பெண் உடல் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் உடல் மச்ச பலன்கள்

மச்சம் ஒருவரின் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று கூறுவார்கள். பெண்களுக்கு எந்த இடத்தில் மச்சம் இருந்தால் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று மச்ச சாஸ்திரம் என்னும் நூல் கூறுகிறது. அந்த வகையில் பெண்களுக்கு உடல் பகுதியில் எந்த பகுதியில் மச்சம் இருந்தால் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பதை பின்வரும் பகுதியில் விரிவாக காண்போம்.

பெண் கழுத்து மற்றும் தோள் மச்ச பலன்கள்

பெண்ணின் வலது கழுத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பிள்ளைகளால் யோகம் உண்டாகும். இவர்களால் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டம் உண்டாகும்.

பெண் உடல் மச்ச பலன்கள்

பெண்ணின் இடது கழுத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.

பெண்ணின் கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் அவர்களுக்கு வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் உண்டாகும்.

பெண்ணின் வலது தோளில் மச்சம் இருந்தால் அவர்கள் தைரியமாக இருப்பார்கள்.

பெண்ணின் இடது தோளில் மச்சம் இருந்தால் அவர்கள் குடும்பத்தை சிறப்பாக நிர்வாகம் செய்வார்கள்.

பெண் மார்பு மச்ச பலன்கள்

பெண்ணின் இடது மார்பகத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் ஓரளவு செல்வாக்கு நிறைந்தவர்களாய் இருப்பார்கள். மேலும் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் இருக்கும்.

பெண்ணின் வலது மார்பகத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் நற்குணங்கள் நிறைந்தவர்களாய் இருப்பார்கள். மேலும் உணர்ச்சிகள் அதிகம் இருக்கும். வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும்.

பெண்ணின் மார்பகங்களுக்கு மேல் மச்சம் இருந்தால் கெட்ட பெயர் ஏற்படும்.

பெண்ணின் மார்பகங்களுக்கு மேலே இடது பக்கம் மச்சம் இருந்தால் அவர்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்வார்கள்.

பெண்ணின் மார்பகங்களுக்கு மேலே வலது பக்கம் மச்சம் இருந்தால் அவர்கள் தாங்கள் கொண்ட இலட்சியத்தை எப்பெற்பட்டவது அடைந்து விடுவார்கள்.

பெண்ணின் நெஞ்சின் இடது பகுதியில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு சரியான காலத்தில் திருமணம் நடக்கும். மேலும் நல்ல கணவன் அமைவான்.

பெண் வயிறு மச்சம் பலன்கள்

பெண்ணின் தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். மேலும் வசதியான வாழ்க்கை அமையும்.

பெண்ணின் தொப்புளுக்கு மேல் மச்சம் இருந்தால் அவர்களுக்கு யோகமான வாழ்க்கை அமையும்.

வயிறு மச்ச பலன் பெண்கள்

பெண்ணின் தொப்புளுக்கு கீழ் மச்சம் இருந்தால் அவர்களுக்கு மன அமைதியின்மை மற்றும் பொருள் நஷ்டம் ஏற்படும். மேலும் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

பெண்ணின் வயிற்றில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு நல்ல குணம், மற்றும் நிறைவான வாழ்க்கை அமையும்.

பெண்ணின் வயிற்றின் இடது பக்கம் மச்சம் இருந்தால் அவர்கள் பொய் பேச மாட்டார்கள்.

பெண்ணின் வயிற்றின் வலது பக்கம் மச்சம் இருந்தால் அவர்கள் எந்த காரியத்தையும் சரியாகச் செய்ய மாட்டார்கள்.

பெண்ணின் வயிற்றின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் பலராலும் பெரிதும் பாராட்டப்படுவார்கள். மேலும் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும்.

பெண்ணின் அடிவயிற்றில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு ராஜயோகம், அம்சம், உயர் பதவிகள் கிடைக்கும்.

பெண் இடுப்பு மற்றும் முதுகு மச்ச பலன்கள்

பெண்ணின் இடுப்பு பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் புகுந்த வீட்டில் வசதிகள் பெருகும்.

முதுகு மச்ச பலன்கள் பெண்கள்

பெண்கள் இடுப்பின் இடது பக்கம் மச்சம் இருந்தால் அவர்கள் பணத்தின் மீது ஆசை உடையவர்களாய் இருப்பார்கள்.

பெண்கள் இடுப்பின் வலது பக்கம் மச்சம் இருந்தால் அவர்களுக்கு தெய்வ பக்தி அதிகமாக காணப்படும்.

பெண்ணின் முதுகு பகுதியில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு செழிப்பான வாழ்க்கை அமையும்.

பெண்ணின் முதுகில் கண்களுக்குத் தெரியாமல் எங்கு மச்சம் இருந்தாலும் அவர்கள் துணிச்சலுடன் இருப்பார்கள். வாழ்க்கை வசதியானதாக அமையும்.

ஆண் பெண் மச்ச பலன்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

riddles and brain teasers

Riddles and Puzzles with answers | Riddles and Brain Teasers with Answers

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
சதுர்த்தி திதி

சதுர்த்தி திதி பலன்கள், சதுர்த்தி திதியில் செய்ய வேண்டியவை

சதுர்த்தி திதி சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்கு...

கடக ராசி பொது பலன்கள் – கடக ராசி குணங்கள்

கடக ராசி குணங்கள் கடக ராசியின் அதிபதி சந்திர பகவானாவார். கடக ராசியில் புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களின் அனைத்து பாதங்களும் அடங்கியுள்ளன. 12 ராசிகளில் இது 2வது சர...
HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...
சுப யோகங்கள்

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் உள்ளதா? யோகங்கள் பகுதி #2

யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் ஒன்றினைவதால் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். அவ்வாறான சில கிரக சேர்க்கைகள் நல்ல பலனையும் தரலாம், அல்லது தீய பலனையும்...
வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது

வாய் துர்நாற்றம் நீங்க நிரந்தர தீர்வு

வாய் துர்நாற்றம் வாய்துர்நாற்றம் பாதிப்பு இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். இதனால் தனது நெருங்கிய துணையுடன் கூட பேச முடியாமல் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். சிலருக்கு வாய் சுகாதாரமாக இருந்தாலும் உண்ணும் உணவில் உள்ள...
மாரடைபிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்

மாரடைப்பு இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது இளம்வயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வேலை மற்றும் குடும்ப சுழல் மற்றும் மாறி வரும் உணவு பழக்க முறையே ஆகும். ஒருவருக்கு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.