புத்திர தோஷம் ஏன் ஏற்படுகிறது? புத்திர தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம்

திருமணமான அனைவருமே தங்களுக்கு ஒரு வாரிசு பிறக்க வேண்டும் என விரும்புவர். ஒரு சிலருக்கு திருமணமான ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு சிலருக்கு சற்று தாமதமாக குழந்தை பேறு கிடைக்கும். இன்னும் ஒரு சிலருக்கோ குழந்தை பாக்கியம் என்பது எட்டக் கனியாகி விடுகிறது. ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனப்படும் 5ம் இடம் பலமாக இருந்தால் புத்திரபாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

புத்திர தோஷம் நீங்க

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் பலமாக இருந்தால் கண்டிப்பாக புத்திர பாக்கியம் உண்டு. ஒரு சிலர் என்னதான் ஆரோக்கியமாக இருந்தாலும் அவர்களுக்கு நோய் வாய்ப்பட்ட குழந்தைகள் பிறப்பார்கள். பெற்றோருக்கு கடைசி காலத்தில் பிள்ளைகள் கவனிப்பு கிடைப்பது போய் கடைசி வரைக்கும் பிள்ளைகளை இவர்கள் கவனிக்க வேண்டியிருக்கும் இதற்குக் காரணம் புத்திர தோஷம்தான். குழந்தை பிறப்பதற்கு ஜாதக ரீதியாக என்ன காரணங்கள் உள்ளன, அவற்றை எப்படி தீர்க்கலாம் என்பது பற்றி பின்வருமாறு விரிவாக பார்க்கலாம்.

யாருக்கெல்லாம் புத்திர பாக்கியம் கிடைக்கும்

ஜாதகத்தில் 5ல் சூரியன் இருந்தால் ஆண் குழந்தை உண்டாகும். அதுவே சந்திரன் 5ல் இருந்தால் பெண் குழந்தை உண்டாகும். 5ல் செவ்வாய் அல்லது புதன் இருந்தால் வாரிசு உண்டாகும். சுக்கிரன் இருந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி பகவான் இருந்தால் குழந்தை பிறப்பில் தாமதமாகலாம். 5ல் ராகு இருந்தால் நிறைய குழந்தை பாக்கியம் உண்டாகும். 5ல் கேது இருந்தால் புத்திர பாக்கியம் தாமதமாகும்.

புத்திரர்களால் செல்வம், செல்வாக்கு யோகம் யாருக்கு அமையும்?

தந்தையின் லக்னத்திற்கு 5,7,9,10 போன்ற வீடுகளில் லக்னமாக அமைய பிறந்த குழந்தைகள் மற்றும் சூரியன் 6,8,9,12 போன்ற இடங்களில் பலமில்லாமல் பிறந்த குழந்தைகளால் பெற்றோர்களுக்கு யோகம் உண்டாகும்.

சிம்ம வீட்டில் இராகு, செவ்வாய், கேது, சனி போன்ற அசுப கிரகங்கள் இல்லாத நிலையில் உள்ள குழந்தைகள், சூரியன், ராகு இணைந்து சஞ்சரிக்காத நிலையிலும் பெற்றோர்களுக்கு பேரும், புகழும் கிடைக்கும். இது போன்ற நிலைகளில் பிறக்கும் குழந்தைகளினால் பெற்றோர்கள் அனைத்துவிதமான செல்வம், செல்வாக்கு யோகம் பெறும் வாய்ப்புகள் உள்ளது என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

புத்திர தோஷம் நீங்க பரிகாரங்கள்

1. குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்து வழிபட்டால் புத்திர தோஷம் விலகும். முருகனுக்கும், சிவனுக்கும் அபிஷேகங்கள் செய்து வழிபட்டாலும் புத்திர தோஷம் நீங்கும்.

2. ஆறு கார்த்திகை நட்சத்திரங்கள் முருகனுக்கு உகந்தவை. முருகனுக்கு ஆறு முகங்கள் உள்ளதால், சஷ்டி திதி முருகனுக்கு உரியதாக கூறப்படுகிறது. சிவ மைந்தன் முருகனை சஷ்டி திதியில் வணங்கி வந்தால், குழந்தை பேறு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

புத்திர தோஷம்

 

3. எந்தக் கிரகத்தால் புத்திர தோஷம் உண்டானதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புத்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும்.

