...
ஆடாதொடை இலையின் பயன்கள்

நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடாதோடா இலை

ஆடாதோடா இலை மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.