4. பௌர்ணமி, தமிழ்மாத பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு அன்று அன்னதானம் செய்வதின் மூலமாகவும் வம்சவிருத்தி உண்டாகும். திருவெண்காடு, திருக்கருகாவூர் தலங்களுக்குச் சென்று, உரிய வழிபாடு, பூஜைகள் செய்து வந்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

5. ஏழைக் பிள்ளைகளுக்கு உடைகள், விளையாட்டு பொருட்கள், நூல்கள் வாங்கி கொடுத்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.

6. குலதெய்வ கோவிலில் அவரவரின் ஜென்ம நட்சத்திரம் வரும் தினங்களில் அன்னதானம் செய்து வந்தால் புத்திரத் தோஷம் நீங்கி குழந்தை பேறு கிடைக்கும்.

7. பிரதோஷம் வரும் நாட்களில் அபிஷேகம் செய்து வந்தால் புத்திர தோஷம் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும்.

புத்திர தோஷ பாதிப்பு குறைய செல்ல வேண்டிய கோவில்கள்

1. அருள்மிகு சோமநாதர் திருக்கோவில், நீடூர், நாகப்பட்டினம்.
2. அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில், திருவடிசூலம், காஞ்சிபுரம்.
3. அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோவில், பாரியூர், ஈரோடு.
4. அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர், கரூர்.
5. அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில், உறையூர், திருச்சி.
6. அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோவில், குடவாசல், திருவாரூர்.
7. அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில், இலுப்பைக்குடி, சிவகங்கை.
8. அருள்மிகு வீரசேகரர் திருக்கோவில், சாக்கோட்டை, சிவகங்கை.
9. அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோவில், திருப்பள்ளி முக்கூடல், திருவாரூர்.
10. அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோவில், இடைக்காட்டூர், சிவகங்கை.
11. அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோவில், திருப்பரங்குன்றம், மதுரை.
12. அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோவில், உறையூர், திருச்சி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கனவுகள் உண்மையா

கனவுகள் பலிக்குமா, எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும்

கனவுகள் பலிக்குமா நாம் உறக்கத்தில் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் என்றும் இன்னும் சிலர் மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே...
ராசிக்கல் பலன்கள்

இராசிக்கல் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

இராசிக்கல் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி உண்டு. ஒவ்வொரு அதிபதிக்கும் ஒவ்வொரு ராசிக்கல் உண்டு. ராசிக்கல் அணிவதால் மட்டுமே ஒருவர் வாழ்க்கையில் எல்லா வகையான மகிழ்ச்சியும் அடைய முடியும் என்பது உண்மையல்ல. ராசிக்கல் அணிந்ததால்...
கனப்பொருத்தம் என்றால் என்ன

கணப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

கணப் பொருத்தம் என்றால் என்ன? உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான குணங்கள் வைத்தான் இறைவன். மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே விதமான குணங்கள் இருப்பதில்லை. அந்த குணாதிசயங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த...
ஆண் உடல் மச்ச பலன்கள்

ஆண் உடல் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

ஆண் உடல் மச்ச பலன்கள் எல்லோருக்கும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் மச்சங்கள் இருக்கும். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். அந்த வகையில் ஆணின் உடலில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மச்சங்களின்...
ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன

ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்க்க வேண்டும்

ராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன? ராசி அதிபதி பொருத்தம் என்பது குடும்பம் சந்தோஷமாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் ஆகும். ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும். பிறக்கும் பிள்ளைகள் யோகமாக...
எந்த ராசிக்கு எந்த ஓரைகள்

எந்த ராசிக்கு எந்த ஓரைகள் நன்மை அளிக்கும்?

எந்த ராசிக்கு எந்த ஓரைகள் நன்மை அளிக்கும்? மேஷம் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஓரைகள் மேஷ ராசிக்காரர்களுக்கு  நன்மையை கொடுக்கும். செவ்வாய் மற்றும் குரு ஓரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து...
சர்ப்ப தோஷங்களின் வகைகள்

சர்ப்ப தோஷங்கள் என்றால் என்ன? சர்ப்ப தோஷங்களின் வகைகள்

சர்ப்ப தோஷங்கள் நம்முடைய ஜாதகத்தில் ஏதாவது இரு இடங்களில் ராகுவும், கேதுவும் இடம் பெற்றிருப்பார்கள். அனைத்து கிரகங்களும் ராகு - கேதுக்களுக்கு இடையில் அமைந்து, ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பூரண...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.